போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் வாங்குவதை தடுக்க புதிய வசதி

போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் அவர்கள் உடலில் கண்காணிப்பு கமெராவை பொருத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

போக்குவரத்து நெரிசலில் திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுக்கவும், வாகன ஓட்டிகளிடமிருந்து பொலிசார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும் பொலிசார் உடலில் கமெராவை பொறுத்தவுள்ளனர்.

மேலும், அந்த கமெராவில் பதிவாகும் காட்சிகள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் ஜிபிஆர்எஸ் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a Reply