எகிப்தில் பதற்றம் ~ 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்ஸிக்குமரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் சினாய் பகுதியில் மூன்று நீதிபதிகளை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.

மேலும் 3 நீதிபதிகள் படுகாயம் அடைந் தனர்.எகிப்து முன்னாள் ஜனாதி பதி முகமது மோர்ஸிக்கும் அவரது ஆதரவாளர்கள் 100 பேருக்கும் கெய்ரோ நீதிமன்றம் சனியன்று மரண தண்டனை விதித்தது.

2011-ம் ஆண்டில் மோர்ஸியின் ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் சிறையை உடைத்து வெளியேறிய வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.இந்தத் தீர்ப்பால் எகிப்தில் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது. மோர்ஸியின் ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோர்ஸிக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங் கப்பட்ட சில மணி நேரத்தில் சினாய் பகுதியில் அல் ஆரிஷ் நகரில் நீதிபதிகள் சென்ற பேருந்தைக் குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று நீதிபதிகள் உயிரிழந்தனர். மேலும்3 நீதிபதிகள் படுகாயம் அடைந் தனர்.

A2Z Media

NO COMMENTS

Leave a Reply