உடல் ஆரோக்கியத்தைப் பேணும் கைப்பட்டி

0

motiv_band_001ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க ஸ்மார்ட் கைப்பட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.

இந்நிலையில் தற்போது குறைந்த விலையில் புதிய கைப்பட்டி ஒன்றினை Wowl Tech நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அகன்ற OLED திரையினைக் கொண்ட இந்தக் கைப்பட்டியில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தள அப்பிளிக்கேஷன்களும்(application) உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் விலையானது 55 டொலர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !! படித்ததை நினைவில் வைப்பது எப்படி

0

visualisation

படிப்பது பெரிதல்ல. படித்ததை நினைவில் வைப்பதும், நினைவில் உள்ளதை மீண்டும் வெளிப்படுத்த முடிவதும் தான் பெரிது. ஞாபக சக்தி நிறைய வேண்டும் என்று கேட்காத மாணவர்களே இருக்க முடியாது. ஞாபகத்திறன் நன்றாக இருந்தால் அதிக நேரம் படிக்க வேண்டியதும் இல்லை.

மூளையில் ஞாபகங்கள் எப்படி ஏற்படுகிறது :brain-synapses

ஞாபகம் என்பது ஒரு விஷயத்தை நாம் பார்த்தாலோ, படித்தாலோ உணர்ந்தாலோ அது நம் நரம்புகளின் மூலம் மூளையை அடைகிறது. நாம் பார்த்த தகவல்மூளைக்கு செல்வது என்பது, ஒரு நரம்பு செல் அந்த தகவலை சமிக்ஞையாக மாற்றி அடுத்த நரம்பு செல்லுக்கு அனுப்புகிறது. அந்த செல் அடுத்த செல்லுக்கு கடத்துகிறது. இரண்டு செல்களுக்கு இடையே பாதை ஒன்று இருக்கும். இதுவே சினாப்சிஸ். இந்த பாதை அல்லது சினாப்சிஸ் தகவல்களின் அழுத்ததிற்கு ஏற்ப உறுதியாகிறது. அந்த வகையில் அடிக்கடி ஒரு தகவல் ஒரே பாதையில் சென்றால் அந்த பாதை பலப்படும். அதனால் தான் நாம் அடிக்கடி பார்க்கும் கேட்கும் விஷயங்கள், எண்கள், பெயர்கள் நமக்கு ஞாபகத்தில் இருக்கிறது. பொதுவாக தகவல்கள் நம்முடைய விருப்பம், தேவை, கவனம் போன்றவற்றின் அளவிற்கு ஏற்பவே நம் மூளையில் அழுத்தமாகவோ லேசாகவோ பதிகிறது. சரி ஞாபகம் வைத்துக்கொள்வதில் மூளையின் பங்கை பார்த்தோம். இனி அதைக்கொண்டு நாம் படித்ததை எப்படி நினைவில் தக்க வைப்பது என்று பார்ப்போம்.

படிக்கவேண்டியதில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் :

நமக்கு பிடித்த விஷயங்களில்தான் நம் கவனம் இருக்கும். அதை தான் நாம் விரும்பி அடிக்கடி படிக்கவோ தெரிந்துக்கொள்ளவோ விரும்புவோம். எனவே நாம் படிக்க வேண்டிய விஷயத்தில் ஏதாவது ஒரு பிடித்த அம்சத்தை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.

தகவல்களை ஒரு மரமாக சித்தரித்துக்கொள்வது :memory

நம் மனதில் காட்சியாக, படமாக பதிய வைத்துக்கொண்டால் அது ஆழமாக பதியும். எனவே நிறைய விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதை ஒரு பெரிய மரமாக நினைவகப்படுத்த வேண்டும். முதலில் அடிமரம், அதிலிருந்து கிளைகள், அதிலிருந்து இலைகள் என்று ஒவ்வொன்றும் மற்றவற்றொடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். அப்பொழுது முதலும் பொதுவானதுமான தகவலை நினைத்தவுடன் அத்துடன் தொடர்புடைய மேலும் குறிப்பான மற்றவை என்று படித்த எல்லா தகவல்களும் ஞாபகத்தில் வரும்.

தெரிந்த ஒன்றோடு தொடர்பு படுத்திக்கொள்வது :

புதிதாக படிக்கும் ஒன்றை ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்றோடு தொடர்பு படுத்திக்கொள்ளும்போது தெரிந்த ஒன்றின் நினைவு பாதை (சினாப்சிஸ்) பலமாக இருப்பதால் புதிய தகவலும் பலமானதாக ஆகிவிடும்.

திரும்ப திரும்ப எழுதுவது :

study boyதிரும்ப திரும்ப செய்யும் போது தகவல் பாதை (சினாப்சிஸ்) பலப் படுகிறதல்லவா? எனவே திரும்ப திரும்ப எழுதி பார்க்கும்போது தகவல்கள் நிதானமாக ஓரே பாதையில் திரும்ப திரும்ப பதிகிறது. அப்படி எழுதும்போது அப்படியே பார்த்து காப்பி அடிப்பது தவறு. ஒருமுறை படித்துவிட்டு பார்க்காமல் எழுதி பார்க்கும்போது தகவல்கள் பாதையில் மேலும் கீழுமாக பயணிக்கிறது. இப்படி செய்யும்போது நீங்கள் படித்ததை நீங்கள் உங்களுக்கே சொல்லிக்கொடுத்தது போல் இருக்கும்.

ஞாபகத்திறனை மேம்படுத்த தூக்கம் அவசியம் :

இரவில் மட்டும் தான் தூங்க வேண்டும் என்ற அவசியமில்லை, பகலில் கூட படிப்பதற்கு முன்பும் பின்பும் சிறிது நேரம் தூங்கலாம். தூக்கம் படித்ததை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

மனிதா! மனிதா!!

0

நீ இறந்த பின்,
பிணத்தை இப்படி கொண்டு வாங்க..
அப்படியே மெதுவாக வைங்க..
என
நீ யாருக்காக வாழ்ந்தாயோ
அவர்கள் கூட
உன் பெயரை சொல்லி
அழைக்க போவதில்லை..
படைத்தவனை நோக்கி
நம் வாழ்வு அமையாமல்
படைப்புகளை நோக்கி அமைந்து
என்ன பயன்?

இந்த வாழ்வை
ஒரு வாய்ப்பாக கருதி
நோ் வழியில்
எவ்வளவு சம்பாதிக்கமுடியுமோ
அவ்வளவு சம்பாதியுங்கள்.
நீங்கள் விரும்பிய வண்ணம்
முடிந்த அளவுக்கு
செலவு செய்து
அதற்கு மரியாதை கொடுங்கள்.
சொந்தமும் நட்பும் சூழ
மகிழ்ந்து ஆடிபாடுங்கள்.
வாய்விட்டு சிரியுங்கள்
வயிறு வலிக்கட்டும்.
இன்னா செய்தோரையும்
குழந்தை மனத்தோடு
குதுகலமாய் மன்னித்துவிடுங்கள்.

மரணம் ஒரு நாள் வரதான் செய்யும்
அது ஒன்றும் பேரிழப்பல்ல,
வாழுங்காலத்தில் நடைபிணமாய்
வாழ்வதுதான் மிகப்பெரிய பேரிழப்பு..
வாழும்போது மட்டும் அல்லாமல்
மரணித்த பின்னும்
அனைவர் உள்ளத்திலும் வாழ்வதுதான்
நம் வாழ்விற்கே சிறப்பு.

-ஆ.கார்த்திகேயன்

 

ஆர்கானிக் ஆரோக்கியம் – உண்மையா?

0

organic simbolic featured image

ஆர்கானிக் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, நோய்களை தடுக்கிறது, சுவை அதிகமாக இருக்கும் என்றெல்லாம் தெரியும் ஆனாலும் இதற்கான காரணங்கள் என்னென்ன, நாம் கடையில் வாங்குவது உண்மையில் ஆர்கானிக் தானா, ஆர்கானிக் பொருட்களின் சந்தை எப்படியுள்ளது போன்றவைகளையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

இந்தியாவில் உணவுப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என்று அனைத்திலும் ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியும், உபயோகமும், ஏற்றுமதியும் உயர்ந்து கொண்டே வருகிறது. வருடத்திற்கு 20 முதல் 25 சதவிகித வளர்ச்சியைorganic_big கொண்டுள்ளது ஆர்கானிக் பொருட்களின் சந்தை. ஆர்கானிக் பொருட்களின் சில்லறை விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியும் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டில் ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள ஆர்கானிக் பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அது மேலும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. பருப்பு வகைகள், காபி, டீ, மசாலா பொருட்கள் , பாஸ்மதி அரிசி, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

organic

மக்களிடம் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று வரும் ஆர்கானிக் பொருட்களுக்கு ஏன் இந்த மவுசு. அதில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்கலாம். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் இப்பொருட்களில் ரசாயனப்பொருட்களின் நச்சுத்தன்மை இல்லை என்பதும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, இயற்கைக்கு இணக்கமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதே உண்மை.

பொருட்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியில் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், நோய்க்கான மருந்துகள் (ஆண்டிபயாடிக்) என்று பல விதமான ரசாயனப்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவது தெரிந்ததே. இதைத் தவிர மரபணு மாற்றம் செய்யப்பட்ட செயற்கையான வீரியம் கொண்ட தாவரம் மற்றும் இறைச்சிக்கான உயிரின வகைகளும்உணவிற்காகவும் மற்ற உபயோகத்திற்காகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகள் கெடுதல் விளைவிக்கக்கூடியவை இல்லையென்று விஞ்ஞானிகள் கூறினாலும் இயற்கை ஆர்வலர்களின் கணிப்பு வேறுமாதிரியாக இருப்பதால் ஆரோக்கியத்தில் நாட்டம் உள்ள மக்கள் ஆர்கானிக் பொருட்களை நாடுகின்றனர்.

OrganicFood-SS-Postஇயற்கையான விதைகள், இயற்கையான உரங்கள் (மண்புழு உரம் போன்றவை) எரு, இயற்கை வேர் ஊக்குவிப்பான்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் போன்றவைகளை உபயோகிப்பது, பூச்சிகளை விரட்ட பறவைகள் மற்றும் பிற வழிகளை நாடுவது, மிருகங்களுக்கு நோய்க்காக ஆண்டிபயாடிக் போன்றவைகளை உபயோகிக்காமல் வளர்ப்பது போன்ற பல கடுமையான முறைகளை ஒழுங்காக பின்பற்றி பொருட்களை உற்பத்தி செய்யும் பண்ணைகளுக்கே ஆர்கானிக் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

organic (1)இந்தியாவில், உற்பத்தி செய்யப்படும் மற்றும் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் ஆர்கானிக் தரச்சன்றிதழ் பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. எனவே நுகர்வோர் தாங்கள் வாங்கும் ஆர்கானிக் விளைபொருட்கள், அச்சான்றிதழ் பெற்றதுதானா என்பதை உறுதி செய்துக்கொள்வது நல்லது. பொருட்களின் லேபிளில் தரச்சான்றிதழ் அளிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆர்கானிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் தெரிந்திருப்பது அவசியம்.

ஆர்கானிக் பொருட்களில் தேவையற்ற நச்சு வேதிப்பொருட்கள் இல்லை என்பதும் இதனாலேயே அதன் சுவை சாதாரணமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட அதிகம் என்பதும், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்து இவற்றில் அதிகம் என்பதும் உண்மை.Organic-products-to-stop-hair-loss

இப்படி பல நன்மைகள் இருந்தாலும் ஆர்கானிக் பொருட்களின் விலையோ இந்தியாவில், சாதாரணமாக விளைவிக்கப்படும் பொருளை விட கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகமாகவே இருக்கிறது. ஆர்கானிக் பொருட்களுக்கான தேவை அதிகமாகி உற்பத்தியும் அதிகமானால் இவற்றின் விலையும் கணிசமாக குறையலாம் என்ற நம்பிக்கையோடு ஆர்கானிக் பொருட்களின் உபயோகத்தை வரவேற்போம்.

யுவதிகள் விரும்பும் குர்தீஸ்

0

KURTI 3

சந்தை பொருட்களில் எதை எடுத்துக்கொண்டாலும் அவை,அதிக அளவில் பெண்கள் பயன்படுத்தும் பொருளாகவே இருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களில் இருந்து, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நவீன சாதனங்கள் ஆனாலும் பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவமும் அதில் அதிக வகைகளும் இருக்கும். அதேபோல்தான் அணியும் ஆடையிலும். ஆண்களுக்கு என்று எடுத்துக்கொண்டால், பேண்ட், சட்டை, டி-சர்ட், ஜீன்ஸ் , வேட்டி என்று பட்டியல் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால் அதே பெண்கள் அணியும் ஆடை வகை என்று எடுத்துக்கொண்டால் பட்டியல் நீளும். போதாதற்கு மேற்குறிப்பிட்ட பேண்ட் ,சட்டை என்று எல்லாவற்றையும் பெண்களும் அணியத்துவங்கி விட்டார்கள், வேட்டி தவிர(கேரளாவில் அதையும் அபகரித்துக்கொண்டார்கள்). அந்த வகையில் குர்தீஸ் என்பது நவீன யுக பெண்கள் அணியும் மற்றுமொறு ஆடை வகை.

குர்தீஸ் என்பது பெண்கள் அணிகின்ற குர்தா வடிவிலான மேல்சட்டை. ஜீன்ஸ் பேண்ட், சுடிதார் மற்றும் லெக்கிங்ஸ்க்கு ஏற்ப அணிகின்ற குர்தீஸ் இன்றைய நாளில் விதவிதமாக வருகின்றன. எண்ணற்ற வண்ணம், வடிவமைப்பு, கூடுதல் கட்டிங்ஸ் மற்றும் அழகிய நெக்குகள் என பலமாடல்கள் வருகின்றன. பருத்தியிலான காட்டன் குர்தீஸ் முதல் ஜார்ஜெட், டஸ்ஸர், காட்டன், பட்டு மற்றும் பூனம் துணிகளில் குர்தீஸ் உருவாக்கப்படுகின்றன.LEGINS AND KURTI

குர்தா என்பது நீள்சதுரவடிவிலான ஆடையாகும், அரேபிய நாடுகளில் உடுத்தப்பட்ட தாவாப் என்ற ஆண்கள் ஆடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு எனும் போது அதுவே குர்தீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நீண்ட மற்றும் குட்டை வடிவில் கிடைக்கின்றது. பெண்கள் தினமும் அணிகின்றவாறு இலகுவான அதேசமயம் கச்சிதமான வடிவமைப்பில் குர்தீஸ்-களின் வகைகள் உலகளவில் பிரபலமாக உள்ளன. பருத்தி, ஷிப்பான், பட்டு, கதர் குர்தீஸ்கள் அனைத்து காலங்களிலும் அணிய  ஏற்றவாறு உள்ளன. மேலும் உல்லன் குர்தீஸ்கள் குளிர்காலத்தில் அணிய சிறந்த ஆடையாக விளங்குகிறது.

குர்தீஸ் வடிவமைப்பும், வண்ணங்களும் :

குர்தீஸ் முன்பு பூக்கள் அதிகம் நிறைந்த வாறு உருவாக்கப்பட்டன. மேலும் டை & டை மற்றும் மலைவாழ் மக்கள் அச்சு பதிவு ஆடையாக உலா வந்தன. தற்போது. ஏராளமான எம்பிராய்டரி மற்றும் சரிகை, பூ வேலைப்பாடு நிறைந்தவாறும் வருகின்றன.

ஜீன்ஸ்-க்கு ஏற்ற குர்தீஸ் :KUTI EMBRODARY

பெண்கள் அணிகின்ற அனைத்து வகை ஜீன்ஸ் பேண்ட் –க்கு ஏற்ற மேலாடையாக குர்தீஸ் விளங்குகிறது. முன்பு டி-ஷர்ட் தான் ஜின்ஸ்-க்கு நல்ல இணையாக இருந்தது. ஜீன்ஸ் க்கு ஏற்ற குர்தீஸ் என்பது அடர்த்தியான மற்றும் இலகு நிற குர்தீஸ் நன்றாக இருக்கும்.

ரேஷம் எம்பிராய்டரி லாங் குர்தீஸ் :

இவை லெக்கிங்ஸ் மற்றும் ஜீன்ஸ்க்கு அணிய ஏற்ற பிரத்யேகமான நீண்ட குர்திஸ். இதில் ரேஷம் எம்பிராய்டரியில் ஏராளமான பூ மற்றும் ஜிரிகை எம்பிராய்டரி செய்யப்பட்டு வருகின்றன. கழுத்து பகுதியில் ஆடை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதில் பல வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்தீஸ் மற்றும் கண்ணாடி எம்பிராய்டரி செய்த குர்தீஸ்களும் வருகின்றன.

அழகிய டிசைனர் குர்தீஸ் :Long-Embroidered-Kurti

டிசைனர் குர்தீஸ் என்பதில் சந்தேரி ஸிலிவ்ஸ், டாப்ஸ்டிட்ச், மடிப்பு கொண்ட யோக் ஷார்ட் குர்தா, டிரிம், சைடு டை, பார்டர் வைக்கப்பட்ட கப், பிளைன் குர்தீஸ், ஸ்கூப் நெக் ஷார்ட் குர்தா என்று பல வகைகளில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

யோக் ஷார்ட் குர்தா என்பது ரவுண்ட் நெக் மற்றும் மார்பு பகுதியில் சிறுசிறு மடிப்புகள் கொண்டவாறு தைக்கப்பட்டிருக்கும் குர்தாவின் கீழ் பகுதி இரு ஓரமும் சற்று வளைந்தவாறு இருக்கும்.  டஸ்ஸர் காட்டன் ஷார்ட் குர்தா என்பதில் அழகிய கண்ணாடி எம்பிராய்டரி செய்யப்பட்டு பளபளவென உள்ளது. சந்தேரி பிரிண்ட் மற்றும் ஜெய்பூர் பிரிண்ட் ஷார்ட் குர்தீஸ் வருகின்றன. ஜரிகை பார்டர் கொண்ட குர்தீஸ்களும் விதவிதமான டிசைன்களில் வருகின்றன.

காதி குர்தீஸ் :

சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட காதி துணிகளில் உருவாக்கப்பட்ட குர்தீஸ் என்பது அன்றாட வெளிப்பணிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. வெயில்காலத்திலும் , மழைகாலத்திலும் அணிய ஏற்றது.

டேப்லட் – மாத்திரை அல்ல வாழ்க்கையை மாற்றும் திரை

0

ன்றைக்கு வீட்டை விட்டு ஒருவர் கிளம்பும்போது தேவையானவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டாமா என்று சரிபார்த்துக்கொள்ளும்போது அதில் தவறாமல் இடம் பெறுவது அவருடைய மொபைல் . சில சமயங்களில், பர்சை மறப்பவர்கள் கூட மொபைலை மறக்க மாட்டார். அந்த அளவிற்கு இன்று ஒருவரின் தேவைகள் கையடக்க கருவிக்குள் சுருங்கிவிட்டன. தற்போது மொபைலுக்கு இணையாக டேப்லட்களும் அந்த இடத்தை பிடித்துவிTABLET 5ட்டன. மொபைலைவிட பெரிய திரை, ஒரு கணினி அல்லது லாப்டாப்பில் இருக்கும் வசதிகள் அனைத்தும் என்பதுதான் டேப்லட். அதனால்தான் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவராலும் டேப்லட்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சிறந்த இயங்குதளம் (OS)

டேப்லட்-களை இயக்கும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற இயங்குதளம் மிக விரிவான வகையில் உள்ளன. அதாவது ஆண்ட்ராய்டு, iOS மற்றும் விண்டோஸ் போன்ற OSக்களில் பயன்பாடு உள்ளன. இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ios போன்ற OS-க்கள் தான் டேப்லட்களில் பிரதான இடம் பிடிக்கின்றன. விண்டோஸ் போன்றவை இதற்கு அடுத்த நிலையில் வருகின்றன.

ஆண்ட்ராய்டு என்பதில் அதன் புதிய வரிசைகள்தான் மேம்பட்ட OS என்றவாறு கொள்ள வேண்டும். லேட்டஸ்ட் வருகை எனும்போது கிட்காட் மற்றும் லாலிபாப், மாஷ்மெலோ (MARSHMALLOW) போன்றவை கொண்ட டேப்லட் வருகின்றன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில், ‘மிகப்பெரிய சந்தை பகுதியான கூகுள்-பிளே ஸ்டோர் உள்ளது. இதன் மூலம் கூகுள்நௌ, ஹேங் அவுட்ஸ், ஜிமெயில், கூகுள் காலண்டர், கூகுள் பிளே, கூகுள் மேப்ஸ் போன்றவை கிடைக்கின்றன.

Ios என்பது ஆப்பிள் டேப்லட் – ன் OS ஆகும். இதனை ஐபேசு என்று அழைக்கின்றனர். ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பல ஆப்ஸ்களை பெறமுடியும். விண்டோஸ் எனும் போது பழைய கணிணி போன்ற இயக்க வசதியை பெறமுடியும். அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற டேப்லட் என்பதில் இதன் சிறப்பு தனித்து விளங்குகிறது. மேலும் விண்டோஸ் ஸ்டோர் மூலம் 200,000 ஆப்ஸ்களை பெற முடியும்.

சேமிப்பு வசதி :

மிக அதிகமான சேமிப்பு வசதி கொண்ட டேப்லட் கிடைக்கின்றன. குறைந்த சேமிப்பு வசதி என்பது 4 GB முதல் அதிகபட்சம் 128 GB சேமிப்பு வசதி கிடைக்கின்றன. டேப்லட் என்பதில் 16 GB சேமிப்பு வசதி கொண்டது அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது. அதிக டவுன்லோட், சேமிப்பு வசதி தேவைப்படுவோர்  128 GB வசதிகொண்ட டேப்லட் வாங்கிக் கொள்ளலாம்.

காட்சி திரை :TABLET aizes

டேப்லட் – ல் மிக முக்கியமானது காட்சி திரை. இதன் அளவு 7 இன்ச் முதல் 14 இன்ச் வரையில் கிடைக்கின்றன. காட்சி திரை, பகுத்தல் திறன், பிக்சல் எண்ணிக்கை என்பதை தீர்மானித்து டேப்லட் தேர்ந்தெடுக்கும் விதம் வேறுபடும்.

அப்ளிகேஷன் :

தனிப்பட்ட ஓர் இயக்க செயலி மூலமாக குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்வது. அதாவது ஆபீஸ் சாப்ட்வேர், கேம்ஸ், நியூஸ், இ-புக்ஸ், பத்திரிகைகள், மேப்ஸ், சமூகவலைதளங்கள் போன்றவை. டேப்லட்கள் இது போன்ற பல ஆப்ஸ்களை முன்பே பொருத்தப்பட்டவாறு கிடைக்கின்றன.

வை-ஃபை – 4G கனெக்‌ஷன் :

தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4G  எனப்படும் நாங்காம் தலைமுறை வேகத்துடன் இணைய வசதியை தருகின்றன.  தவிர எல்லா மாடல்களிலும் வை-பை இணைப்பு வசதியுடன் கூடிய டேப்லட்கள் வருகின்றன. மேலும் டேப்லட்கள் USB போர்ட்ஸ் மற்றும் SD கார்டு ரீடர்களுடன் வருகின்றன. இதன் முலம் பைல்களை ஷேர் செய்யவும், டிரான்ஸ்பர் செய்யவும் முடியும்.

மேலும் டேப்லட்டின் கேமரா வசதி, எடை மற்றும் பேட்டரி ஆயுள் போன்றவற்றை அறிய வேண்டும். பேட்டரி ஆயுள் என்பதில் 10 மணிநேரம் வரை நீடிக்கக்கூடிய பேட்டரியாக இருந்தால் நல்லது. அதுபோல் டேப்லட்கள் மெல்லிய மற்றும் எடை குறைந்தவாறு வருகின்றன.

தற்போது ஒரு டஜனுக்கு மேற்பட்ட டேப்லட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் உயர்தர வசதிகள், சிறப்பான விலை கொண்ட டேப்லட்கள் சந்தையில் வருகின்றன. மேற்கூறிய வசதியமைப்புகளை ஆராய்ந்து டேப்லட் வாங்கினால் நல்ல பயனுள்ளதாக அமையும்.

அலுவலக பணிகளுக்கு ஏற்ற டேப்லட் :

OFFICE USE
OFFICE USE

அலுவக பணிக்கான அலுவலகம், தொழில்முறை சார்ந்த தேவைக்கு எனும் போது முழு அளவு அதாவது 8.9 இன்ச் (அ) அதைவிட பெரிய திரை கொண்ட டேப்லட் பயன்படும்.  இதில் கீ போர்ட்டு வெளிபுற இணைப்பாக இருப்பது அவசியம். ஒவ்வொரு டேப்லட் தயாரிப்பு நிறுவனமும் அலுவலக பணிசார்ந்த இணைப்புகளை கொண்டவாறு டேப்லட்-யை உருவாக்கி தருகின்றன. உதாரணமாக, விண்டோஸ் 8.1 டேப்லட் –மைக்ரோசாப்ட் ஆபீஸ் உடன், ஐபேட் ஏர்-2 வில் ஐ வொர்க் சூட், போன்றவையுடன் வருகின்றன.

விளையாட்டிற்கு ஏற்ற டேப்லட் :

ஆப்பிள் ஐபேடு விளையாட சிறந்த டேப்லட். அதுபோல் ஆண்ட்ராய்டு டேப்லட்டில் உள்ள ஸ்நாப் டிராகன் 8.50  மற்றும் டெக்ரா K1 CPU சிறந்த கிராபிக்ஸ் –க்கு உதவிபுரிகிறது. டை-ஹார்ட் விளையாட விரும்புபவர்களுக்கு நிவிடியா ஷீல்டு டேப்லட் நல்ல பலனை தருகிறது.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்க்கு ஏற்ற டேப்லட் :TABLET 4

குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன் நிறைய குடும்ப பகிர்வுகளை கொண்ட டேப்லட் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் அமேசான் ஃபயர் டேப்லட் நன்மைபயக்கும். அமேசான் பையர் 6 மற்றும்

7 HD KIDS எடிஷன் அதிக வாரண்டி மற்றும் குழந்தைகளுக்கேற்ற பல சிறப்பம்சம் கொண்டது. இவை தவிர கிட்ஸ் பேலஸ், பெமிகோ, திகேட் இன் தி ஹேட், ஐஸ்டோரி ,டைம் ஸ்டோரி புக், பிக் ஆர்ட்ஸ் கிட்ஸ், டிப் டாப், ஸ்லிப் வாக்கர் ஜார்னி, டோகோ மினி, டோகோ டவுன் என்ற ஆப்ஸ்கள் பிரபலமாக உள்ளன. இவற்றில் குழந்தைகள் விளையாட்டு, படிப்பறிவு சம்பந்தமான சில விஷயங்கள், வரைதல் போன்ற பல குழந்தைகளுக்கான அம்சம் நிறைந்துள்ளது.

ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஸ்கள் :

நமது வீட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்திற்கு ஏற்ற ஓரே ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஸ்கள் வந்துள்ளன. எந்த நிறுவனப்பொருள் எந்த சாதனம் என்றாலும் தனிப்பட்ட ரிமோட் கண்ட்ரோலை நமது ஸ்மார்ட் போன் அல்லது டேப்லட் களில் பெற்று இயக்கிட இந்த வகை ஆப்ஸ் உதவி புரிகிறது. ஆண்ட்ராய்ட் டிவி,  ஓபன் ரிமோட் என்ற பல ஆப்ஸ்கள் உள்ளன.

ஸ்மார்ட்போன்களுக்கான ஆப்ஸ் என்பது பெருங்கடலாக உள்ளது. தற்போது எண்ணற்ற புதியபுதிய ஆப்ஸ் நமது அன்றாட செயல்களுக்கு ஏற்ப சுலபமான வடிவில் வருகின்றன. மேற்கூறியவை சில குறிப்பிட்ட ஆப்ஸ்களை மட்டுமே.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது வாழ்க்கை தத்துவம் மட்டுமல்ல டெக்னாலஜிக்கும் அது பொருந்தும். இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் நேரம் இன்னும் புது அப்டேட்கள் டேப்லட்டில் செய்யப்பட்டிருக்கும். அது பற்றி அடுத்த கட்டுரையில்.

news

0

தமிழக கட்சிகளுடன் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் ஆலோசனை

டெல்லியில் 5 மாநில அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மார்ச் 28ல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

கிருஷ்ணகிரியில் 9 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூர் அருகே ரூ.1.33 லட்சம் பறிமுதல்

செய்யாறு அருகே ரூ.39 லட்சம் பறிமுதல்

அமைச்சரின் நண்பர் வீட்டில் சோதனை

கோவை மாநகராட்சி 100வது வார்டு கவுன்சிலர் வேணுகோபால் என்பவர் வீட்டிலிருந்து 32 குடங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக போலீசில் 19,157 காலிப்பணியிடங்களை தேர்தலுக்கு பிறகு நிரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு. ஜூன் 15க்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது

அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் 5 கட்சிகள்: ஜெயலலிதாவுடன் நாளை சந்திப்பு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதிப் பங்கீடு: தேர்தல் பணிகளில் அதிமுக தீவிரம்

கூட்டணி பேச்சுவார்த்தை: அதிமுக தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் – நத்தம் விசுவநாதன்

ஓபிஎஸ் தலைமையில் 6 அமைச்சர்கள் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தது ஜவாஹிருல்லாவின் தனிப்பட்ட விருப்பம் – முக ஸ்டாலின்.

எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாகவி திமுக தலைவருடன் சந்திப்பு கூட்டனி குறித்து எஸ்டிபிஐ கட்சியுடன் பேச்சுவார்த்தை – முக ஸ்டாலின்.

திமுகவுடன் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை: இளங்கோவன் தகவல்

திமுக – மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி: ஜவாஹிருல்லா அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றுவதா? வைகோ கண்டனம்

மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என காத்திருக்கிறேன்: வைகோ பேட்டி

சிறுசேமிப்புக்கான வட்டியை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

அம்மாவுக்கும், அன்புமணிக்கும் இடையேதான் போட்டி: ராமதாஸ்

தேர்தலில் மாற்றத்தை மக்கள் தந்தால் முன்னேற்றத்தை பா.ம.க. தரும்: ஜெ.குரு பேச்சு

தேமுதிக தனி அணியை கைவிட்டு விட்டு மக்கள் நலக்கூட்டணிக்கு வரவேண்டும்: திருமாவளவன்

ஊழல், மதுவுக்கு எதிரான அலையில் அதிமுக, திமுக காணாமல் போகும்: முத்தரசன்

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் எந்த தொகுதிக்கும் மனு கொடுக்கவில்லை மயிலாப்பூர் தொகுதியில் போட்டி என்று வதந்தி : நடிகை குஷ்பு ஆவேசம்

கொடைக்கானலில் உள்ள இளங்கோ IAS பங்களா சமையலறையில் தீ விபத்து.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை கூடுகிறது

வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விக்கிரமராஜா புகார் மனு

கூடலூர் அருகே 10 வயது ஆண் புலி சுட்டுக் கொலை

கூடலூர் அருகே நடந்த புலி வேட்டையில் 2 போலீசார் காயம்

+2 கணிதத் தேர்வு கடினம்: சேலம் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்: பொள்ளாச்சி இளைஞர் கைது

தூத்துக்குடி அண்ணாநகரில் தண்ணீர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி காமாட்சி பிரியா உயிரிழப்பு.

உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவர் அய்யனார்
கினற்றில் விழுந்து பலி.

வேப்பூரில் பஸ் மீது கார் மோதி விபத்து: பெண் உள்பட 4 பேர் பலி

புதுக்கோட்டை:
திருமண விழாவிற்கு சென்று திரும்பும் போது சோகம்: பேருந்து மீது கார் மோதி 4 பேர் பலி

இலங்கையில் சட்டவிரோத வர்த்தகம்: 12 இந்தியர்கள் கைது

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக போராடிவந்த தீவிரவாதி ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசாரிடம் சரண்.

ஜம்மு காஷ்மீரின் பத்து மாவட்டங்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை.

ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரியில் மாவோயிஸ்ட் ஒருவர் சரண்.

ரஜினியின் ‘2–ஓ’ படம் தமிழ் பட வரலாற்றில் முதன் முறையாக ரூ.330 கோடிக்கு இன்சூரன்சு செய்யப்படுகிறது.

பிரிவினைவாத வழக்கில் பேராசிரியர் கிலானிக்கு டெல்லி கோர்ட் ஜாமின் வழங்கியது

நடிகை ரோஜா சஸ்பெண்ட் எதிரொலி: ஆந்திர சட்டசபை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு.

மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாவிட்டால் பதவி விலக தயார்: உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்க மாட்டேன்: இலங்கை அதிபர் திட்டவட்டம்

போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் வாங்குவதை தடுக்க புதிய வசதி

0

Traffic-Challan-Noidaபோக்குவரத்து பொலிஸார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் அவர்கள் உடலில் கண்காணிப்பு கமெராவை பொருத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

போக்குவரத்து நெரிசலில் திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுக்கவும், வாகன ஓட்டிகளிடமிருந்து பொலிசார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும் பொலிசார் உடலில் கமெராவை பொறுத்தவுள்ளனர்.

மேலும், அந்த கமெராவில் பதிவாகும் காட்சிகள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் ஜிபிஆர்எஸ் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய பெருங்கடல் எல்லை பகுதி இந்தியாவிற்கு சொந்தமா? சீனா கேள்வி

0

201507021102597627_Indian-Ocean-cannot-be-backyard-of-India-China_SECVPFஇந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்றால் மற்ற நாடுகளின் கப்பல்கள் அனுமதி அளிப்பது ஏன்? என்று இந்திய அரசுக்கு சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ  கேள்வி எழுப்பி உள்ளது. சீன அரசு தனது கடற்படையை விரிவுபடுத்தி வருகிறது.

இது குறித்து சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ இந்திய பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியா சொந்தம் கொண்டாடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கடல் எல்லை பகுதி என்பது அனைவருக்கும் சமம். இதனை இந்தியா சொந்தம் கொண்டாட முடியாது. இந்திய கடல் பகுதியில் உள்ள கடைக்கோடி பகுதி இந்தியாவிற்கு சொந்தம் என்றால் அதற்குள் ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்ரேலியா நாட்டுக்கு சொந்தமான  கடற்படைகள் செல்ல அனுமதித்தது ஏன்? இதனை இந்தியா விளக்க முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி மழை நீடிக்கும்

0

Lakshadweepலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி யுள்ள கேரள கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங் களில் கனமழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 22 சென்டிமீட்டர், மழை பதிவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் மூலனூரில் 17 சென்டி மீட்டரும், திண்டுக்கல் மாவட்டம் சத்திரப் பட்டியில் 16 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. திருத்துறைப்பூண்டி, சூலூர், பீளமேடு, வேடசந்தூர் ஆகிய இடங்களில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது