வீட்டிலேயே செய்துகொள்ளுங்கள் இயற்கை பேஷியல்

0

closed_eyesபெருகி வரும் நகரமயமாக்கலில் நாம் நம் சுகாதாரத்தை காப்பாற்றுவது என்பது ஒரு பெரும் சவாலாக இருக்கிறது.  இதில் பெண்களுக்கு என்றால் அவர்கள் தங்கள் சருமத்தையும், முக்கியமாக முக அழகையும் காப்பாற்றும் பெரும் கடமை இருக்கிறது. இன்றைக்கு ஆண்கள் அழகு நிலையங்களே அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் ப்யூட்டி பார்லர்கள் தெருவுக்கு தெரு முலைத்திருப்பது இதற்கான தேவை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது.

இன்று புதிதாக அறிமுகமாகும் ஒரு சோப்பு விளம்பரத்தை கவனித்தால், அவர்கள் முதலில் சொல்லும் ஒரு விஷயம் ”வெய்யினால் கருத்திருக்கும் உங்கள் முகம் மீண்டும் பட்டுபோல் பளபளப்பாகும்” என்பதுபோன்ற வாசகங்கள்தான். முக அழகை பராமரிக்க இன்று பெண்கள் பல்வேறு நடைமுறைகளில் ஈடுபடுகின்றனர். அவற்றில் மிக முக்கியமானது பேஷியல் எனப்படும் முகத்தில் செய்யப்படும் அழகு பராமரிப்பு.

தற்போது பனிக்காலங்களில் முகச்சருமம் மிகவும் வறட்சியாகவும். தோல்பகுதியில் வெள்ளை படிமங்கள் தோன்றும். இதனை போக்க அழகு சாதன கூடங்களுக்கு சென்று முகப்பொலிவு பேஷியல் செய்து வந்தாலும் அவை மறுபடியும் சில நாளில் அதன் பொலிவு குறைந்து விடும். இதனை போக்க நமது இல்லத்தில் உள்ள பொருட்களை கொண்டு சிறப்பான பேஷியல் செய்யமுடியும். வீட்டிலேயே செய்வதேல் இதற்கான செலவும், பார்லருக்கு சென்ரு வரும் நேரமும் நமக்கு மிச்சமாகும். வீட்டில் இருந்தபடியே வார இறுதிநாட்களில் ஹாயாக FMலோ, சிஸ்டத்திலோ மனதிற்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டே செய்துகொள்ளலாம்.

இயற்கையான பேஷியல் செய்வது எப்படி :

face-maskநாம் கடைகளில் கிடைக்கும் இரசாயன முகப்பூச்சுகளை கொண்டு பேஷியல் செய்வதை விட, இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை கொண்டு பேஷியல் செய்தால் நமது சருமம் போஷாக்குடன் திகழ்வதுடன், சிறந்த பொலிவுடன் திகழும். தோலின் இயற்கை தன்மையும் மாறாது. இதற்கான சில குறிப்புட்ட பொருட்கள் சிறந்த பலனை தருகின்றது.

பேஷியல் செய்வது என்பது நான்கு முக்கியமான வேலைகள் சேர்ந்தது. அதாவது சுத்தம் செய்தல், தேய்ப்பது, மசாஜ் மற்றும் மிருதுவாக்கல் போன்றவையாகும்.

homemadefacialmaskமுதலில் நம் முகத்தில் மேல் புறத்தில் படிந்திருக்கும் அழுக்கு, மணல்துகள், தூசு போன்ற மாசுக்களை சுத்தம் செய்ய வேண்டும். நல்ல ஸ்டீமரில் அல்லது கொதிக்க வைத்த நீரில் முகத்தை காண்பித்து ஆவிபிடிக்க வேண்டும். வேர்வையுடன் சேர்ந்து தோலில் உள்ள அழுக்கும் வெளியேறிவிடும். பின் ஒரு மிருதுவான துணியை கொண்டு வேர்வையை ஒற்றி எடுக்க வேண்டும். பிறகு நல்ல கொழுப்புடன் கூடிய பால் 2 டேபிள் ஸ்பூன் அத்துடன் அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணைய் கலந்து ஒரு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாக துடைத்து விட வேண்டும். இதனை செய்யும்போது மெதுவாக அவசரமின்றி பொறுமையாக செய்ய வேண்டும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக முகத்தை கழுவி விட வேண்டும்.

அடுத்து ஸ்கிரப்பிங் அதாவது முகச் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு 2 டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தேய்த்து விட வேண்டும். இல்லையென்றால் பால் கீரிம் உடன் மூன்று பாதாம் அரைத்து கலந்து தேய்த்து விடலாம். எண்ணெய் பசை சருமம் என்றால் தேன் மற்றும் ஓட்ஸ் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முடிந்ததும், மசாஜ் செய்ய துவங்கலாம்.black06

பல்வேறு முக மசாஜ் கிரீம்கள் தயாரித்து விற்கப்பட்டாலும் நாம் வீட்டில் தயாரிக்கும் கிரீம் மிகவும் பாதுகாப்பானது. பப்பாளி பழத்தின் சதைப்பகுதியுடன் பால் கலந்து பசை போன்று ஏற்படுத்தி கொள்ளவும். இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். மசாஜ் செய்ய ஆரம்பிக்கும்பகுதி கழுத்தில் இருந்து தொடங்கி மேலெழுந்துவாராக கன்னப்பகுதிக்கு வரவேண்டும். கன்னத்தில் மசாஜ் செய்ய கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் பயன்படுத்த வேண்டும். கன்னத்தில் விரல்கள் சுழற்சி என்பது வலதுபுறம் மற்றும் இடதுபுறம் என்றவாறு சுழன்று செய்தல் வேண்டும். கண்ணிற்கு கீழ் மற்றும் புருவங்கள், மூக்கு பகுதிகள் போன்றவற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் சருமத்திற்கு அப்ரிகோட் பழத்தின் சதைப்பகுதி தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம்.

Tips-To-Get-A-Basic-At-Home-FacialAshieda-Natural-Face-Maskகடைசியாக முகத்தை மிருது வாக்கல். மசாஜ் செய்து முடித்த பின் இந்த முகத்தின் பூச்சு மீது சூடான டவலை மேல் மூடி சற்று நேரம் பொருத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் முகசருமத்தில் உள்ள துளைகள் திறந்து போஷாக்கு ஏற்பட முடியும். ஃபேஷியல் முடித்து சிறிது நேரம் கண்களை மூடி மனதை ரிலாக்ஸ்டாக வைத்திருக்கலாம். தூக்கம் வந்தால் சிறிது தூங்கலாம்.

எழுந்ததும் உங்கள் முகம் உங்களுக்கே புதிதாக இருக்கும்.

ஃபிரிட்ஜில் கோளாறுகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?

0

FRG1ஃபிரிட்ஜ்  எனப்படும் ரெப்ஃபிரிட்ஜிரேட்டர்  இன்று வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருளாகிவிட்டது. காரணம் அந்த காலம்போல ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக சமைப்பது என்பது இன்று அரிதாகிவருகிறது. அதுவும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கும்பட்சத்தில், அது நடைமுறைக்கு சாத்தியமில்லாததும் ஆகும்.  காலையில் சமைத்த உணவை இரவு வீடு திரும்பும்வரை வைத்திருக்க கட்டாயம் பிரிட்ஜ் அவசியமாகிறது. இன்று புறநகரில் வீடுகள் பெருகி வருகின்றன என்றாலும், அங்கே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு அவர்கள் பக்கத்தில் உள்ள டவுனுக்குத்தான் வரவேண்டியுள்ளது. அதுபோன்ற சூழ்நிலையில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கோ அல்லது ஒருவாரத்திற்கோ சேர்த்து வாங்கி வீட்டில் பத்திரபடுத்த வேண்டியுள்ளது. வீட்டில் பிரிட்ஜ் இல்லாமல் இது சாத்தியமில்லை. அதனால் இன்று புதுவாழ்க்கை தொடங்கும் திருமணத்தம்பதிகளின் சீர்வரிசையில் தவறாமல் இடம்பிடிப்பது இந்த பிரிட்ஜ் என்று சொல்லாம்.

fr4காய்கறிகள் மட்டும் என்றில்லாமல், சமைத்த உணவை கெடாமல் பாதுக்காக்க, குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் , மற்றும்நொருக்கு தீனிகளை வைக்க என்று இவற்றின் பலனும் அதிகமாகவே இருக்கிறது. இப்படிபட்ட ஒரு பொருளை வாங்கும்போது நாம் காட்டும் ஆர்வம் அதை பராமரிப்பதில் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே. பராமரிப்பது என்றால் முன்பக்கம் கரையில்லாமல் பார்க்க அழாகாக துடைத்துவைப்பது என்று மட்டும் நினைத்துவிட்டவேண்டாம். அதை தாண்டி சில விஷயங்கள் இருக்கிறது. அதை தெரிந்துவைத்துக்கொண்டால்,

அவ்வப்போது சிறுகோளாறுகள் ஏற்படாமல் பாதுகாப்பதோடு, அதை சரிசெய்ய ஆகும் செலவை மிச்சப்படுத்தலாம். இதனால் பிரிட்ஜின் ஆயுட்காலமும் நீடித்து நன்கு உழைக்கும்.

எப்படி துடைக்கவேண்டும் எங்கு சுத்தம் செய்ய வேண்டும் :

இல்லங்களில் ஃப்ரிட்ஜ் உபயோகப்படுத்துவோர் இதனை எவ்வாறு பராமரிப்பது என்பதனை அறிவதில்லை. ஃபிரிட்ஜ்ஜில் ஏற்படும் சிறு கோளாறுகளுக்கு நாம் அதனை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் விடுவது தான் காரணம்.

இன்று நவீன தொழில்நுட்பத்தில் கண்டென்ஸ்ர் காயில்கள் வெளியே தெரியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் அநேக இல்லங்கள் பழைய மாடல் பிரிட்ஜ் உபயோகத்தில் இருக்கிறது. அவைகளின் பின் புறம் உள்ள இந்த காயில்கள் வெளிபுற தூசு மற்றும் ஒட்டடை படிந்திருக்கும். dscn7301 அழுScreen-shot-2014-09-18-at-1.44.05-PMக்கான கண்டென்ஸர் காயில்கள் ரெப்ஃரிஜிரேட்டரை அதிக அளவு வேலை அவாங்கும். அதுபோல் அதிகபடியான மின்சாரத்தை உபயோகிக்கும். ஃபிரிட்ஜின் ஆயுள் சீக்கிரம் முடிந்துவிடும். எனவே கண்டென்ஸர் காயில்களை வாக்யூம் கிளினர் கொண்டு மூன்று மாதத்திற்கு ஒரு தடவை சுத்தம் செய்ய வேண்டும்.

மாடல்களுக்கு ஏற்றவாறு காயில்கள் ஃபிரிட்ஜின் பின்புறம் அல்லது அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். அதற்கேற்ப அதனை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். கவனம் இதை செய்வதற்கு முன் பிரிட்ஜின் மெயின் பிளக்கை மின் இணைப்பில் இருந்து  கழற்றிவிட்டு செய்ய வேண்டும்.$_32

அடுத்தாக தண்ணீர் வெளியேறும் குழாய் மற்றும் தண்ணீர் சேரும் பாத்திரம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சில மாடல்களில் வெளியேறும் தண்ணீர் குழாய் மற்றும் அது சேர சிறு தண்ணீர் பாத்திரம் இருக்கும் அந்த குழாய்களில் ஏதேனும் உணவு பொருள் அடைத்திருந்தால் மற்றும் பாத்திரத்தில் உணவு பொருள் படிந்திருந்தாலே. அதிக படியான துர்நாற்றம் அடிக்கும். மேலும் ஃபிரிசர் சரியாக இயங்காது. அதனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

ஃபிரிட்ஜின் குளுமை வெளியேறாவாறு அதனை சுற்றி கேdoorsealஸ்கட் அமைத்து சீல் வைக்கப்பட்டிருக்கும். அந்த கேஸ்கட்டில் ஏதேனும் உடைப்பு, பிளவு ஏற்பட்டிருக்கிறதா என்று சோதித்து அதனை சிறு பஞ்சில் நனைத்த நீர் கொண்டு நன்றாக துடைத்து விடவேண்டும்.

குளுமை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் :

ஃபிரிட்ஜின் டெம்பரேச்சர் அளவு நடுநிலையோடு இருத்தல் வேண்டும். ஃபிரிட்ஜ் 38 முதல் 42 டிகிரி பாரன்ஹீட் அளவு – பிரிசர் 1 to 10 டிகிரி அளவு இருந்தால் போதுமானது. உள்ளே பொருட்கள் குறைவாக இருக்கும்போது குளுமை அதிக மாக இருக்க வேண்டியதில்லை. அது மின்சார இழப்பைத்தான் ஏற்படுத்தும்.

சில நேரங்களில் ஃபிட்ஜ் திறக்கும்போதே துர்நாற்றம்  வீசும், இடை தவிர்க்க கொஞ்சம் கசங்கிய செய்தித்தாள் ஓர் பகுதியில் வையுங்கள், அது துர்நாற்றத்தை கிரகித்து கொள்ளும். மற்றொரு உபாயம், கடையில் கிடைக்கும் பேக்கிங் சோடா பாக்கெட்டை சேலாக  திறந்து ஒரு மூலையில் வைத்தால் துர்நாற்றம் வீசாது.

ஃபிரிட்ஜ் உட்பகுதியில் எந்த விதமான ரசாயனமற்ற பொருள்கள் கொண்டு நன்றாக துடைத்துவிடவேண்டும். ஃபிரிட்ஜ் கதவு நன்றாக மூடி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சிறுகுழந்தைகள் , அவசரத்தில் திறந்து மூடும்போது சரியாக மூட தவறிவிடுவார்கள், அத்தகைய நேரங்களில் காற்று வெளியேறி பிரிட்ஜின் செயல்பாட்டை பாதிக்கும்.

அடுத்து பிரிட்ஜை வைக்கும் இடம். சுவற்றில் மிக நெருக்கமாக ஃபிரிட்ஜ் வைக்கக்காமல் சற்று இடைவெளி விட்டு வையுங்கள். இன்றைய புதிய தொழில்நுட்பத்தில் மின்சார சிக்கன ரெப்ஃபிரிஜிரேட்டர் (ஸ்டார் ரெட்டிங் )வந்த வண்ணம் உள்ளன. சுவற்றில் திறன் அறிந்து அதற்கேற்ப நாம் வாங்கினால் மின்சாரத்தை சேமிக்கலாம்.

வெளியூறுக்கோ , சுற்றுலாவுக்கோ செல்லும்போது பிரிட்ஜில் உள்ள பொருட்களை எடுத்துவிட்டு, சுத்தமாக துடைத்துவைத்துவிட்டு செல்லுங்கள்.

இதுபோன்ற சிறு விஷயங்களை பின்பற்றினாலேபோதும், பிரிட்ஜில் தேவையில்லாத கோளாறுகள் வருவதை தவிர்க்கலாம்.

சர்வ பாக்கியங்கள் அளிக்கும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை

0

satyanarayan-e1429273139251 ஸ்ரீ சத்யநாராயண பூஜை அல்லது சத்யநாராயண விரதம் என்பது பல வீடுகளில் செய்யப்படும் விசேஷ பூஜையாகும். சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிப்படையான சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது, நல்ல வேலை, தொழில் முன்னேற்றம், திருமண நிகழ்வு, குழந்தை பிறப்பு போன்றவற்றை அடைய இந்த பூஜை செய்யப்படுகிறது. மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கும் போன்ற மாநிலங்களில் மிக அதிக அளவில் செய்யப்படும். இந்த பூஜையை மற்ற மாநிலங்களிலும் பலர் செய்து வருகின்றனர்.

         ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னாவரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சத்யநாராயண சுவாமி ஆலயம்.
ஸ்ரீ சத்யநாராயணன் பற்றிய கதை கந்த புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பூஜையை செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கந்த புராணத்தில் கொடிக்கப்பட்டுள்ளது.

     இந்த பூஜை ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பு செய்வது உண்டு. பொதுவாக பௌர்ணமியன்று மாலை வேளையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. சித்ரா பௌர்னமி மிகவும் விசெஷம் என்றாலும் மற்ற  விசேஷ நாட்களிலும் இந்த பூஜையை செய்யலாம். அக்‌ஷய திருதியை நாளிலும் இந்த பூஜையை செய்வது விசேஷமே. குடுப்பத்தில் நல்ல காரியங்கள் நிகழ்வதில் தடை இருந்தாலோ, பொருளாதாரத்தில் தடை இருந்தாலோ இந்த பூஜையை வருடம் முழுவதும் எல்லா பௌர்ணமி, ஏகாதசி போன்ற நாட்களில் செய்து வரலாம்.

  2 ஸ்ரீ சத்யநாராயணா பூஜையை தொடங்கும் முன் விநாயகர் பூஜையையும், நவகிரக பூஜையையும் செய்ய வேண்டும். ஒரு கலசமும் அதன் பின்புறமாக சத்ய நாராயணன் உருவம் சேர்ந்த படத்தை வைத்து இந்த பூஜையை செய்யலாம். படத்திற்கும் பூ கொண்டு அலங்கரித்து வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய் வைத்து ஊதுபத்தி ஏற்றிவைத்து பூஜையை தொடங்க வேண்டும் இந்த பூஜைக்கு தேவையான அர்ச்சனை நாமாவளி, பூஜையின் போது படிக்கும் கதை மற்றும் பூஜை செய்யும் முறைகளெல்லாம் புத்தக வடிவில் கிடைக்கிறது. அர்ச்சனைக்கு பூ, குங்குமம் மற்றும் அட்சதையை உபயோகிக்கலாம். இந்த பூஜைக்கு வறுத்த கோதுமை மாவுடன் நெய்யும் சர்க்கரையும் கலந்து நைவேத்தியமாக படைக்கலாம். கோதுமை பொங்கல் அல்லது அரிசியில் செய்த வெண்பொங்கலையும் நைவேத்தியமாக படைத்து அனைவருக்கும் கொடுக்கலாம்.5

     இந்த பூஜையின் போது படிக்கப் படும் கதைகளில் இருந்து தெரிவது என்னவென்றால் எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத குணம் உள்ளவர்களே வாழ்வில் எல்லா நலங்களையும் பெற முடியும். சத்ய நாராயணன் என்ற பெயருக்கு ஏற்ப சத்தியத்தை கடைபிடித்து வாழ்பவர்களுக்கே சர்வ சௌபாக்கியங்களையும் அளிக்கக்கூடியவராக இந்த கடவுள் இருக்கிறார், உண்மை பேசுபவராக, உண்மையை வழிபடுபவராகவும் இருப்பதே நம் கர்மாக்களை அழித்து வாழ்வில் கஷ்டங்களை போக்கி, தடைகளை அகற்றி நன்மைகளை கொடுக்கவல்லது என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த பூஜை அமைகிறது. உண்மை4யாக வாழ்வதற்கான மனவலிமையையும் ஆற்றலையும் ஸ்ரீ சத்ய நாராயணன் பூஜை கொடுக்கிறது என்பதே உண்மை.

கோடையும் குழந்தைகளும் – ஒரு எச்சரிக்கை

0

summer_kidsமாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஒரு வருடத்திற்குள் நான்கு பருவகாலங்களும் மாறி மாறி வரும் நம் சீதோஷநிலையும் இதற்கு ஒரு உதாரணம். கால நிலைக்கேற்ப நம் உடலும் மாறிக்கொள்ளும் என்றாலும், சிலருக்கு பருவ நிலைகள் மாறும்போது சிலருக்கு தலைவலி, ஜுரம் என்று உடலில் உபாதகளை ஏற்படுத்தும். பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு இது ஒரு பிரச்சனைதான். அதிலும் மு1தல் குழந்தையை வளர்க்கும் தாய்மார்கள் எதற்கெடுத்தாலும் பயந்துகொண்டு குழந்தையை டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அவர்கள் பயம் பல சமயங்களில் தேவையற்றதாக இருந்தாலும், சீதோஷ நிலை மாறும் இதுபோன்ற சமயங்களில் அவசியமானதே. ஏனேன்றால் ஒரு பருவகாலம் மாறிவரும்போது அதனால் எற்படும் மாற்றம் குழந்தைகளை பொதுவாக பாதிப்படைய செய்யும். குழந்தைகளுக்கென்றே சில பருவ கால நோய்கள் காத்திருந்து வந்து தாக்கும். எனவே காலண்டரில் அக்னிநட்சத்திர நாளை தேடாமல் வெயில் சுட்டேரிக்க ஆரம்பித்ததுமே  குழந்தைகளை கோடைக்கால நோய்கள் ஏதும் அண்டாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

கோடைக்காலத்திற்காக காத்திருக்கும் நோய்கள் :

கோடைக்காலம் என்பது குழந்தைகளின் பள்ளிவிடுமுறை காலமாக அமைகிறது. எனவே எப்போது சம்மர் வேகேஷன் வரும் என்று குழந்தைகள் காத்திருப்பார்கள். கூடவே அவர்களுக்கேன சில கோடைக்கால நோய்களும் காத்திருக்கும். நோய்க குழந்தைகள் விடுமுறை காலத்தில் எந்த வெயிலும் எங்களை தாக்காது என்று விளையாடி வீட்டையும், ரோட்டையும் துவம்சம் செய்துவிடுவர். ஆனால் அக்காலத்தில் நோய்தாக்கம் ஏற்பட்டால் குழந்தைகள் மன அளவில் பெரிய பாதிப்பு அடைகின்றனர்.

கோடையின் போது Woman rubbing sore neckதொண்டை வறட்சி, சளி, ஜுரம் போன்ற நோய்களோடு ஒருசில குறிப்பிட்ட நோய்களும் தாக்கூடும். அதவாது வெப்பத்தால் ஏற்படும் மயக்கம், வெடிப்புகள், அலர்ஜி, தண்ணீர் குறைவால் ஏற்படும் நோய்கள், உணவு மூலமாக ஏற்படும் நோய்கள் மற்றும் அம்மை நோய்கள்.

இவைதவிர சூரிய வெப்பத்தினால் உடல்வெம்மை அதிகரித்து மயக்கம், ஜுரம்போன்றவைஏற்படும். அதனைஉடனேஅறிந்து தீர்க்கவேண்டும்.

குழந்தைகள் அதிகமாக மணலில் விளையடுவதன் காரணமாக உடல்வெப்பம் தோலினை தாக்கிகொப்புளங்கள் மற்றுdehydrationம் வெடிப்புகள் உடலின் பலபாகங்களில் ஏற்படும். அதனை சிறு கொப்புளமாக இருக்கும்போதே குறைக்க வழிவகைசெய்யவேண்டும்.

சில குழந்தைகளுக்கு சூரியனினால்அலர்ஜி, மற்றும் வெப்பத்தினால் தோல்பகுதி முழுவதும் வறட்சி, மற்றும் தோல் நோய்கள் ஏற்படும்.

பொதுவாக வெய்யில் காலத்தில் தாகம் அதிகமாக எடுக்கும். தண்ணீரை அதிகமாக குடிக்க சொல்லுங்கள் ஆனால் எங்கும் கிடைக்கும் சுகதாரமற்ற நீரைகுழந்தைகள் பருகிவிட்டால் டைபாய்டு, மஞ்சள்காமாலை, பேதி, இருமல் போன்றவை ஏற்படும்.

நிறையநோய்பரப்பும்பூச்சிகள்வெயில்காலத்தில்பரக்கும். அவைஉணவுபொருள்மீதுஅமர்வதால்நோய்பரவும். எனவேசுத்தமானஉணவுஅருந்தவேண்டும். இல்லையென்றால்புட்பாய்சன்ஏற்படும் ஆபாயம் உண்டு.

வரும்முன் என்ன செய்யலாம் :

சலையோரம் விற்கும் வெட்டிய காய்கறி பழங்களை குழந்தைகளுக்கு வாங்கித்தறாதீர்கள். விலை மலிவாக உள்ளது என சாலை யோரகடைகளில் விற்கும் பழரசங்களையும் வாங்கிதராதீர். பழம் நல்லதுதான் என்றாலும் அவர்கள் உபயோகிக்கும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருக்கலாம். மேலும் அவர்கள் பயன்படுத்தும் மிக்சி, கலக்கும் கரண்டு, பரிமாறும் கண்ணாடி க்ளாஸ் போன்றவை சுகாதார சந்தேகங்களுக்கு உட்பட்டதே.little-girl-drinking-orange-juice_akh3dt

எனவே குழந்தைகள் அடம்பிடித்தாலும், கொஞ்சம் பொருத்திருந்து விட்டிற்கு வந்ததும் நம் வீட்டிலேயேத யாரித்தபழரசம்மற்றும்பழங்களைவெட்டி குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுக்கலாம்..

வெயில் தாக்கத்தை குறைக்க குழந்தைகளை அதிகமாக நீர்அருந்த செய்யுங்கள். அவை நம்வீட்டில் நன்றாக கொதித்த ஆரியநீராக இருப்பதுநல்லது. வெளியே விளையாட சென்றாலும் வீட்டில் இருந்து சுத்தமான தண்ணீர் எடுத்து சென்று பருககுழந்தைக்கு அறிவுறுத்துங்கள்.

அதிகமான தூரத்திற்கு செயலில் பயணிக்க அனுமதிக்காதிர்கள். சிறந்த சத்துள்ள சரிவிகித உணவை குழந்தக்கு சாப்பிடகொடுங்கள்.

எலுமிச்சைசாறு, மோர், இளநீர்போன்ற இயற்கை குளிர்பானம், அருந்தி குழந்தையை உற்சாகப்படுத்துங்கள்.

காலை, மாலை இருவேளை நல்ல சுத்தமான தண்ணீரில் குழந்தைகளை குளிக்கசொல்லுங்கள்.Child-taking-Baths

விளையாட்டு அரங்கில் விளையாடிவிட்டு குழந்தைகள் வரும்போது கை, கால் அலம்பி விட்டு வரச்சொல்லுங்கள்.

சிறந்த இலகுவான பருத்தி ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவியுங்கள்.

நாம் தினம் பழக்கப்படுத்தும் நல்ல விஷயம்தான் குழந்தைகள் செய்யும் எனவே வெயிலின் தன்மை நோய்கள் ஏற்படும் விதம் குறித்து குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்து சொன்னால் அவர்களே அந்த பழக்கங்களை மெல்ல மெல்ல கடைபிடிக்க ஆரம்பிப்பார்கள்.

” பெண்ணே யாமிருக்க பயமேன்” – தற்காப்பு கருவிகள்

0

Road-side-‘ROMEO’-caught-on-camera.-Watch-what-happens-next.இன்றைக்கு பெண்கள் சமூகத்தில் சகல துறைகளிலும் சாதனை செய்கிறார்கள் என்றாலும், இன்னொரு புறம் வீட்டில் இருக்கும் ஒரு பெண் அலுவலகத்திற்கு, கல்லூரிக்கு சென்று பத்திரமாக வீடு திரும்புவது என்பதே ஒரு சாதனையாகத்தான் இருக்கிறது.  வெளியில் தைரியமாக நடமாடும் ஒவ்வொரு பெண்ணிற்கு பின்னாலும் வீட்டில் அவள் தாயின் பையம் அடிவயிற்று நெருப்பாக எரிந்துகொண்டே இருக்கிறது. காரணம் இன்று செய்தித்தாள்களிலும் , சமூக ஊடங்களிலும் பெண்ணுக்கு நேர்ந்த கதி என்ற தலைப்புகளில் வெளிச்சம் போட்டு காட்டப்படும் அவலங்கள் ஏராளம். அதற்காக யாரும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கவும் முடியாதுதான். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பும், தற்காப்பும் கொடுப்பதுதான்.

maxresdefault (1)இன்றைய பெண்கள் தனியாக அலுவலங்களுக்கும், தொழில்ரீதியாகவும், வெளிநாடுகளுக்கும் பயணிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடை, மருத்துவமனை, பார்க் என்றும் செல்லவேண்டியிருக்கிறார்கள். இங்கெல்லாம் சமூக விரோதிகளினால் பலவிதமான தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ஆட்டோ, பஸ், கால் டாக்சி என்று பயணிக்கும் போதும், சுயமாய் கார் ஓட்டிச்செல்பவர்கள் பெரிய கட்டிடங்களின் கார் பார்க்கிங்களிலும் கூட இம்மாதிரியான ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள். தேவை ஏற்பட்டால் பெண்கள் தங்களின் கூறிய விரல் நகங்களை கூட ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று காந்திஜி கூறியிருக்கிறார். ஆனால் இப்போது சந்தையில் பல்வேறு விதமான ஆயுதங்கcrying girlள், ஆயுதங்கள் என்றே தெரியாத வகையில் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்று தெரிந்துவைத்துக்கொண்டால் இளம் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

 

ஸ்டன் கன்:

Stun gun
Stun gun

     இது மின்சாரத்தின் துணைக்கொண்டு தற்காத்துக் கொள்ளும் ஒரு எளிமையான ஆயுதம். இதை ஆபத்து உண்டாக்குபவரின் உடலில் படும்படி பிடித்தவுடன் அதிக வோல்டேஜ் மின்சாரம் குறிப்பிட்ட சில நெடிகளுக்கு அவரின் உடலில் பாய்ந்து செயலிழக்க வைத்து விடும். குறுகிய நேரத்திற்கு எந்த வித நிரந்தர காயமோ, பக்க விளைவுகளோ இன்றி அந்த நபரை செயலிழக்க வைப்பதால் பெரிய அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுமோ என்று பயம் கொள்ளத்தேவையில்லை. எனவே தனியாக ஆபத்தில் சிக்கும் பெண்களுக்கு இது மிகவும் உபயோகமானதாகும். இதை தொட்டவுடன் அரை maxresdefaultநொடியில் கைகளை இழுத்துக்கொள்ளவும், அடுத்த ஓரிரு நொடியில் உடலின் தசைகள் சுருங்கிக் கொள்ளவும், குழப்பமான மனநிலைக்கு செல்லவும் நேரும். 3 முதல் 5 நொடிகளில் கீழே விழுந்து விடவும் நேரலாம். அந்த நேரத்தை பயன்படுத்தி தப்பிச் சென்று விடலாமே.

ஸ்டன் பேட்டன்:

stun baten
stun baten

   இதுவும் ஸ்டன்கன் போன்றது தான் என்றாலும் இதில் கண்களை கூசச் செய்யும் விளக்கு இருக்கும். அதிக ஓளி பாய்ச்சும்போது எதிரி ஒருநொடி என்ன செய்வதென்று புரியாமல் குழப்பதிற்கு தள்ளப்படுவார். அந்த நேரத்தில் அவரை தள்ளிவிட்டு அந்த பெண் தப்பிவிடலாம். பார்ப்பதற்கு ஒரு அழகான பேனா போன்று இது இருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. மேலும் இது மின்சாரத்தில் இயங்குவதால் அவ்வப்போது சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

பெப்பர் ஸ்ப்ரே:

Pepper spray
Pepper spray

         பெயரை படித்தவுடன் இது ஏதோ சமையலுக்கு உபயோகப்படும் பொருள் என்று நினைத்துவிடாதீர். இது மிளகுத்தூள் கொண்டதல்ல ‘ஒலியோரெசின் கேப்சிகம்’ (மிளகாய் போன்ற ஓரு தாவரம்) என்ற பொருளின் வாயுவாகும் ஓசி ஸ்ப்ரே என்றும் இது அழைக்கப்படுகிறது.

  இந்த ஸ்ப்ரேவை அழுத்தும் போது கிட்டத்தட்ட 5 முதல் 7அடி உள்ளவரின் கண்களையும் கூட சென்று தாக்கும். இந்த வாயு பட்டவுடன் கண்களிலிருந்து நீர் வடிய, கண் வலிக்க தற்காலிகமாக பார்வையும் உறைந்து விடும். இது மிகusing-pepper-sprayவும் எளிதாக உபயோகிக்கக் கூடியது மட்டுமின்றி பார்க்க லிப்ஸ்டிக் போலவும் சிறிய பெர்ப்யூம் பாட்டில் பொலவும் கைக்கடக்கமாக இருக்கும்.

பர்சனல் அலாரம்:grlalrm1000032123_-01_red_rainn-personal-safety-alarmசாவிக்கொத்து போல் இருக்கும் இதை பேனாவுடனோ வண்டி சாவியுடனோ, மொபைல் போனுடனோ கோர்த்து வைத்துக்கொள்ளலாம். இதன் பட்டனை அழுத்தியவுடன் பீப் பீப் என்று வீறிட்டு சத்தம் எழ திருடன் பயந்து ஓட வேண்டியதுதான். இதே போன்ற அலார்ம்களை வீடுகளில் ஜன்னல்களிலும், கதPERSONAL-ALARMவுகளிலும் கூட பொருத்திகொள்ளலாம்.

       இம்மாதிரியான சிறு கருவிகளை கையிலோ கைப்பையின் மேலாகவோ வைத்திருக்க வேண்டும். இக்கருவிகள் இல்லையென்றாலும் கூர்மையாக இருக்கும் எந்த ஆயுதத்தையும் உதாரணத்திற்கு தலையில் போடும் க்ளிப் சேப்டி பின், குடை, பேனா என்று எது  கிடைத்தாலும் அதை ஆயுதமாக உபயோகிக்கும் சமயோசிதத்தை ஒவ்வொரு பெண்ணும் கற்று வைத்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் விட மிகப்பெரிய ஆயுதம் தைரியம். மன தைரியத்தை ஒரு போதும் எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடாதிருக்க கற்றுக்கொண்டால் பெண்கள் பாதுகாப்பு என்பது எப்போது அவர்களிடமே இருக்கும்.

இன்வெர்ட்டர் ஏ/சி (A/c) – மின்சாரம் சேமிக்கும் கோடை நண்பன்   

0

           Samsung_New_Air_Triangle_Conditioner          அடிக்கிற வெய்யிலுக்கு படம்புடிக்குதோ இல்லையோ ஒரு ரெண்டுமணி நேரம் ஏசியில உட்காந்துட்டு வரலாம் என்றே திரையரங்குக்கு செல்வோம் இன்று அதிகம். அந்த அளவிற்கு கோடை தன் கைவரிசையை காட்டி வருகிறது. ”வெய்யில்ல எதுக்கு வெளிய அலஞ்சிகிட்டு, பேசாம வீட்லயே இருப்போம்” என்று வீட்டில் விடுமுறையை கழிப்பவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்குமேல் அனல்காற்றின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த நிலமையை சமாளிக்க ஒரு சிறந்த வழி வீட்டில் ஏசி பொருத்திவிடுவதுதா. ஒரு காலகட்டத்தில்  உயர் வருவாய் பிரிவினர் மட்டுமே பயன்படுத்தி வந்த ஏ/சி இன்று நடுத்தர மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வீடு, அலுவலகம் என அனைத்திலும் ஏ/சி யை பொருத்தி பயன்படுத்திவருகின்றனர்.Shopping-Mall-1

           குழந்தைகளுடன் ஷாப்பிங் செல்வோர் முன்பெல்லாம், பெரிய கடைதெருவுக்கு சென்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கடை என்று ஏறி பொருட்களை வாங்குவார்கள். ஆனால் இப்போழுதோ, எல்லோருடைய தேர்வும் பெரிய மால்களாகத்தான் இருக்கிறது. அதற்கு எல்லா கடைகளும் பக்கத்துபக்கத்தில் ஒரே இடத்தில் இருப்பது மட்டும் அல்ல, அங்கிருக்கும் ஏ/சி வசதியும் ஒரு முக்கியமான காரணம்.  வெய்யில் வேர்க்க விறுவிறுக்க அலையாமல் சில்லென்ற காற்றுவாங்கியபடி ஷாப்பிங் செய்ய யாருக்குதான் பிடிக்காது. ஆதனால்தான் இன்று வியாபாரிகளும் உடையகம் முதல் உணவகம் வரை எல்லாவற்றிலும் ஏ/சி வசதியுடன் என்று விளம்பரப்படுத்த தவறுவதில்லை.

fijitsu-family1

நாம் வசிக்கும் வீட்டின்  அறையின் அளவை பொருத்து எவ்வளவு டன் உள்ள ஏ/சி தேவைப்படும் என்று கணக்கிட்டு வாடிக்கையாளரின் தேவை அறிந்து ஏ/சி பொருத்தும் கம்பனிகள் இருக்கின்றனர். சிலர் வீடு முழுவதும்கூட ஏ/ழி வசதி பொருத்திக்கொள்வதும் உண்டு. செலவு என்பது குறிப்பிட்ட மொத்த செலவு ஒரு வருடம் செய்துவிட்டால் போதும், அவ்வப்போது பராமரிப்பு செலவுகள் தான் ஆகும். இன்று ஏ/சிகள் நவீன வடிவில் சிறியதான இடத்தில் பொருத்தி கொள்ள கூடியதாக வந்துள்ளது. முன்பு போல் ஜன்னல் பகுதியில் தான் பொருத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஏ/சியின் இத்தனை வகைகளா :

       ஏ/சி யை  அதன் காற்று வெளியேற்றும் திறன், எடை  பொருத்து வகைபிரிக்க படுகின்றன. 1 டன், 1.5 டன், 2 டன் என்ற அளவுகளில் கிடைக்கின்றன. ஸிபிலிட் ஏசிகள் பெரும்பன்மையாக விற்பனை செய்யப்படுகின்றன.

       மேலும் குளிர்சாதன பெட்டிகள் ஆட்டோமெடிக் தொழில் நுட்பத்துடன் அறை வெப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளகூடிய வகையில் உள்ளன. நம் உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தை உள் வாங்கி அதற்கேற்ப அறையின் தப்ப வெப்ப நிலையை சரிவிகிதமாக வைத்திருக்கும் நவீன தொழில்நுட்பமும் உண்டு.

        நாம் நேரத்தை செட் செய்து விட்டால் அந்த நேரத்தில் தானே இயங்கும்  அல்லது நின்று விடும்  டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் உள்ளன.

அதெல்லாம் சரி கரண்ட் பில்லு எகிறுமே :

      இப்படி கவலைப்படுவர்களுக்காகத்தான் ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மின் வசிறி ஏற்படுத்தும் மின் உபயோகத்தை விட சற்று கூடுதலான அளவு மின்சாரத்தை மட்டுமே செலவு செய்யகூடிய மின் சேமிப்பு குளிர்சாதன பெட்டிகள் உள்ளன். நாம் வாங்கும் குளிர்சாதன பெட்டியின் நட்சத்திர குறியீடுகள் அவற்றின் மின்சாAir Conditioner Labels - Stars_0ர சேமிப்பு திறனை குறிக்கும் குறியீடுகள்..எவ்வளவு ஸ்டார் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு மின்சாரம் சேமிக்கப்படும்.

மேலும் சுற்றுபுற சூழலை மாசுபடுத்தாத புதிய வகை குளிர்சாதன பெட்டிகள் வந்துள்ளன இவை பூமியின் வெப்பத்தை அதிகரிக்காமல் நமது இல்லத்தின் வெப்பத்தை குறைக்கும்.

இன்வெட்டர் ஏ/சி:

 PSU_no_load_5_star_rating_chart  மின் தடை என்பது இப்பொது சகஜமாகி வருகிறது. நம் சூப்பர் ஸ்டார்கள் சினிமாவில் சொல்லும் வசனம் போல் எப்போது வரும் எப்போது போகும் என்றே சொல்லமுடியாதது மின்சாரம்.  அவ்வாறு மின்சார தடை நேரங்களில் பெரியவர்கள் காற்றோட்டமாக வெளியே சென்று தப்பிவிட வழி உண்டு, ஆனால் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் பெண்கள் நிலைதான் மிகவும் மோசம்.  இரவில் என்றால் தூக்கமின்றி நாமும் குழந்தைகளும் பெரிய இன்னல்களுக்கு ஆட்பட நேரும். இத்தகைய பிரச்சனை தீர்க்க நினைத்த குளிர் சாதனை பெட்டி தயாரிப்பாளர்கள் மின்சார தடைநேரத்தில் இயங்க்கூடிய இன்வெர்ட்டர் ஏ/சி யை தயார் செய்துள்ளனர்.

    பெரிய வீட்டில் அனைத்து பகுதியும் இயங்ககூடிய பெரிய இன்வெட்டர்கள் பொருத்தினாலும் வீடு முழுதும் மின்சாரம் கிடைப்பது கடினம். மேலும் இன்வெர்ட்டர் பொருத்த முடியாத வீட்டினரும் தங்களுக்கு என புதிய இன்வெட்டர் ஏ/சி பொருத்தி கொள்ளலாம்.

       இந்த ஆண்டு கண்டிப்பாக என் வீட்டிற்கு ஏ/சி போடுவேன் என் று சபதம் எடுத்தவர்கள் இனி வாங்க போகும் போது இன்வெர்ட்டர் ஏ/சி வாங்கிடலாம்.

       இன்வெர்ட்டர் ஏ/சி ஈ.பி பில்லை பற்றி கவலைப்படாமல் நாம் சில்லென்ற காற்றை அனுபவிக்க நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பட்டு – சேலைகளின் சோலை

0

kanchipuram-silk-sarees-for-weddingஒரு நாட்டின் ஒரு மக்களின் அடையாளமாக சொல்லப்படுவதில் உடைக்கு பெரும்பங்கு உண்டு. அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் அடையாளமாக சொல்லப்படுவது பெண்கள் அணியும் சேலைகள். இன்றைய நவநாகரிக உலகில் படித்த பெண்கள் அணிய என்னற்ற வகை உடைகள் வந்திருந்தாலும், திருமணம், மற்றும் சுப நிகழ்ச்சிகள் என்று வந்தால் பெண்ளின் முதல் தேர்வு புடவைதான். அதிலும் பட்டு புடவைகள்தான். பட்டு புடவைக்கு ஒரு பாரம்பர்யமே உண்டு என்று சொல்லலாம். காஞ்சீவரம், தர்மாவரம், மதுரைச்சுங்கடி, செட்டிநாடு காட்டன் சின்னாளம் பட்டு, கோவைக்காட்டன், ரேஷம் சில்க், மைசூர் சில்க், கசவு சேலை, வெங்கடகிரி, கத்வால், போச்சம்பள்ளி, ஆரணிப்பட்டு, கர்நாடாகாப்பட்டு, நாராயணப்பேட்டை பட்டு, வல்கலம், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

       1 எத்தனையோ பட்டு ரகங்கள் இருந்தபோது, காஞ்சீவரம் பட்டு என்றால் அதற்கு ஒரு தனித்துவமும் பெருமையும் வந்துவிடுகிறது என்பதே பெண்களின் கருத்தாகும். தமிழ் நாட்டில் உள்ள காஞ்சீபுரத்தில் தயாரிக்கப்படும் இச்சேலைகளின் தரத்திற்கும். அழகிற்கும் ஈடு, இணையே இல்லை என்று சொல்லுமளவுகுக்குப் பெயர்பெற்றவை இந்தச் சேலைகள். பெரும்பாலும் தென்னிந்தியாவில் மணப்பெண்கள் இந்தப் பட்டு சேலைகளையே அணிகிறார்கள். கோயில் அமைப்பில் வரும் அழகிய பார்டர்கள் இதனுடைய தனிச்சிறப்பாகும்.madhurai sungudi saress

மதுரை என்றாலும் இன்று பலருக்கும் பல அடையாளங்கள் நினைவுக்கு வரலாம். மதுரை மல்லி, மினாட்சி அம்மன் கோயில், உணவு பிரியர்களுக்கு ஜிகிர்தண்டா, ஆனால் பெண்களுக்கு கட்டாயம் நினைவுக்கு வரும் விஷயம் மதுரைச்சுங்கடி சேலையாகத்தான் இருக்கும். இளம் வயதுப்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்றாற்போல் இந்தச் சேலைகள்  இருக்கின்றன. ப்ளெயின் கலர்களில் கண்ணைக் கவரும் பார்டர்கள் வைத்தும், உடல் முழுவதும் பிரிண்டுகள் போடப்பட்டு, சரிகை பார்டர்கள் வைத்தும் அமர்க்களமாக வருகின்றன இவ்வகைச் சேலைகள். இவை முழுக்க முழுக்கப் பருத்தியால் செய்யப்பட்டவை ஆகும். இந்தச் சேலைகளில் உபயோகப் படுத்தும் வண்ணங்கள் இலைகளிலிருந்தும் செடிகளிலிருந்தும் எடுப்பதால் இவற்றை “ஈகோஃப்ரெண்ட்லி சேலைகள்” என்கின்றனர்.

     cream-kerala-handloom-cotton-kasavu-saree-with-blouse கேரள நாட்டின் பெருமை சொல்லும் கைகளால் நெசவு செய்யப்படும் கசவு சேலைகள் கேரளத்தின் பாரம் பரியமான சேலையாகும். சந்தனம் அல்லது வெள்ளை நிறத்தில் ப்யூர் கோல்டன் லேயர், காப்பர் கோட்டட் அல்லது ஆர்டிஃபிஷியல் சரிகைகளால் பார்டர்கள் நெய்யப்பட்டு அணிபவருக்குப் பளிச்சென்ற தோற்றத்தைத் தருபவை இந்தக் கசவு சேலைகள். வீட்டு விசேஷம் கல்யாணம், பண்டிகைகள் என்று அனைத்திற்கும் கேரளத்துப் பெண்கள் இவற்றைத் தவறாமல் உடுத்திக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு மாநிலத்திற்கென ஒரு தனித்தன்மை இருப்பதுபோல், நம் அண்டை மாநிலமான ஆந்திராவின் வெங்கடகிரி சேலைகள் காட்டன் மற்றும் பட்டில் ப்யூர் வெள்ளி சரிகை மற்றும் ப்ரொகேட் டிசைன்கள் பார்டர்கள் அமைய1ப்பெற்றிருக்கும் ப்ளெஸன்ட்டான நிறங்களில் தங்க நிறத்தில் புள்ளிகள், இலைகள், கிளிகள் அல்லது எளிமையான் ஜியோமெட்ரிகல் டிசைன்களிலும் அழகாக வருகின்றன

           தர்மாவரம், கத்வால், மங்களகிரி, Andhra-Pradesh-Bridal-Sarees-2015-Photosபோச்சம்பள்ளி சேலைகளும் ஆந்திராவில் நெய்யப்பட்டு தனக்கென, ஒரு இடைத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

        EON-Yellow-Mysore-Silk-Silk-SDL396451538-1-798f6

மைசூர் பட்டு கர்நாடகாவின் ஈடு இணையற்ற சேலை எனலாம். மைசூர் பட்டில் ப்ளெயின் கலர், கான்ட்ராஸ்ட் கலர் மற்றும் பிரிண்டட் வேலை செய்யப்பட்டு சுருங்காத பாடர்கள் மற்றும் முந்தியிலும் வேலைப்பாட்டுடன் சரிகை டிசைன்கள் பார்ப்பவரைக் கொள்ளை கொள்கின்றன. மைசூர் பட்டு மிகவும் மென்மையானவை.

mysore silk saree.jpg1சந்தனக் கலரில் மெரூன் பார்டர், மாம்பலக் கலருக்கு பச்சை பார்டர், வெளிர் நீலத்திற்கு கருநீல பார்டர், குங்குமக் கலருக்கு ராமர் கலர் பார்டர் என்று கான்ட்ராஸ்ட் கலர்களிலும், செல்ஃப் கலர்களிலும் கலக்கலாக வருபவை மைசூர் பட்டாகும். இனி மேற்கண்ட ஊர்களில் எந்த ஊருக்கு சுற்றுலா சென்றாலும் தவறாமல் ஒரு பட்டு சேலை பார்சலோடுதான் வருவீர்கள் இல்லையா.

உன்னிக்கிருஷ்ணனுக்கு பெருமை சேர்த்த மகள் உத்ரா  

0

uttara2மதராச பட்டினம்’ ‘தெய்வ திருமகள்’,’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘தலைவா’ படத்திற்கு பின்னர் ‘சைவம்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய, பாடல் ‘அழகே…அழகே.’ ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் அனைவராலும் ரசிக்கப்பட்டு இதயம் தொட்ட இந்த பாடலை பாடியது உத்ரா என்கிற  பத்து வயது சுட்டி பெண். சிறு வயது முதலே கர்நாடக சங்கீதம் பயின்றுவரும் இவர்  நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான பிரபல பாடகர் உன்னிக்கிருஷ்ணன் மகள் ஆவாள்.

14azhagey-azhagey2

hqdefault

\

1994ல் வெளியான காதலன் திரைப்படத்தில் இடம் பெற்ற ”என்னவளே” என்ற பாடல்தான் உன்னிக்கிருஷ்ணன் பாடிய முதல்  திரைப்பாடல். ஏ.ஆர் ரகுமானின் இசையில் கேட்டவரையெல்லாம் மயக்கி முனுமுனுக்க வைத்த அந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. உன்னிகிருஷ்ணனை போலவே அவர் மகள் உத்திரா பாடிய முதல் திரைuni and hin girlபாடலுக்கும் தேசிய விருது கிடைத்திருப்பது ஆச்சரியம்தான் அல்லவா.!

வளம் பல தரும் வைகாசிமாதம்       

0

   karthigai_murugas ஜோதிட ரீதியில் வைகாசி மாதம் என்பது  ரிஷப ராசியில் சூரியன்  சஞ்சரிக்கும் காலம் ஆகும். சூரியன் தனது சொந்த வீடான சிம்ம ராசிக்கு பத்தாம் வீடான ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் இருக்கும் காலமே வைகாசி மாதம். சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் இருப்பதால் அனைவரும் இம்மாதம் நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு உரிய பலனை  வைகாசி மாதம்  நிச்சயம் வழங்கும்.  தமிழ் மாதம் பன்னிரண்டில் நான்கு மாதங்கள் ஸ்திர மாதங்கள் எனப்படும். அதில் முதல் மாதமாய் திகழும் வைகாசி மாதத்தில் நாம் எந்த காரியம் செய்தாலும் அது ஸ்திரதன்மை muruga-vel-aadiபெற்றிருக்கும் என்பது உறுதி. மேலும் வைகாசி மாதம் ரிஷபத்தில் சஞ்சரிப்பதால் அவரது சொந்த வீடான சுக்கிரன் அருளால் செல்வம், வசதி, சந்தோஷம், சுகம் என அனைத்து சுகபோகங்களையும் பெறலாம்.அதன் காரணமாய் தான் வைகாசி மாதத்தில் புதிய தொழில் தொடங்குதல் , திருமணம் , புதுமனைபுகுவிழா போன்றவை அதிகமாய் நிகழ்த்தப்பட்டன.

வைகாசி மாத்த்taking-palதில் முக்கிய விழாவாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் தான் ஆறுபடை முருகன்  சரவணப்பொய்கையில் பிறந்த நன்னாள். முருகனுக்கு மற்றொரு பெயர் விசாகன். வைகாசி விசாகத்தன்று முருகனை வணங்கி விரதமிருந்தால் மணமாகாதவர்களுக்கு திருமணம் நிகழும். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.  ஆறுபடை வீடுகளிலும் அன்றைய தினம் அலகு குத்துவது, பால் காவடி எடுப்பது என பல வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும்.

4 kids kavadi IMG_8544ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் அவதரித்த நன்னாள் வைகாசி விசாகமே. மேலும் வைகாசி மாதத்தில் பல ஞானியர்கள் அவதரித்துள்ளனர். வைகாசி பெளர்ணமி அன்று புத்தர்  அவதரித்தார். அன்றைய தினம் புத்த பூர்ணிமா என்றவாறு கொண்டாடப்படுகிறது. காஞ்சி மகா பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார். எக்குறையுமின்றி விசேஷங்கள் நடத்துவதற்கும், புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற மாதமான வைகாசி மாதம் வளர்ச்சி தரும் வளமான மாதம்.

ஹிப் ஹாப் தமிழா

0

hip hop thamizhaஇந்திய இசைத்துறையில் ஒரு பெரிய சாதனை செய்து, “முதல் தமிழ்” ஹிப் ஹாப் (சொல்லிசை) இசைக்குழுவாக வளர்ந்து நிற்கிறது “ஹிப் ஹாப் தமிழா’. இக்குழுவை ஆரம்பித்தவர்கள் ஆதி மற்றும் ஜீவா என்ற இரண்டு தமிழ் இளைஞர்கள். ”கிளப்புல, மப்புல” என்ற முதல் ஹிப் ஹாப் பாடலை முறையாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே காற்றுத்தீயாய் இணையத்தில் பரவி உலகப்புகழ் பெற்றது. இந்தியாவிலிருந்து வெளியாகி உலகப்புகழ் பெற்ற முதல் ஹிப் ஹாப் தமிழா “ஆகும்”

4
ஜீவாவுடன் ஹிப் ஹாப் ஆதி

1

ஹிப் ஹாப் தமிழா இசைத் தொகுப்பின் 11 பாடல்கள் கீழ் வருமாறு.

 • மனிதன் தமிழன்
 • தமிழன்டா
 • தமிழ் தெரியும்
 • கிளப்புல மப்புல
 • செந்தமிழ் பெண்ணே
 • இனி இல்லையே ஹம்
 • சீப் பாப்புலேரிட்டி
 • இறைவா
 • கற்போம் கற்பிப்போம்
 • ஹே டூ வாட் ஐ ஸே
 • ஸ்டாப் பைரசி
  vlcsnap-error945
  கிளப்புல மப்புல பாடல்

   

  இந்த பாடலை பார்க்க – https://youtu.be/wK7shf-5soU