டைகர் ஏர் விமான சலுகை கட்டணத்தில் சந்தோஷமான சிங்கப்பூர் பயணம்

0
310
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

சுற்றுலாவாசிகளின் சொர்க்க புரியாக திகழும் சிங்கப்பூர் மனம்கவரும் சுர்சாக அனுபவத்தை சுற்றுலா வருபவர்களுக்கு வாரி வழங்குகிறது. என்றென்றும் இளமையுடன், புதுப்பொலிவுடன் திகழும் சிங்கப்பூர் பயண அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு புதிய அற்புதமான அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு புதிய அற்புதமான வாய்ப்பை டைகர்ஏர் நிறுவனம் வழங்கியுள்ளது.

சிங்கப்பூரின் பொன்விழா  இந்தியா மற்றும் சிங்கப்பூரிக்கிடையே 50 ஆண்டு நல்லுறவை கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் சுற்றுலா கழகத்துடன் இணைந்து டைகர் ஏர் நிறுவனம் சிறந்ததோர் பயண வாய்ப்பை வழங்குகிறது.

ஐந்து இந்திய நகரங்களிலிருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து டைகர் ஏர் விமானங்களிலும் 50 % கட்டணம் தள்ளுபடி என அறிவித்துள்ளது.

சென்னை, திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி நகரங்களிலிருந்து பயணம் சியும் பயணிகள் இச்சிறப்பு சலுகையை ஜூலை 7 முதல் 15 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து பெறலாம். பயணம் செய்யக்கூடிய காலம் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 6 தேதி 2015 வரையில் ஆகும்.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல ஒருவழி பயனகட்டணம் என்பது ரூ 3799இல் தொடங்குகிறது. அனைத்து திரும்புகின்ற கட்டணம் ரூ. 7999 என்றவாறு உள்ளது.

இத்துடன் பொன்விழா கொண்டாட்டத்தின் அங்கமாக சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளும் பயணிக்க பிரத்யோக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டலில் தங்குவதற்கான சலுகை மற்றும் ஷாப்பிங் ஆப்பர்கள்,  முன்னுரிமை சலுகைகள் சிங்கப்பூரை உடனே காண தூண்டும் அளவிற்கு வழங்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வருமை புரிவோர் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் தற்போது இந்திய பயணிகள் சிங்கப்பூரை கண்டுகளிக்க டைகர் ஏர் நிறுவனம் சிறந்ததோர் யைப்பை வழங்கியுள்ளது. ஏராளமான ஷாப்பிங், கண்கவரும் பயணங்கள், சுவைமிகு உணவுகள் விருப்பமிகு விளையாட்டு என சிங்கப்பூரில் உற்சாகமாய் பயணிக்க ஏற்ற தருணம் இதுவே. டைகர் ஏர் விமானத்தில் சலுகை கட்டணத்தில் பயணிப்போம், சந்தோஷமான பயண அனுபவத்தை பெறுவோம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்