கூகுளிற்காக Nexus கைப்பேசிகளை வடிவமைக்கும் Huawei

0

googleஇணைய ஜாம்பவானான கூகுள் Nexus எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றமை அறிந்ததே.

இந்நிலையில் அண்மையில் கூகுள் நிறுவனத்திற்காக Nexus ஸ்மார்ட் கைப்பேசிகளை LG நிறுவனம் வடிவமைத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஆனால் தற்போது LG நிறுவனத்துடன் Huawei நிறுவனமும் கூகுளிற்காக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கவுள்ளதாக மற்றுமொரு தகவல் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இதன்படி இந்த வருடம் கூகுள் நிறுவனம் இரு வகையான Nexus கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் Huawei நிறுவனம் வடிவமைக்கும் கைப்பேசியானது 5.7 அங்குல அளவும், 1260 x 1440 Pixel Resolution உடையதுமான OLED தொடுதிரையினை உள்ளடக்கியுள்ளதுடன், Qualcomm Snapdragon 810 Eight Core 64-Bit Processor இனைக் கொண்டு வடிவமைக்கப்படவுள்ளது.

அதிரடியாக மோதும் கூகிள் மற்றும் பேஸ்புக்

0

google-vs-facebook1சமூக வலைதளமான பேஸ்புக் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் தேடல் பொறி செயலியால், அத்துறையில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் நாம் எதாவது ஒன்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தேடல் பொறி செயலியின் உதவி தேவை.

அந்த வகையில் முன்னணியில் இருந்த யாகூ (yahoo) தேடு தளத்தை பின்னனுக்கு தள்ளி கூகுள் முதல் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் பேஸ்புக் புதிய தேடுதல் வசதியை தனது பயனாளர்களுக்கு வழங்குவதால் கூகுள் அச்சம் அடைந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சிலரின் பேஸ்புக் பக்கத்தில், அட்-லிங் எனும் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த புதிய வசதி மூலம் நீங்கள் விரும்பிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

அது தொடர்பான இணைதள லிங்குகளும் கிடைக்கும். மேலும் அந்த தகவல்களை நேரடியாக பேஸ்புக்கில் ஸெட்டசாக பகிர்ந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த துறையில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம் அச்சத்தில் உள்ளது. மேலும் பேஸ்புக்கின் இந்த புதிய தேடுதல் வசதி உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தால் கூகுலின் விளம்பர வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிக்கு 600 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடிய ஜப்பான் ரெயில்

0

468ஜப்பானிய ரயில் ஒன்று அதிவேகமாக ஓடுவதில் முன்னர் இருந்த சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

ஃபூஜி மலைப் பகுதிக்கு அருகே நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் மணிக்கு 600 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த ரயில் வண்டி மிக அதிக காந்த சக்தி மூலம் இயங்குகிறது. ஓடும் ரயில் தண்டவாளங்களைத் தொடாமல் அதியுயர் காந்த சக்தி மூலமே செயல்படும் இந்த வண்டி, ஈர்ப்பு விசை மற்றும் இதர சக்திகளை சமன்படுத்தி பயணிக்கும்.

தலைநகர் டோக்யோ மற்றும் நகோயா நகருக்கு இடையே 2027 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம் எண்ணியுள்ளது.

இந்த அதிவேக ரயில் வண்டி 283 கிலோமீற்றர் தூரத்தை நாற்பது நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கும்.

ஆனாலும் இந்தச் சாதனை வேகத்தை ரயில் பயணிகள் தமது பயணத்தில் அனுபவிக்க இயலாது என அந்த ரயில் வண்டி சேவையை நடத்தும் ஜப்பான் மத்திய ரயில்வே கூறியுள்ளது.bullet_train_002

ஏனெனில் மிக அதிகபட்சமாக மணிக்கு 505 கிலோ மீற்றர் வேகத்திலேயே தங்கள் அதை இயக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

2003ஆம் ஆண்டு மணிக்கு 581 கிலோ மீற்றர் என்ற வேகத்தைப் பதிவு செய்த ஜேஆர் சென்ட்ரல், கடந்த வாரம் மணிக்கு 590 கிலோ மீற்றர் என்ற சாதனையை நிலைநாட்டியது. அதனை அந்தக் கம்பனியே முறியடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

மெக்லெவ் ரயில் வண்டி தண்டவாளத்தில் இருந்து 10 சென்ரி மீற்றர் உயரத்தில் வழுக்கிச் செல்வதுடன், மின்னேற்றப்பட்ட காந்தங்களின் மூலம் முன்னோக்கி உந்தப்படுகிறது.

Microsoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்படும் Windows Hello எனும் புதிய கடவுச் சொல்

0

Resized-VM2CEMicrosoft நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் Windows இயங்குதளத்தில் கணனியிலுள்ள தரவுகளின் பாதுகாப்பிற்கென கடவுச் சொற்களை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளமை அறிந்ததே.

இக்கடவுச் சொற்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.

அதாவது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் Windows Hello எனும் புதிய கடவுச் சொல் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இது கருவிழி, கைவிரல் அடையாளம் அல்லது Face Recognition என்பவற்றினூடாக விண்டோஸ் 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணனி அல்லது ஏனைய சாதனங்களினுள் நுழையும் முறையாகக் காணப்படுகின்றது.

செவ்வாயில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

0

mars_001நான்கு வருடங்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து வரும் கியூரியோசிட்டி ரோவர்(Curiosity rover) விண்கலம் தற்போது அங்கு திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நீரானது செவ்வாயில் காணப்படும் Perchlorate எனும் இரசாயனப் பதார்த்தத்தினால் வளிமண்டலத்திலுள்ள நீராவியை உறுஞ்சுவதனால் சேமிக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர இங்குள்ள திரவங்கள் -70 டிகிரி செல்சியஸ் எனும் மறை வெப்பநிலையில் உறைந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கலாம் எனவும் இதனால் நுண்ணுயிர்கள் வாழும் சாத்தியம் இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியிலுள்ள 15 சென்ரி மீற்றர் உயரமான மணலில் உயர் மட்டத்திலான கதிர்ப்பு நடைபெறுவதனால் உயிர் வாழ்க்கைக்கு சவாலாக விளங்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Iphone 6 புதிய வடிவமைப்பு வீடியோ

0

தேசிய மொழிப் பெயர்ப்பாளர் அட்டவணை மேம்படுத்த சாகித்ய அகாடமி திட்டம்

0
sak acad மேம்படுத்த
சாகித்ய அகாடமி திட்டம்

சென்னை, மார்ச் 27, 2015 
தேசிய மொழிப் பெயர்ப்பாளர்கள் அட்டவணையை மேம்படுத்த சாகித்ய அகாடமிதிட்டமிட்டுள்ளது. இந்த அட்டவணையில் எந்த இந்திய மொழியிலிருந்தும் 
மற்றொரு இந்திய மொழிக்கு மொழிப் பெயர்ப்பு செய்யக்கூடிய மொழிப் பெயர்ப்பாளர்களின் விவரங்கள் இருக்கும். அரசு, தூதரகங்கள், செய்திதாள்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு மொழி பெயர்ப்பு சேவை மையங்கள் ஆகியோரின் தொகுப்பு கொண்ட பெற்று 
இந்த அட்டவணையை விநியோகிக்க அகாடமி திட்டமிட்டுள்ளது.

சிறப்பாக மொழி பெயர்ப்பு செய்யக்கூடியவர்கள் மொழிப் பெயர்ப்புக்காக தங்களை சாகித்ய அகாடமியுடன் பதிவு செய்துக்கொள்ளலாம். பதிவு முற்றிலும் 
இலவசமாகும். வயது, பாலினம், குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் ஆகியவை 
பதிவுக்கு அவசியமில்லை.

அஞ்சல் வழியாகவும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் இதற்கு பதிவு செய்துக்கொள்ளலாம். அஞ்சல் வழி பதிவுக்கான முகவரி குணா வளாகம், மெயின்
பில்டிங், 2-வது மாடி (பின் புறம்), 443 (பழைய எண். 304), அண்ணா சாலை, தேனாப்பேட்டை, சென்னை – 600 018, தொலை பேசி எண். 24354815, 24311740. உங்கள் விவரங்களை nationalregistertranslators@gmail.com.   என்ற மின் 
அஞ்சலுக்கும் அனுப்பலாம்.