புரட்சி கவிஞர் பாரதிதாசன் – ஏப்ரல் 29 பிறந்தநாள் விழா

0

பாரதிதாசன் 5

 • தமிழ் கவிதை உலகம், பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பெருமை பெற்றது.
 • புரட்சிக் கவிஞரின் வரிகளைப் பேசாத, கேட்காதவாய், செவிகள் தமிழகத்தில் இல்லை. இவர் போன்ற கவிஞர்கள் இதுவரை தோன்றியதில்லை.
 • புரட்சிக் கவிஞர் பாடாத பொருள் இல்லை. காவியம், காப்பியம், இயற்கை, மொழி, வடவர், சுரண்டல், பகுத்தறிவு, தன்மானம், மானவாழ்வு, சமத்துவம், இயற்கை, அழகு, மலையருவி, பெண் கல்வி, காதல், தலைவர்களின் சிறப்பு பக்தராய் இருந்தபோது பாடிய கடவுள் பாடல்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
 • உலகப்பன் பாடல் ஒன்றுபோதும் அவர் மானுட சமத்துவத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம்.
 • நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாய் செய்த ஆசிரியப் பணியில் எத்தனையோ இடர்பாடுகள் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் நிரந்தர பணி நீக்கம் அதை எதிர்த்து பிரெஞ்சு தலைமை நீதிமன்றத்தில் வழக்கிட்டுப் போராடி மீண்டும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 • தன் மூத்தமகள் பள்ளிக்குச் செல்லாமல் பள்ளிச் சீருடையோடு அழுது அடம்பிடிக்க மனைவி பழனியம்மாள் புரட்சிக்கவிஞரிடம் மகளைச் கண்டித்து பள்ளிக்கு போகச்சொல்லுங்கள் என்கிறார். இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே சென்று அதே வேகத்தில் கவிதையோடு வெளியே வருகிறார். அந்தக் கவிதைதான் “தலைவாரிப்பூச்சூடி உன்னை” என்ற புகழ் மிக்க கவிதை.
 • 1928-ல் பச்சை அட்டைக் குடியரசு வாசித்ததன் மூலம் பெரியாரையும் அவர் கொள்கைகளையும் நேசித்தார் பின்பு சுவாசித்தார்.
 • புரட்சிகவிஞர் என்ற இந்தக் கவிவேழம் பெரியார் என்ற அங்குசத்திற்கு மட்டுமே அடங்கியது.
 • 1933-ல் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டான ம.வெ. சிங்காரவேலு நடத்திய நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு தான் ஒரு “நிரந்திர நாத்திகன்” என்று கையெழுத்திட்டுப் பதிவு செய்தார்.
 • புரட்சிக் கவிஞரின் கவிதைகளை தொடுத்து முதலாவதாக “பாரதிதாசன் கவிதைகள்” என்று அச்சிட்டு புத்தகவடிவில் கொண்டு வந்தது குத்தூசி குருசாமி குஞ்சிதம் குருசாமி ஆகியோர்தான். வடவர் ஆதிக்கம் பற்றி கவிதை எழுதியதாலோ என்னவோ டெல்லி “இலக்கியவாதிகள்” இவரது கவிதைகளை கண்டுகொள்ளாமல் அவர் மறைவிற்குப் பிறகு பிசிராந்தையார் நூலுக்கு சாகித்திய அகாடமி விருந்தளித்தனர்.
 • அண்ணா, கலைஞருக்கு முன் திரைப்படத்திற்கு கவிதை வசனம், பாடல்கள் எழுதச் சென்ற முதல் திராவிடர் இயக்கக் கவிஞர் பாரதிதாசன். இன்றைக்கும் இவரின் திரைப் பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
 • பாரதிதாசன் பரம்பரைச் கவிஞர்கள் என்று ஒரு பெரிய கவிப்பட்டாளமே புரட்சிக் கவிஞரின் பாணியைப் பின்பற்றி கவிதையினை எழுதிப் பெரும் புகழ் பெற்றனர்.
 • அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் பேராசிரியர் அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் பல அரசியல், சமூக, நட்சத்திரப் பேச்சாளரெகள் புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டாமல் பேசுவது மிகவும் குறைவு.
 • பாரதியாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசாலாம். ஆனால் பாரதிதாசனைப் பற்றிப்பேச அவரது கவிதைகளை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதற்கும் ஒரு துணிவும் வேண்டும்.
 • 1944-ல் சிறுகதைக்குப் புகழ் பெற்ற புதுமைப்பித்தன் பாரதிதாசன் பற்றி எழுதிய ஓர் அரிய கட்டுரையை தேடிப் பிடித்து வாசித்தால் பாரதிதாசனின் பெருமைகள் புலப்படும். பாரதியார் எழுதிய கவிதைகளில் முக்கியமானவை பாரதிதாசன் என்று அவரை கவிதைகளில் முக்கயிமானவை பாரதிதாசன் என்று அவரை கவிதையாகவே வர்ணித்திருப்பார்.
 • “இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”

” தூண்டா விளக்காய்த் துவங்கும் பொருமாட்டி”

“கிளம்பிற்றுக்காண் தமிழ்ச்சிங்கச் கூட்டம்

கிழித்தெறியதுத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை”

“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது

சிறுத்தையே வெளியில் வா”

மேற்கண்ட கவிதை வரிகளை படித்தோ அல்லது யார் மூலமாவது கேட்காதவர்கள். தமிழ் நாட்டில் யாரும் இல்லை.

 • பாரதிதாசன், கேஎஸ், பாரதிதாசன். கே.எஸ். ஆர். புதுவை கே.எஸ்.ஆர்.நாடோடி வழிப்போக்கன் அடுத்த வீட்டுக்காரன் சுயமரியதைக்காரன், வெறுப்பன், கிறுக்கன், கிண்டல்காரன், அரசு, கைகாட்டி, கண்டெழுதுவோன், என்ற பெயர்களிலும் வேறு.

சில பெயர்களிலும் கவிதை கதை கட்டுரைகள் எழுதித் தமிழர்களைத் தம் பால் ஈர்த்தார்.

 • புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் அவைத் தலைவராகவும் பணியாற்றினார்.
 • புரட்சிக் கவிஞர் என்று தந்தை பெரியாரும். புரட்சிக் கவி என்று அண்ணாவும் அழைத்தனர். அவரது கவிதையால் ஊக்கம் பெற்ற தமிழர்கள் இன்றும் அவர் புகழ் பாடுகிறார்கள் என்றால் அவரின் கவிதைத் தாக்கத்தின் வீச்சு எப்பேற்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாழ்க புரட்சிக் கவிஞர் !

தாய்மார்களின் முதல் தேவை?

0

expert-motherதாய்மார்கள் அனைவரும் குடும்பம், வீட்டை பராமரிப்பது, சில சமயம் வீட்டைத் தவிர அலுவலகப் பணி என அனைத்தையும் கையாள்வது சற்று கடினமான விஷயம். இதன் காரணமாய் தாய்மார்கள் நாள்முழுவதும் கவனத்துடன் மற்றும் உள்நோக்கத்துடன் பணிபுரிவது கடினமே. பெரும்பாலும் இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், போன்றவைகளுக்கு உள்நோக்கம் எனும் ஊக்குவித்தலே நல் உதவி புரிகிறது. சில சமயம் இந்த ஊக்குவித்தல் தாய்மார்களுக்கு குறைந்துவிடுகிறது அவ்வாறு குறையும்போது அதை தடுக்கும் சில வழிமுறைகள்.

நமது செயல்களை என்ன, எப்படி என்பதை ஊக்குவித்தலே தீர்மானிக்கிறது :mother_son1

நிறைய நேரங்களில் நல்ல ஊக்குவித்தலுடன் இருக்கும்போதே மனம் தெளிவுடன், திறந்த நிலையில் நல்ல செயல்களை செய்திட உதவும். இதனை பல அன்னையர்கள் மிக சுலபமாக செய்துவிடுகின்றனர். அதாவது, தினமும் இரவில் தூங்கும்முன் தன் குழந்தை மறுநாள் காலை பாத்ரூம் செல்வது முதல் அன்றைய நாள் முழுவதற்குமான பணிகளை பட்டியலிட்டு செய்கின்றனர். இது எப்படி முடிகிறது என்றால், நம்மை நாமே ஊக்குவிப்பதன் மூலமே. இதன் மூலமே அதிக நாட்கள் தாய்மையுடன் கவனிப்பு நிகழ்கிறது.

குறிக்கோள் :

ஊக்குவித்தலின் ஒரு முக்கிய பங்கு குறிக்கோள். நமக்கு என்ன தேவை அல்லது என்ன செய்யப்போகிறோம் என எதனையும் செய்யும் முன்பு நன்றாக புரிந்துகொண்டு செய்தல் வேண்டும். குறிக்கோள் ஒன்றே நமது மனநலனை தெளிவடைய செய்து நாம் வெற்றியை பெறுவதற்கு உதவி செய்கிறது.

உங்கள் பணிகளை பட்டியலிட்டுக்கொள்ளுங்கள் :

உங்கள் இலக்குகள், வேலைகள், பணிகளை ஒரு பட்டியலாக தயார் செய்துகொள்ளுங்கள்.இது அந்த நாள் முழுவதும் கவனுத்துடன் பணிகளை வெற்றிகரமாக முடிக்க உதவும். ஒரு இலக்கை முடித்தவுடன் அதனை டிக் செய்து கொள்ளுங்கள்.  அன்றையநாள் பட்டியலை முடித்து இரவில் பார்க்கும்போது அதுதான் உங்களது அடுத்தநாள் இலக்கை அடைய செய்வதற்கான உத்வேகமாகவும் ஊக்குவிப்பாகவும் இருக்கும்.

தள்ளிப்போடவேண்டாம் :

பணிகளையும், வேலைகளையும், சரிவர கவனிக்காதபோது உங்கள் இலக்கை அடைய முடியாது. எப்போதும் ஊக்குவிப்புத் தருபவை பணி முடிப்பு மட்டுமே. வேலைகளை தள்ளிப்போடும்போது கடைசிநேரத்தில் அவைகளை ஒட்டுமொத்தமாக செய்ய வேண்டிவரும் இதனால் ஊக்குவிப்பு குறையும். இதனை தவிர்க்கவும்.

அனைவருடன் கலந்துபேசுங்கள் :discusse

தாய்மார்கள் தங்கள்  கவலைகள் மற்றும் உணர்வுகளை மனத்திற்குள்ளேயே பூட்டிவைப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடிவதில்லை. உங்கள் மனதில் உள்ள விஷயங்களை நண்பர், கணவர், அல்லது சிறந்த நிபுணர்களுடன், கலந்துரையாடுங்கள். பல தாய்மார்கள் சமூக செய்தி தளங்கள் மூலம் தங்கள் கவலைகளை பகிர்ந்ததன் மூலம் சிறப்பான நன்மைகளை பெற்றுள்ளனர்.

உடற்பயிற்சி :gallery-1452181976-gettyimages-132455903

உடற்பயிற்சி தாய்மார்களின் இலக்கை நோக்கி பயணிக்க சிறந்த ஊக்குவிப்பாக திகழ்கிறது. இதற்கு குறைந்த நேரமே போதுமானது. உடற்பயிற்சியின்மூலம் மனமும் உடலும் நல்ல உத்வேகத்துடன் செயல்படும்.

சிறந்த உணவை சாப்பிடுங்கள் :woman-breakfast-main

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை கவனிக்கிறேன் என்று தங்களுக்கு தேவையான உணவை சரிவர எடுத்துக்கொள்வது கிடையாது. இதன்மூலம் அவர்களின் உடல்நலம் பாதிக்கும். தாய்மையின் லட்சியங்களை அடைய நல்ல உடல்நலமும் அவசியம் எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். இதன்மூலம் அன்னையர் ஊக்குவிப்புடன்,உத்வேகத்துடன் நாள்முழுவதும் செயல்படலாம்.

உங்கள் குழந்தை நன்றாக படிக்க வேண்டுமா…..

0

2என் குழந்தை சரியாக படிக்க மாட்டேன் என்கிறான். ஸ்கூலில் டீச்சர் சொல்லிக்கொடுப்பதை .ஒழுங்காக படிப்பதோ எழுதுவதோ இல்லை. கையெழுத்து சரியாக இல்லை. இது போன்ற குற்றச்சாட்டை சொல்லாத பெற்றோரே இன்று இல்லை. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு எற்படும் கற்றல் குறைப்பாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளாததேயாகும்.

டிஸ்லேக்சியா

            இது பள்ளி செல்லும் குழந்தைகள் படிப்பில் மந்தமாகவோ. மதிப்பெண் குறைவாகDyslexia-Support-Lindsey-Lவோ எடுக்கும்போது தெரியவரும் ஒரு பிரச்சனையாகும், படிப்பதில் (டிஸ்லெக்சியா). எழுதுவதில் (டிஸ்க்ராஃப்பியா). கணக்கில் (டிஸ்கால்குலியர்) என்று ஏதாவது ஒன்றிலோ ஒன்றுக்கு மேற்பட்டதிலோ இவர்களுக்கு பிரச்சனை இருக்கும். இப்பிரச்சனை 2 முதல் 10 சதவிகித பள்ளிக்குழந்தைகளிடம் காணப்படுவதாகும். நரம்பியல் தொடர்பான இப்பிரச்சனையை சில சிறப்பு பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும் என்பது நம்பிக்கை தரும் உண்மை.

            படிப்பதில் சிரமம் உள்ளவர்கள் வார்த்தைகள் கண்டுபிடிப்பதிலும், புரிந்துக்கொள்வதிலும், வேகமாக படிப்பதிலும் கஷ்டப்படுவார்கள். வார்த்தைகளை தலைகீழகாவோ, மாற்றியோ, ஒரு வார்த்தையை விட்டு விட்டோ, ஒரு அடியையே விட்டு விட்டோ படிப்பார்கள்.

            எழுதுவதில் சிரமம் உள்ளவர்கள் (டிஸ்கிராஃ;பியா) மோசமான கையெழுத்துடனோ, எழுத்துப்பிழையிடனோ, மெதுவாக எழுதுபவர்களாகவோ, இலக்கணப்பிழையுடன் எழுதுபவர்களாகவோ, எழுதும் கை வலிப்பதாக அடிக்கடி கூறுபவர்களாகவோ இருப்பார்கள்.

            கணக்கில் சிரமம் உள்ளவர்கள் (டிஸ்கால்கூலியா) கணித விதிகளை ஞாபகம் வைத்துக் கொள்வதிலோ, புரிந்துக் கொள்வதிலோ சிரமப்படுவர். எண்களை சரியாக புரிந்துக்கொள்ள முடியாமலும், கூட்டுவது கழிப்பது போன்றவைகளை மாற்றி செய்பவர்களாகவோ இருப்பர்.

           3 பொதுவாக இம்மாதிரி பிரச்சனை உள்ள குழந்தைகள் ஓரிரு விக்ஷயங்கள் தவிர மற்றவற்றில் பிரச்சனை இன்றியும் அல்லது படிப்பில் வேறு ஏதாவது ஒரு துறை மித மிஞ்சிய திறமை உள்ளவர்களாவே கூட இருப்பர். உலகின் பிரபல விஞ்ஞானிகள், மேதைகள், அரசியல் பிரமுகர்கள், பெரிய செல்வந்தர்களுக்கும் இப்பிரச்சனை இளம் வயதில் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

            படிப்பில் எங்கு குழந்தைக்கு பிரச்சனை இருக்கிறது என்பதையே தெரிந்துக் கொள்ளாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் படிக்கவில்லை என்று குறை கூறுவதும், திட்டுவதும் அடிப்பதும் மட்டுமின்றி மற்ற நார்மலான குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசி அவமானப்படுத்தும்போது இக்குழந்தைகள் மேலும் மோசமான நிலைக்கே தள்ளப்படுகிறார்கள்.

            ஆனால் இன்று இக்குழந்தைகளுக்கென பிரத்தியேக பள்ளிகளும், முறைகளும், இதற்கென இவர்களுக்கேற்ற முறையில் பயிற்சியளிக்கக்கூடிய பயிற்சியாளர்களும், கல்வியாளர்களும் இருக்கிறார்கள் என்பதே பல பெற்றோர்க்கும் ஏன் ஆசிரியர்களுக்குமே கூட தெரியாத உண்மையாகும், மனநல ஆலோசர்களின் பங்கும் இதில் முக்கியமானது, டிஸ்லெக்சியா குழந்தைகளின் பிரச்சனையை ஸ்க்ரீனிங், அசெஸ்மென்ட் டெஸ்ட்கள் மூலம் துல்லியமாக கண்டறிந்து அறிக்கை அளித்தல், அவர்களின் தன்னம்பிக்கையைத்தூண்டி மன அழுத்தத்தை குறைத்து, பெற்றோருக்கு கவுன்சிலிங்  கொடுப்பது போன்றவற்றை மனநல ஆலோசகர் செய்வதுடன் அவர்களை அதற்கான பிரத்தியேக பள்ளியில் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செல்லவும் பரிந்துரைக்கிறார்.

          6  ஒவ்வோரு பள்ளியிலும் மனநல ஆலோசகர் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பிரச்சனை உள்ள குழந்தைகளை சோதித்து அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கு கவுன்சிலிங் கொடுத்து சிறப்பு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.

       ப்ரச்சனையை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கான தீர்வை மேற்கொண்டால், பெற்றோர் குழந்தை உறவும் மற்றும் ஆசிரியர் மாணவர் உறவும் இனிமையாக இருக்கும்.

குண்டாக இருந்தாலும் நன்றாக சாப்பிடலாம்

0

diet-exerciseஇன்றைய தலைமுறை இருந்த இடத்திலிருந்தே கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் சகல வேலைகளையும் செய்யும் 4G தலைமுறை. உடல் உழைப்பு குறையும்போது உணவும் குறையவேண்டும் என்றால் ஏன்? என்று புருவம் தூக்குவார்கள். அப்புறம் தன் உடலை தானே தூக்க முடியாமல் திணறுவார்கள். குண்டானவர்களை, கள்ளம் கபடமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், ச்சப்பி, புஸ் புஸ், என்று நாம் செல்லமாக கொஞ்சினாலும், அதன் கஷ்ட நஷ்டங்கள் சம்மந்தபட்டவருக்கே தெரியும். சக நண்பர்களின் கிண்டல், பொது இடங்களில் கேலி பார்வை என்று ஆண்களுக்கே கஷ்டங்கள் நிறைய இருக்கும்போது, பெண் என்றால் கேட்கவே வேண்டாம். ஜோதிகாவையும், அனுஷ்காவையும் குண்டானாலும் அழகு என்று ரசிப்பவர்கள், வீட்டில் உள்ள அக்காவோ தங்கையோ குண்டாக இருந்தால் அதை கேலியாகத்தான் பார்க்கிறார்கள்.

சரி நான் குண்டாகத்தான் இருக்கிறேன் ஒல்லியாக வேண்டாம், எல்லோரையும் போல் கொஞ்சம் எடை குறைவாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும், அதற்கு என்ன பண்ணலாம், செய்ய முடிந்ததாக சொல்லுங்கள் என்றீர்கள்தானே! இதோ உங்களுக்குதான் இது. தொடர்ந்து படியுங்கள்.

பட்டினி கிடக்கலாமா :eating

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளூங்கள், உணவு கட்டுபாடு என்றால் பட்டி கிடப்பது அல்ல. உங்களுக்கு பிடித்த உணவை வீட்டிலோ அல்லது கல்யாண விருந்திலோ பார்க்கும்போது சாப்பிட ஆசையாக இருந்தால் சாப்பிடுங்கள். ஆனால் சிறிதளவு ருசிக்காக மட்டும் அளவாக சாப்பிடுங்கள் . சிலர், உடல் இளைக்கவேண்டும், டையட்டில் இருக்கிறேன் என்று கட்டுப்படுத்திக்கொண்டு கஷ்டப்படுவார்கள். பின் திடீரென்று ஒருநாள் அவர்களையும் மீறி அதே உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு விளைவுகளால் அவதிப்படுவார்கள்.

இன்னும் சிலர் மதிய உணவை எடுத்துக்கொள்ளாமல், அதற்கு பதில் மாலைவேலையில், சிற்றுண்டி என்ற பெயரில், வடை, போண்டா, சமொசா என்று எண்ணை பொருட்களை சாப்பிடுவார்கள். கூடவே தேநீர் அருந்தும் பழக்கமும் நிறைய பேருக்கு இருக்கும். இது எந்த விதத்திலும் உங்கள் உணவு கட்டுப்பாட்டில் சேராது. மதிய உணவை தவிர்ப்பது, அல்சர் போன்ற பின்விளைவுகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், வீட்டிற்கு சென்றதும் மதியம் சாப்பிடவில்லை என்ற நினைப்பில் இரவு உணவை வழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதுவும் அஜீரம் தூக்கமின்மை போன்ற பிரச்சனை ஏற்படுத்தும். எனவே அளவாக சாப்பிடுவதுதான் கட்டுபாடே ஒழிய முற்றிலுமாக தவிர்ப்பது அல்ல.

Progressive-weight-loss

இண்ட்ரவல் சாப்பாடு :

நமது அன்றாட வாழ்வில் உடலுக்கு தேவையான மாவுசத்து, கொழுப்பு சத்து, மற்றும் புரோட்டீன் இவை மூன்றும், பெரு நுண்ணூட்ட சத்துக்கள் (மேக்ரோ நியூட்ரியன்ஸ்) என்று அழைக்கப்படுகின்றன. காரணம் நமது உடல் இயக்கத்திற்கு இவை அனைத்தும் அதிக அளவில் தேவைப்படுகின்றன. உணவு கட்டுபாடு என்று இவைகளை முற்றிலும் தவிர்த்தால், அது உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

டயட்டில் இருக்கும் நபர்கள், உடல் எடை குறைந்தால் உடனே தங்கள் முயற்சி பலனளித்ததாக சந்தோஷப்படுவார்கள், உடல் எடை குறைவது மட்டும் ஆரோக்கியம் அல்ல, அது உங்கள் உடலுக்கு தேவையான மேற்சொன்ன மூன்று அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்காமல் போவதின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். சராசரியாக ஒரு நபருக்கு ஒருநாளைக்கு 1,200 கலோரிகள் தேவை. முறையான உணவு பழக்கத்தினால் இந்த அளவை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி , மொத்தமாக சாப்பிடாமல், 2 மணிநேர்த்திற்கு ஒருமுறை என்று கொஞ்ச கொஞ்சமாக சாப்பிடுவர்கள் இருக்கிறார்கள். இது நல்ல யோசனைதான். ஆனால் 2 மணிநேரம் ஆகிவிட்டது என்பதற்காக கடனே என்று நீங்கள் எதையாவது சாப்பிட தேவையில்லை. பசி இருந்தால் மட்டுமே சாப்பிட்டால் போதும்.

நன்றாக பசி எடுத்து பின் சாப்பிட அமரவேண்டும், பசி முழுவதும் அடங்குவதற்குள், கொஞ்சம் காலி வயிருடனே எழுந்துகொள்ளவேண்டும் இது நம் முன்னோர்கள் சொல்லிவைத்தது. அது எவ்வளவு பலனுள்ளது என்று நீங்கள் கடைபிடித்து பார்த்தால் புரியும்.

பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் – அழகும் கம்பீரமும் ஒருங்கே

0

Jaipur HD wallpapers 1கோடைக்காலத்தை சுற்றுலா காலம் என்றும் சொல்லலாம். இந்த விடுமுறைக்கு எங்கு செல்வது என்று யோசிப்பவர்களுக்கு ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்பூர் நகரத்தை பற்றி தெரிந்தால் நிச்சயம் அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றும். சுற்றுலா என்பது ஏதோ ஒரு இடத்தை முடிவு செய்து மற்றவற்றை அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டு போனோம், தங்கினோம், சுற்றினோம் என்று வரக்கூடாது. ஒரு ஊருக்கு செல்வதற்கு முன் அந்த ஊரைப்பற்றிய அடைப்படை விஷயங்கள், சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள், சிறப்புகள் என்று தெரிந்து வைத்துக்கொண்டு போனால் அது நம் பயணத்தை எளிதாக்குவதோடு,  நம் சுற்றுலா அனுபவத்தை இன்னும் சுவாரசியமானதாக்கும். சரி ஜெய்பூர் என்றவுடன் சில சினிமா பாடல்களில் சிவப்பு சிவப்பாக பெரிய கோட்டைகளை பார்த்த ஞாபகம் வருகிறதா. அந்த கோட்டைகளுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொண்டால் நேரில் சென்று பார்க்கும்போது இன்னும் அழகாக அர்த்தமுள்ளதாக இருக்கும்.jaipur Rajmahal palace

இந்தியாவின் மிகப்பழமையான அழகிய, அற்புதமான நகரமான ஜெய்பூர் தன் அடையாளமாக திகழும் அந்த சிவப்பு கோட்டைகளால் “இளஞ்சிவப்பு நகரம்” என்று அழைக்கப்படுகிறது. 1876-ம் ஆண்டு இரண்டாவது சவாய் ஜெய் சிங் அவர்கள் வேல்ஸ் இளவரசரை தன் நகரத்திற்கு வரவழைத்தார். அந்த நேரம் முழு நகரமே இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது. அன்றிலிருந்து ஜெய்ப்பூர் நகரம் உலகளவில் “பிங்க் சிட்டி” என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

மிதமான பாலைவன பிரதேசத்தில் அமைந்துள்ள ஜெய்பூரில் ஆடம்பரமான அரண்மனைகள், கம்பீரமான கோட்டைகள், ஹவேலி மாளிகைகள் என்று உலகெங்கிலும் சுற்றுலா பிரியர்களை தன்னகத்தே கவர்ந்திழுப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

வாஸ்து நகரம் :

வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுவார்கள், ஆனால் ஒரு நகரமே வாஸ்து சாஸ்திரத்தின்படி வடிவமைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யம்தான் இல்லையா. வாஸ்து சாஸ்திரத்தின் படி கட்டிடகலை விதிமுறைகளின் படி உருவாக்கப்பட்ட முதல் நகரம் “ஜெய்பூர்”. வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் நவக்கிரகங்களின் எண்ணிக்கையான ஒன்பது மற்றும் அடுக்குகளாக கொண்டவாறு நகரத்தின் மண்டலங்களை வடிவமைத்துள்ளார்.

city_palace
சிட்டி பேலஸ்

சிட்டி பேலஸ் :

மிக கம்பீரமான மாளிகையாய் திகழும் சிட்டி பேலஸ் ஜெய்ப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 1729 முதல் 1732- ல் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்டமான அரண்மனை  ஒரு பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இது சந்திரா மஹால் மற்றும் முபாரக் மஹால் என்று இரண்டு பிரிவாக உள்ளது. சந்திரா மஹால் மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு ராஜ்புத்திரர்களின் ஆயுதங்கள், ராஜாவின் ஆடைகள் போன்றவை அலங்கரிக்கப் பட்டுள்ளன.

Hawa-Mahal-1
ஹவா மஹால் (காற்று மாளிகை)

ஹவா மஹால் :

1799-ல் மஹாராஜா பிரதாப் சிங்-மூலம் கட்டப்பட்ட இந்த மாளிகை “காற்றின் மாளிகை” என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த மாளிகையில் மொத்தம் 953 ஜன்னல்கள் உள்ளன. ஐந்து அடுக்கு கொண்ட உயரமான இந்த மாளிகையில் படிக்கட்டுகள் கிடையாது. சரிவான தரைபகுதியில் ஏறும்படி உள்ளது. ராஜபுத்திர மஹாராணியர்கள் மேலிருந்து ஜெய்பூர் நகரத்தை பார்க்கவே இந்த மாளிகை கட்டப்பட்டதாம்.

jantar mantar 2
ஜந்தர் மந்தர்

ஜந்தர் மந்தர் வானவியல் கூடம் :

ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய வானவியல் கூடம் உள்ளது. ராஜா இரண்டாவது ஜெய்சிங் உருவாக்கிய இங்கு கட்டிடவியல் , வானியல், தத்துவம் என அனைத்தும் சார்ந்த பல்வேறு உபகரணங்கள் உள்ளன. கணிதவியல் உபகரணங்களாக நேரம் கணிக்கிடும் கருவி, வானியல் கூறுகளை ஆய்வு செய்யும் கருவி போன்றவை உள்ளன.

15 Jaipur Amber Fort Sattais Kacheri
ஆமேர் மார்பல் கோட்டை

ஆமேர் மார்பல் கோட்டை :

ஆமேர் என்ற இடத்தில் ராஜா மான்சிங் 1592-ல் கட்டிய கோட்டைதான் இது. ஜெய்பூரில் இருந்து 11 கி.மி தூரத்தில் உள்ள ஆமேர் கோட்டை சிகப்பு மண்கள் மற்றும் மார்பிள் கற்களால் கட்டப்பட்டது. மூன்று நுழைவு வாயில் கொண்ட கோட்டையில் நான்கு முற்றங்கள் உள்ளன. இந்த கோட்டையில் யானை மீது சவாரி செய்யும் வாய்ப்பு உள்ளது. இது பத்து நிமிடத்தில் நம்மை கோட்டை மற்றும் உயரமான மலைப்பகுதிவரை அழைத்து சென்று விடும்.

யானை சவாரி :

ஜெய்பூர் செல்பவர் யானை சவாரியை அனுபவிக்காமல் வரக்கூடாது. ஆமேர் கோட்டை தான் அதற்கு சிறந்த இடம். தேரா ஆமேர் என்பது ஆரவல்லி மலைதொடரின் கீழ் பகுதியில் உள்ளது. யானை சவாரி என்பது மலையின் நடுப்பகுதி வரை அழைத்து elephant_amberfort_jaipur_tour.previewசெல்லப்படும். இரவு நேர சவாரியும் உள்ளது. யானைக்கு களைப்பு வருகிறதோ இல்லையோ இவ்வளவு பெரிய இடத்தை சுற்றிப்பார்க்கும் நமக்கு நிச்சயம் வரும் இல்லையா அதற்கு சிறந்த உணவும் தரப்படுகிறது.

ஜெய்ப்பூர் என்பது சிறந்த சுற்றுலாதலம் மட்டுமல்ல,நாம் கற்றுக்கொள்ள, அனுபவிக்க, உற்சாகமாய் கொண்டாட, திகைப்பூட்டும் பரவசமான அனுபவம் என பலவற்றை தரும் நகரமாக உள்ளது. ஜெய்பூரை சுற்றி பார்க்க நிச்சயம் ஒரு நாள் போதாது. அதனால் பல ஊர்களை திட்டம்போட்டுவிட்டு போகும்வழியில் ஜெய்பூரையும் பார்த்துவிடலாம் என்று பத்தோடு பதினொன்றாக கடந்து போய்விட முடியாது. ஜெய்பூருக்கு என்று தனியாக ஒரு கோடை விடுமுறையை ஒதுக்குங்கள். நிச்சயம் அந்த விடுமுறையை உங்களால் மறக்க முடியாதபடி செய்துவிடும் இந்த அழகிய ”பிங்க் சிட்டி.

குட்டிஸ்களுக்கு ஏற்ற சுட்டி ஸ்மார்ட்வாட்ச்    

0

மொபைலில், ஆப்ஸ்களில் அப்டேட்டட் வர்ஷன் வருவதைபோல இன்றைய குழந்தைகளும் அப்டேட் வர்ஷனாகவே இருக்கிறார்கள். புதிதாக வாங்கிய smart watch 3ஸ்மார்ட் போனை அப்பா கற்றுக்கொள்வதற்குள் டவுசர் போடாத சுட்டிப்பையன் அநாயசமாக எடுத்து கேம் விளையாடுகிறான்.    எலக்ரானிக் பொருட்கள் உற்பத்தியும் குழந்தைகளை குறிவைத்து நிறைய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவருகிறது.அதில் தற்போது                                                                                                 குழந்தைகளுக்கு என சிறப்பு வகை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியுள்ளது. Mi.com யில் மட்டும் விற்பனையாகும் இந்த ஸ்மார்ட் வாட்ச்யின் விலை ரூ.3000/- என்றவாறு உள்ளது.  குழந்தைகளுக்கு என தயாரிக்கப்பட்டுsmart watch 1ள்ள முதல் ஸ்மார்ட்வாட்ச் இது தான்.  மி பன்னி என்ற இந்த ஸ்மார்ட்வாட்ச் GPS மற்றும் க்ளொனஸ், Wi-Fi இணைப்புடன்  வந்துள்ளது. மேலும் பேசுவதற்கு ஏற்ற உள் இணைந்த சிம் கார்டு உள்ளது.  ஆறு மொபைல் எண்கள் வரை இலவசமாக சேமித்து கொள்ளலாம். குழந்தைகள் எங்கும் தவறிவிட்டால் நம் மொபைலில் உள்ள ஆப் முலம் தொடர்பு கொண்டால் போதும் அவர்களிடம் பேசிவிடலாம்.  குழந்தை செல்ல வேண்டிய பள்ளி வழிகள் மற்றும் பிற வழிகளை முன்பே சேமித்து விட்டால் அதற்கேற்ப ஏதெனும் பாதை தவறு ஏற்பட்டால் உடனே நமக்கு தகவல் தெரிவிக்கும்.  குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. மி பன்னி ஸ்மார்ட்வாட்ச்      எல்இடி  டிஸ்பிளே , வாட்டர்ப்ருப், வளைந்த சிலிகான் ஸ்ட்ராப், 300 mAh பாட்டரி  என சிறப்பு வசதிகளுடன் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ios  மொபைல்களுடன் சுலபமாக இணைத்து விடலாம்.  என்ன இந்த birthday க்கு உங்க குழந்தைக்கு என்ன gift வாங்கறதுங்குற கொழப்பம்  இப்ப இல்ல இல்ல.

சமாளிக்க தெரிந்தால் வெயிலும் சுகமே

0

caldo-estivoகாலத்தின் முகங்களில் மழைக்காலம், குளிர்காலம், வசந்தகாலம் போல வெயில் காலமும் ஒரு முகம் தான். பாடாய் படுத்தும் வெப்பம், வீட்டுக்குள்ளே இருந்தாலும் ஆறாய் ஓடும் வியர்வை, வெளியே சென்றால் உடலின் எல்லா நீரையும் தலைவழியே ஸ்ட்ரா போட்டு உரியும் சூரியன், எந்த ஆடையை போட்டாலும் இறுக்கமாகவே நெருக்கும் உணர்வு போன்று வெயில் காலத்திற்கு என்று பல குணங்கள் இருக்கிறது. மழைக்காலம் போலவும் வசந்தகாலம் போலவும் இதையும் நாம் ரசிக்கக் கற்றுக்கொண்டால் சுகமான இம்சையாகவே வேனிற்காலம் தோன்றும். எந்த ஒரு குழந்தையும் மாணவப் பருவம் முடியும் வரையில் கோடைக்காலத்தை வெறுப்பதில்லை, மாறாக விரும்பவே செய்கிறார்கள். ஏனென்றால் வெயிலை தாண்டி விடுமுறையை அவர்கள் ரசிப்பதால் தான். அதைப்போலவே நாமும் புத்திசாலித்தனமாக வெயிலை சமாளிக்கவும், வெயிலுக்கே உரித்தான சில நன்மைகளை பாராட்டவும் கற்றுக் கொண்டால், வெயில்காலத்தை நாம் எல்லோருமே வரவேற்க கற்றுக்கொள்வோம். வெயில் காலத்தில் அப்படி என்ன நன்மைகள் இருக்கு என்கிறீர்களா?

மிக முக்கியமாக, கொசுத்தொல்லை இருக்காது அல்லது குறைவாய் இருக்கும். தோய்த்த துணிகள், தலைக்கு குளித்தால் கூந்தல் சீக்கிரமாக ஆறிவிடும், வீடு வெளிச்சமாகவும், ஈரம் பூஞ்சை போன்றவை இல்லாமல் பளிச்சென்று இருக்கும். பழங்கள், பழரசங்கள், குளிர்பானங்கள் ஐஸ்க்ரீம் போன்றவைகளை தாராளமாக சாப்பிடலாம், தர்பூசனி, கிர்னி போன்ற சுவையான பழங்களை அதிகமாக சுவைக்கலாம். உல்லாச பயணங்கள் மேற்கொள்ளலாம். இப்படி வெயில்காலத்தை ரசிக்க பல காரணங்கள் இருக்கின்றன. இதெல்லாம் சரிங்க வெயிலின் வெப்பத்தை சமாளிக்க வழி சொல்லுங்க என்கிறீர்களா? இதோ பின்வருமாறு பார்க்கவும்.

உணவு முறையில் :

 • காலையில் ஏதாவது ஒரு இனிப்பான பழம் அல்லது பழரசத்துடன் ஆரம்பியுங்கள். பிடிக்கும் என்றால் பழைய சாதத்தில் உள்ள நீராகாரத்தை குடிக்கலாம்.வெயில் காலத்தில் அதிகமாக விளையும் எந்த பழத்தையும் தாராளமாக நாள் முழுதும் சேர்த்துக் கொள்ளலாம்.192666
 • குறைவான அளவில் உணவை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • அதிக புரத உணவை தவிர்ப்பது நல்லது. புரத உணவை ஜீரணிக்க உடல், சூட்டை அதிகமாய் வெளிப்படுத்தும். இதனால் உடல் சூடு அதிகரிக்கும். எனவே புரத உணவை குறைவாக சாப்பிடுவது நல்லது.
 • பச்சை காய்கறிகளால் செய்த சாலட்டை நிறைய சாப்பிடலாம். வெள்ளிரிக்காய், வெங்காயம் தக்காளி முள்ளங்கி சுரக்காய் கோஸ் போன்றவைகளை சாலட்டாக சாப்பிடுவது நல்லது. இந்த காய்கறிகளில் நிறைய நீர் இருப்பதால் ரத்தத்தை நீர்க்கச்செய்து உடல் சூட்டை தணிக்கிறது.
 • அதிக காபி, டீ மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் சிறுநீரின் அளவு அதிகரித்து உடலின் உப்புச்சத்துக்கள் துரிதமாய் குறைந்துவிடும்.
 • க்ரீன் டீ, பச்சை வெங்காயம் போன்றவைகளில் ஆண்டி ஆக்சிடெண்ட் நிறைய இருப்பதால் அது சூரிய ஒளியினால் ஏற்படும் செல்களின் பாதிப்பை போக்குகிறது.green-tea-in-a-cup
 • குறைந்த அளவில் மிளகு, இஞ்சி போன்ற காரமான பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலின் வெப்பத்தை வியர்வையின் மூலம் வெளியேற்றி உடல் சூட்டை குறைக்கிறது.
 • உடலின் திரவ அளவை கூட்ட வேண்டும்.இதற்கு சுத்தமான தண்ணீரைத்தவிர சிறந்தது வேறொன்றுமில்லை. தாகத்தை புறக்கணிக்காமல் நிறைய தண்ணீரை அவ்வப்போது குடிக்க வேண்டும். சிறிதளவு எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
 • அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை தவிர்க்கவும், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை குறைவாக சாப்பிடவும், மீன் உணவுகளை தேவைக்கேற்பவும் சாப்பிடுவது நல்லது.
 • அதிக குளிர்ச்சியுள்ள பானங்களை தவிர்ப்பதும் நல்லது. இது வியர்வை வெளியாவது, ஜீரணம் போன்ற செயல்பாடுகளை பாதிக்கும்.

உடலை பாதுகாக்க :Benetton Pink Full Sleeves mens formal cotton shirt

 • தளர்த்தியான, முழுக்கை கொண்ட பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வெயிலிலிருந்து உடலை பாதுகாக்கவும், வியர்வையை ஆவியாக்கவும் இவ்வகை ஆடை உதவுகிறது. இறுக்கமான உடைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • கண்களை பாதுகாக்க குளிர்கண்ணாடி அணிந்து வெளியில் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். சூரிய ஒளியின் யுவி கதிர்கள் கண்களின் விழிப் படலத்தையும் கண்களை சுற்றியுள்ள பூந்தசைகளையும் பாதிக்கிறது. எனவே 100% யுவி பாதுகாப்பு உள்ள குளிர்கண்ணாடியை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
 • வெயிலில் செல்ல நேர்ந்தால் எஸ்பிஎஃப் (சன் ப்ரோடெக்‌ஷன் ஃபார்முளா) கொண்ட, அதாவது SPF 15, SPF30 மற்றும் SPF 40 கொண்ட க்ரீம்களை கை, கழுத்து மற்றும் முகத்தில் தாராளமாக male-pedicureதடவிக்கொண்டு செல்வது நல்லது.
 • அதிக சூடு இருந்து, உடலில் எரிச்சல் தோன்றினால் குளிர்ந்த நீர் கொண்ட பக்கெட்டில் கால்களை வைத்திருப்பது சுகமாக இருக்கும்.

வீட்டை பாதுகாக்க :

 • காலையில் வெயில் ஏறும்முன் வீட்டின் கதவு ஜன்னல்களை மூடி திரை சீலைகளையும் மூடி வைப்பது, வீட்டிற்குள் சூரிய வெப்பம் ஊடுருவதை தடுக்கும். அதேபோல் மாலை ஐந்து மணிக்குமேல் எல்லா ஜன்னல்களையும் திரைச்சீலைகளைopen-windowயும் திறந்து வைப்பது, வெளியிலிருந்துகுளிர்ந்த காற்று உள்ளே வர உதவும். மேலும் வீட்டிற்குள் காற்றோட்டத்தையும் அதிகரிக்க உதவும்.
 • வீட்டின் ஜன்னல்களில் ஈரத்துணியை கட்டி வைப்பது, வீட்டுக்கூரையில் தென்னங்கீற்றுகளை போட்டு தண்ணீர் தெளித்து வைப்பது, மொட்டை மாடியில் மெல்லிய வலையால் ஆன கூரையை போட்டு வெயிலின் சூட்டை குறைப்பது போன்றவைகளை கடைபிடித்தால் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

அக்‌ஷய திருதியை – என்ன செய்யலாம் எங்கு செல்லலாம்

0
 • vyapar-vriddhiஅக்ஷய திருதியை அன்று நாம் வீட்டிலேயே மகாலட்சுமி பூஜை செய்து பால் பாயாசம் நிவேதனம் செய்து வழிபடலாம்.
 • பித்ருக்களுக்கு தர்ப்பணம் தரலாம்.
 • கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவை செய்யலாம்.
 • மிருத்யுங்ஜய மந்திரம் சொல்லி ஹோமம் செய்யலாம்.
 • அன்றையதினம் புண்ணிய நதிகளில் நீராடலாம்.
 • குலதெய்வ கோயில்களுக்கு சென்று வழிபடலாcharityம்.
 • தான தர்மங்களை செய்யலாம்.
 • வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள், உப்பு போன்றவைகளை வாங்கினால் நன்று.
 • தங்கம் வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கலாம்.
 • புதிய தொழில் மற்றும் கணக்குகளை ஆரம்பிக்கலாம்.

 அக்ஷயதிருதியை அன்று வழிபடக்கூடிய கோயில்கள் :

Ashtalakshmi-Temple-(2)_original_watermarkஅக்‌ஷயதிருதியை அன்று அனைத்து ஆலயங்களுக்கும் சென்று வழிபடுவது நலம். நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளுர் பெருமாள் கோயில், திருச்சி அருகே உள்ள வெள்ளுரில் உள்ள மகாலட்சுமி பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்காமீஸ்வரர் கோயில், ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் வழிபாடும், முக்கூடலில் நீராடுதலும் சிறப்பு. வண்டலுர் அருகே உள்ள ரத்தின மங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் திருக்கோயில், பெசண்ட்நகர் அஷ்ட லட்சுமி திருக்கோயில் போன்றவையும் அக்‌ஷய திருதியை அன்று வழிபடக்கூடிய திருக்கோயில்களாகும்.

அக்‌ஷய திருதியை – என்ன விசேஷம்

0

Celebrat-Akshaya-Tritiya-With-Blessing-Of-God- அக்ஷய திருதியை, சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாளாகும். நட்சத்திரம் , திதி போன்றவை நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவன. ஒவ்வொரு மாதத்திற்கு என சில குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றும் திதிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

திருதியை திதி என்பது திருமகளுக்குறிய திதி. அக்ஷயம் என்றால் அளவற்ற,குறையாத, வளர்தல், பெருகுவது என்று பொருள்படும். சித்திரை மாத அமாவாசசைக்கு பிறகான திருதியை நாளான்று சூரியனும், சந்திரனும் உச்சப்பலத்துடன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் அந்நாள் சிறப்பு பெற்ற அக்ஷய திருதியை நன்னாளாக கூறப்படுகிறது. இந்த வருடம் மே 9 ஆம் நாள் அக்ஷய திருதியை நாளாகும்.

சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனhomamது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்துள்ள நன்னாளே அக்ஷய திருதியை நன்னாள். அனைத்து செல்வ நலன்களையும் குறைவில்லாது அள்ளி வழங்கிடும். அக்ஷய திருதியை நாளை இந்துக்களும், ஜெயின் சமூகத்தவரும் மிக சிறப்பான திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். அக்ஷய திருதியை அன்று அனைத்து புதிய முயற்சிகள், திருமணங்கள், வியாபாரம், பொருட்கள் வாங்குவது, தானம் வழங்குவது யாகம் செய்தல் போன்றவை செய்யும் போது அனைத்தும் நற்பலன்களை அள்ளித்தரும்.

வெற்றி பெறுவது கடினம்தான். ஆனால் முடியாததல்ல….

0

 

 

walking-success-failureவெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதை அடைய முடியும். வெற்றியின் பாதை கடினமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய உதவும். குறுக்கு வழிகளையோ, மிகச் சுலபமானது, சுகமானது தான் வேண்டும் என்று நினைத்தால், நினைத்தது ஈடேறுவது கஷ்டம் தான். நாம் நினைத்த காரியத்தை முடிக்கவும் வேண்டியதை அடையவும் இரண்டு முக்கிய விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1.மிகச்சுலபமாக எதுவும் கிடைத்துவிடாது.

2.தோல்வியை பார்த்து பயப்படக்கூடாது.

மிகச்சுலபமாக எlose-weight-on-autopilotதுவும் கிடைத்துவிடாது :

இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒருவர் 100 கிலோ உடல் எடையுடன் இருக்கிறார். எண்பது கிலோவிற்கு வரவேண்டும் என்று விரும்புகிறார். கடையில் விற்கும் ஏதோ ஒரு மாத்திரையையோ, மருந்தையோ சாப்பிடுவது, சுலபமான ஒரு உடற்பயிற்சியை ஒரு கருவி மூலம் செய்வது, உடலை வறுத்தாமல் குறுகிய காலத்தில் ஏதோ ஒர் சிகிச்சையை செய்து உடல் எடையை குறைப்பது போன்ற விளம்பரங்களை நம்பி தன் பணத்தையும், நேரத்தையும் வீணடித்தால் உடல் எடை குறையுமா? குறையாது.

work-out-at-gym-for-beginners-6உடல் எடைக்கு ஏதேனும் நோய் காரணம் என்றால் அதை சரிசெய்வது, நொறுக்குத்தீனியை தவிர்ப்பது, சாப்பிட்ட உணவை உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி மூலம் எரிப்பது, வயது மற்றும் உழைப்பிற்கு ஏற்ப உடல் எடை மேலும் கூடாத வகையில் உணவு முறையை சரிசெய்வது போன்றவைகள் தான் உடல் photogallery_Top_Diet_and_Fitness_Tips_for_Men_07_fullஎடையை குறைக்க உதவும். அல்லவா? ஐயோ இதெல்லாம் செய்யணுமா ரொம்ப கஷ்டமாச்சே என்றால், மெல்லிய உடல்வாகிற்கு ஆசைப்படலாமா.

நம் மூளை எப்போழுதுமே எதிர்ப்பில்லாதவைகளைத்தான் நாடும். ஆனால் நம் சுபாவத்திற்கு எதிராக நாம் செயல்பட்டால் தான் வெற்றியை அடைய முடியும்.

தோல்வியை பார்த்து பயப்படுவது :

mind workதோல்வியை நினைத்து பயப்படுவதே நம்மை பல விஷயங்களை செய்ய விடாமல் தடுக்கும் பெரிய தடையாகும். அந்த வேலைக்கு அப்ளை செய்யணுமா. அது எனக்கு கிடைக்கலைனா? அந்த பெண்ணிடம் என் காதலை சொல்ல முடியாது. அவள் என்னை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறாளே? அவள் என்னை மறுத்துவிட்டால்?

 இப்படி தான் நம்மில் பலரும் நாம் அணுகும் காரியம் தோல்வியை தழுவினால் என்ன செய்வது என்று நினைத்தே அந்த காரியத்தை செய்யாமல் இருப்போம். ஆனால் வெற்றி பெற்றவர்கள் பல தோல்விகளை கடந்து வந்தவர்கள் தான். தோல்வி தரும் அனுபவமே வெற்றிக்கு அடித்தளமாகவும், மனதிற்கு உரமாகவும் இருக்கும். தோல்வியை பற்றிய பயம் எல்லோருக்குமே உண்டு. ஆனால் அந்த பயத்தை புத்திசாலித்தனமாக அனுபவ அறிவாக உபயோகப்படுத்திக்கொண்டால் வெற்றி நிச்சயம் தான்.