3. உலகம் காரினுள் புகைத்தலை தடைசெய்த இங்கிலாந்து

காரினுள் புகைத்தலை தடைசெய்த இங்கிலாந்து

by A2ZHealth -
0

Mum-daughterஉலகளாவிய ரீதியில் புகைப்பிடித்தல் பழக்கமானது அதிகளவில் எல்லோரிடத்திலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் என்பவை யார் அதை உபயோகிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் புகைப் பழக்கம் அருகில் உள்ளவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் அதுவும் நம்ம சென்னையில் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு குறைவே இல்லங்க….

இதுக்காகவே இங்கிலாந்தில் காரில் பயணம் செய்யும் போது குழந்தைகள் இருந்தால் அப்போது புகைப்பிடித்தல் தண்டனைக்குரிய குற்றம் என இங்கிலாந்து அரசு அறிந்திருக்கிறது. இதனை அந்நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர். இதனை நடைமுறைப் படுத்துவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் எம்பிக்களிடையே கருத்துக்கணிப்பு எடுத்தார்கள் அதில் 342 எம்பிக்கள் இதை நடைமுறை படுத்தவும் என்றும் 74 எம்பிக்கள் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

தடையினை மீறி யாரும் பிடிப்பட்டால் அதற்கான பைன் தொகை நம்ம ஊரு காசு 5000 ரூபாய். இந்த தடையின் நடைமுறைப்படுத்த காரணமாக இருந்தது பிரிட்டிஸ் லங் டைபௌன்டேசன் (British Lung Foundation) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம். இவர்கள் கடந்த ஆண்டு சிறுவர்கள் அதிகமாக நோய்வாய்ப்படுவதற்கும் இறப்பதற்கும் காரணமாக அமைவது என்ன என்று பார்க்கும் போது புகையிலை புகை என கண்டறிந்துள்ளனர்.

அருகில் உள்ளவர்கள் புகைக்கும் போது அதனை சுவாசித்துதான் இவர்களை நோய்கள் தாக்குகின்றன. ஆஸ்மா, மூளைக்காய்ச்சல் என பல நோய்களால் சிறார்கள் இறக்கும் வீதம் அதிகரிக்கிறது. ஆகவேதான் இந்த தடையினை உடனடியாக இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

இதைப்பார்த்தாவது நம்ம ஊர்கள் கூட இப்படி ஒரு தடையினை பிறப்பித்தால் நல்லா இருக்கும்.

NO COMMENTS

Leave a Reply