குட்டிஸ்களுக்கு ஏற்ற சுட்டி ஸ்மார்ட்வாட்ச்    

0
54
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

மொபைலில், ஆப்ஸ்களில் அப்டேட்டட் வர்ஷன் வருவதைபோல இன்றைய குழந்தைகளும் அப்டேட் வர்ஷனாகவே இருக்கிறார்கள். புதிதாக வாங்கிய ஸ்மார்ட் போனை அப்பா கற்றுக்கொள்வதற்குள் டவுசர் போடாத சுட்டிப்பையன் அநாயசமாக எடுத்து கேம் விளையாடுகிறான்.    எலக்ரானிக் பொருட்கள் உற்பத்தியும் குழந்தைகளை குறிவைத்து நிறைய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவருகிறது.அதில் தற்போது                                                                                                 குழந்தைகளுக்கு என சிறப்பு வகை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியுள்ளது. Mi.com யில் மட்டும் விற்பனையாகும் இந்த ஸ்மார்ட் வாட்ச்யின் விலை ரூ.3000/- என்றவாறு உள்ளது.  குழந்தைகளுக்கு என தயாரிக்கப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்வாட்ச் இது தான்.  மி பன்னி என்ற இந்த ஸ்மார்ட்வாட்ச் GPS மற்றும் க்ளொனஸ், Wi-Fi இணைப்புடன்  வந்துள்ளது. மேலும் பேசுவதற்கு ஏற்ற உள் இணைந்த சிம் கார்டு உள்ளது.  ஆறு மொபைல் எண்கள் வரை இலவசமாக சேமித்து கொள்ளலாம். குழந்தைகள் எங்கும் தவறிவிட்டால் நம் மொபைலில் உள்ள ஆப் முலம் தொடர்பு கொண்டால் போதும் அவர்களிடம் பேசிவிடலாம்.  குழந்தை செல்ல வேண்டிய பள்ளி வழிகள் மற்றும் பிற வழிகளை முன்பே சேமித்து விட்டால் அதற்கேற்ப ஏதெனும் பாதை தவறு ஏற்பட்டால் உடனே நமக்கு தகவல் தெரிவிக்கும்.  குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. மி பன்னி ஸ்மார்ட்வாட்ச்      எல்இடி  டிஸ்பிளே , வாட்டர்ப்ருப், வளைந்த சிலிகான் ஸ்ட்ராப், 300 mAh பாட்டரி  என சிறப்பு வசதிகளுடன் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ios  மொபைல்களுடன் சுலபமாக இணைத்து விடலாம்.  என்ன இந்த birthday க்கு உங்க குழந்தைக்கு என்ன gift வாங்கறதுங்குற கொழப்பம்  இப்ப இல்ல இல்ல.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்