சத்தமில்லாமல் ஓர் தமிழ்ச் சேவை

0

எஸ் ஆர் எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர் அவர்களுடன் நேர்காணல்

திரைகடல் ஓடி திரவியம்  தேடிய தமிழன் இன்று தன் தாய் மொழியை கற்கவும் அதன் அருமை பெருமைகளை தன் சந்ததிக்கு எடுத்து  செல்லவும் இயலாத நிலைக்கு தள்ளபட்டுள்ள  னர். ஆமாம் உலகின் பல நாடுகளில் வசிக்கின்ற தமிழனுக்கு தமிழ் சொல்லி கொடுக்க சரியான  ஆசிரியர்கள் இல்லா அவல  நிலையால் பல தமிழ் பள்ளிகள் மூடப்படுகின்றன.

          இப்படிபட்ட சூழலில் தேர்தலின் போது மட்டுமே தமிழ் மொழியையும் தழிழர்களின் நலனையும் பேசுகின்றவர்களின் மத்தியில், நாடுகடந்து சத்தமின்றி தமிழ் தொண்டாற்றி வரும் எஸ்.ஆர்.எம் நிறுவனர் பாரிவேந்தர் அவர்களை நேர்கண்ட போது:-

 கே.   நாடு கடந்து  தமிழ் சேவையா?

  நுறு இருநுறு ஆண்டுகளுக்கு முன் பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்து பல வெளிநாடுகளுக்கு சென்று, தன் தாய் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்ட தமிழர்களில் பலர் இன்று தன் தாய் மொழியை முறையாய் கற்கவும் தன் குழந்தைகளுக்கு சொல்லித்தரவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். புலம் பெயர்ந்த நம் சகோதர்களுக்கு தாயின் சீதனமாக தமிழ்மொழியை முறையாய் கற்றுத்தரும் பொறுப்பு இருக்கிறதல்லவா.?. அப்படி ஒரு பொறுப்பான காரியத்தைதான் நாங்கள் செய்து வருகிறோம்.

 கே. தொழிற்கல்விக்கு புகழ்பெற்ற எஸ்.ஆர்.எம். தமிழ்பணிக்கு வந்தது எப்படி?

    பள்ளிக்கூட மற்றும் கல்லூரி வயதுகளில் இருந்தே தமழின் பால் உள்ள ஆர்வமும் தமிழர்களின் நலனில் உள்ள அக்கறையுமே என்னை தற்போதயை நிலைக்கு உயர்த்தியுள்ளதாக நம்புகின்றேன்.  நான்  ஆசிரியனாகத்தான் என் வாழ்க்கையை தொடங்கினேன். பல துறைகளிலும் தமிழ் மொழியின் வளர்ச்சி இருக்கவேண்டும் என்ற என் ஆவலை முயற்சியாக்கி சிறிது சிறிதாக நிறைவேற்றி வருகிறேன்.

 தமிழ்மொழியின் தொன்மை, வரலாறு, பண்பாடு முதலியவற்றை உலகிற்குப் பரப்பவேண்டும் எனும் பெருநோக்கில் தமிழ்ப்பேராயம் என்னும் அமைப்பை 4.02.2011 அன்று துவக்கினோம்.    இதற்காக ஒரு தமிழ் துறையும் துவக்கி அதற்கு ஐந்தாம் தமிழ்சங்கம் என்றும் பெயர் சூட்டினோம்,  அதன் மூலம் தமிழ்ப்பணி ஆற்றிவருகிறோம்.

கே. தமிழ் பேராயம் தற்போது என்ன செய்து வருகின்றது?

  • தமிழ் பேராயத்தின் மூலம் நாங்கள், தமிழர்;களின் வாழ்வியல் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் தமிழில் அளிக்கும் வகையில் அர்ச்சகர்களை உருவாக்கும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ என்ற பட்டயப்படிப்பினை பயிற்றுவிக்கிறோம்
  • உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவும் ‘யோகமும் மனித மாண்பும்’ என்ற பட்டயப்படிபை வழங்குகிறோம்.
  • இணையத்தின் மூலம் தமிழில் கலை ஆய்வியல் நிறைஞர்களை உருவாக்கும் கல்வியை வழங்குகிறோம்.
  • மாணவர் தமிழ் மன்றங்களை இணைக்கிறோம்.
  • கம்ப்யூட்டரை உபயோகிக்கும் மக்கள் இன்று பெருகியுள்ளனர். அவர்களுக்கு கம்ப்யூட்டரின் அடிப்படையையும், பயன்பாட்டையும் கற்றுத்தரும் ‘கணிணித்தமிழ்’ சான்றிதழ் பயிற்சியை வழங்குகிறோம்.
  • கல்வியாளர்கள் தமிழ் மென்பொருள் உருவாக்கத்தை தெரிந்துகொள்ளும் வகையில் ‘தமிழ்க்கணிணிமொழியியல் தொடர்பான கருத்தரங்கு. பயிலரங்குகளை நடத்துகிறோம்.
  • தொல்காப்பியம் பற்றிய குறுநூல்கள், தமிழின் சிறப்பை உணர்த்தும் மொழிபெயர்ப்பு நூல்களையும் பதிப்பிக்கிறோம்.
  • சிறந்த ஆய்வுகளை வெளிக்கொணர காலாண்டு ஆய்விதழ் ஒன்றை வெளியிடுகிறோம்.
  • இந்திய அரசின் சாகித்ய அகாடமp இந்திய மொழிகளின் படைப்புகளுக்கு விருதுகள் வழங்குவதைப்போன்று தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்காகத் தமிழ் படைப்புகளுக்கு விருதுகள் வழங்குகிறோம்.
  • கே. தமிழ் பேராயம் சாகித்ய அகாடமிக்கு நிகரானதா? சாகித்ய அகடாமியை விட அதிக தொகையை பரிசாக நாங்கள் அளித்து வருகிறோம். ரூபாய் ஒன்றரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையில் பரிசுத்தொகையை வழங்குகிறோம். எல்லாத்துறை வல்லுனர்களை நடுவர்களாக கொண்ட குழுவின் மூலம் நேர்மையான முறையில் சீர் தூக்கி பார்த்து சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறோம். இதற்கு சான்றாக சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ——–       நூலின் ஆசிரியர் ——

        அவர்களுக்கு அதே படைப்பிற்காக அதற்கு முன்பாகவே நாங்கள் தேர்ந்தெடுத்து பரிசளித்தோம் என்பதே   இதற்கு சான்றாகும். நாங்கள் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ச் சமயக் கல்வித்துறை, கணினித்தமிழ்க் கல்வித்துறை, பதிப்புத்துறை, விருதுவழங்கும் துறை எனும் ஐந்து துறைகளின்வழி பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கே. தென்னாப்பிரிக்காவில் ஆசிரியர் பயிற்சி அளிப்பதற்கான காரணம் என்ன?

                கரும்புத் தோட்ட தொழிலாளர்களாக பிழைப்பிற்காக தென்னாபிரிக்கா சென்ற பல தமிழ்ர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளதுடன் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியையும் கொடுத்து வருகின்றனர். இராண்டாம் மொழியாக தமிழை கற்று வந்த பல மாணவர்கள் இன்று போதுமான ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதற்கு காரணம் முறையாய் தமிழை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை என்பதே. இந்நிலையில் தமிழை இரண்டாம் மொழி என்ற நிலைலிருந்து அகற்ற தென்னாபிரிக்க அரசு முடிவெடுக்க, அதை தடுக்க நினைத்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் திரு. மிக்கி  செட்டி அவர்கள் செயலர் மருத்துவர் மேஸ்திரி அவர்கள;  போன்ற  தமிழ் ஆர்வலர்கள் தமிழ்நாட்டு  பல்கலைக்கழகங்களை அணுகினர். முடிவில் எஸ்.ஆர்.எம். தமிழ் பேராயத்தின் கவனத்திற்கு இதை கொண்டுவர, திறமையான தமிழ் பேராசிரியர் குழு ஒன்றை நாங்கள் தென்னாபிரிக்காவிற்கு அனுப்பி வைத்தோம் அவர்கள் மூலம் அங்கு ஒரு கல்வி நிலையத்தை துவங்கி தமிழ் ஆர்வம் கொண்டவர்களை  தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தமிழை கற்றுக்கொடுக்க பயிற்றுவித்தோம்.

  இந்தப் படிப்பில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 63  மாணவர்கள் பயின்றுவந்தனர் இவர்களில் 44 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான பட்டயமளிப்பு விழா 04.04.15  சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் மியர்பேங்க தமிழ்ப் பள்ளி அரங்கத்தில் (MTSS) நடைப்பெற்றன.

தென்னாப்பிரிக்கா அரசு தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக நீடிக்க அனுமதித்துள்ளதே  நமக்கு கிடைத்த வெற்றி.

கே. இந்த பணி எல்லா நாடுகளுக்கும் தொடருமா?

    தென்னாப்பிரிக்கா மொரீசியஸ் ரீயூனியன் போன்ற நாடுகளில் உள்ளோர் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பின்றி வாழ்ந்து வருகின்றனர்.  இவர்கள் மருத்துவம், பொறியியல் கணினியில் போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்குத் தமிiழ எழுத, பேச, படிக்க தெரியுமே தவிர தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்ககொடுபதற்கான கல்வியறிவும் பயிற்சியும் கல்வித் தகுதியும் இல்லாமல் இருந்துவந்தது.

   இந்தக் குறையைப் போக்கும் வகையில் தமிழ்ப்பேராயம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைச் சொல்லிகொடுப்பதற்குப் பயிற்சியும் கல்வித்தகுதியும் உள்ள ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அயலகத் தமிழாசிரியர் (Diaspora Tamil Teacher) என்னும் ஓராண்டு ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்பினை தொடங்கியது.

 இந்தப் படிப்பினைப் படிப்பதன் வாயிலாக உலகநாடுகளில் வாழும் தமிழர்கள் முறையான ஆசிரியப் பயிற்சியைப் பெற்றவர்களாகவும் தகுதிக்காகப் பட்டயத்தைப் பெற்றவர்களாவும் உருவாகின்றனர். இது அவரவர் வசிக்கும் நாடுகளில் உள்ள பள்ளிகளில் தமிழாசிரியர் பணிபெறுவதற்கு வாய்ப்பாக அமைகின்றது. மேலும், குழந்தைகளுக்குத் தமிழை எவ்வாறு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற அறிவினைப் பெறுவதால் ஆர்வமுள்ளேர் தனிநிலையிலும் தமிழிப் பள்ளிகளை நடத்துவதற்கு இது வாய்ப்பாக அமைகின்றது.

   இதனடிப்படையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்துடன்  (International Movement For Tamil Culture)  இணைந்து 2014 ஜனவரி முதல் தென்னாப்பிரிக்கா,  அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் 2014 ஜீலை முதல் ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையுடன் (Australian Tamil Academy – ATA) இணைந்து ஆஸ்திரேலியாவிற்கும் இந்தப் படிப்பு நடத்தப்பட்டுவருகிறது.

 கே: இத்தகைய தமிழ் ஆர்வம் காட்டும் தாங்கள் தொழிற்கல்விகளை தமிழில் படிக்க செய்யமுடியுமா?

   எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மொழியில் பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறோம். தொழிற்கல்விகளான மருத்துவம் பொறியியல் போன்றவற்றிற்கு போதுமான கலைச்சொற்கள் தற்பொழுது தமிழில் இல்லை. அதற்கான முயற்சிகளிலும், ஈடுபட்டு வருகிறோம் 1880 முதல் 1953 வரையில் வாழ்ந்த த.வி சாம்பசிவம் பிள்ளை என்பவர் மருத்துவ அகராதியையும், தமிழ் மருத்துவ நூல்களையும் எழுதியுள்ளார். அவையெல்லாம் பதிப்பில் இல்லாத சிறந்த நூல்கள் ஆகும். அவற்றை எடுத்து மறுமதிப்பு செய்து வெளியிட்டுள்ளோhம். இதே போல் கையெழுத்து பிரதியாக இருந்த பல அரிய நூல்களை வெளியிட்டு வருகிறோம். இதை போல் போதுமான கலைச்சொற்கள் தமிழில் கிடைத்த பிறகு தொழிற்கல்வியை  தமிழில் கொண்டுவர சாத்தியமாகும்.

Share

NO COMMENTS

Leave a Reply