ஃபிரிட்ஜில் கோளாறுகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?

0
159
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

ஃபிரிட்ஜ்  எனப்படும் ரெப்ஃபிரிட்ஜிரேட்டர்  இன்று வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருளாகிவிட்டது. காரணம் அந்த காலம்போல ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக சமைப்பது என்பது இன்று அரிதாகிவருகிறது. அதுவும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கும்பட்சத்தில், அது நடைமுறைக்கு சாத்தியமில்லாததும் ஆகும்.  காலையில் சமைத்த உணவை இரவு வீடு திரும்பும்வரை வைத்திருக்க கட்டாயம் பிரிட்ஜ் அவசியமாகிறது. இன்று புறநகரில் வீடுகள் பெருகி வருகின்றன என்றாலும், அங்கே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு அவர்கள் பக்கத்தில் உள்ள டவுனுக்குத்தான் வரவேண்டியுள்ளது. அதுபோன்ற சூழ்நிலையில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கோ அல்லது ஒருவாரத்திற்கோ சேர்த்து வாங்கி வீட்டில் பத்திரபடுத்த வேண்டியுள்ளது. வீட்டில் பிரிட்ஜ் இல்லாமல் இது சாத்தியமில்லை. அதனால் இன்று புதுவாழ்க்கை தொடங்கும் திருமணத்தம்பதிகளின் சீர்வரிசையில் தவறாமல் இடம்பிடிப்பது இந்த பிரிட்ஜ் என்று சொல்லாம்.

காய்கறிகள் மட்டும் என்றில்லாமல், சமைத்த உணவை கெடாமல் பாதுக்காக்க, குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் , மற்றும்நொருக்கு தீனிகளை வைக்க என்று இவற்றின் பலனும் அதிகமாகவே இருக்கிறது. இப்படிபட்ட ஒரு பொருளை வாங்கும்போது நாம் காட்டும் ஆர்வம் அதை பராமரிப்பதில் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே. பராமரிப்பது என்றால் முன்பக்கம் கரையில்லாமல் பார்க்க அழாகாக துடைத்துவைப்பது என்று மட்டும் நினைத்துவிட்டவேண்டாம். அதை தாண்டி சில விஷயங்கள் இருக்கிறது. அதை தெரிந்துவைத்துக்கொண்டால்,

அவ்வப்போது சிறுகோளாறுகள் ஏற்படாமல் பாதுகாப்பதோடு, அதை சரிசெய்ய ஆகும் செலவை மிச்சப்படுத்தலாம். இதனால் பிரிட்ஜின் ஆயுட்காலமும் நீடித்து நன்கு உழைக்கும்.

எப்படி துடைக்கவேண்டும் எங்கு சுத்தம் செய்ய வேண்டும் :

இல்லங்களில் ஃப்ரிட்ஜ் உபயோகப்படுத்துவோர் இதனை எவ்வாறு பராமரிப்பது என்பதனை அறிவதில்லை. ஃபிரிட்ஜ்ஜில் ஏற்படும் சிறு கோளாறுகளுக்கு நாம் அதனை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் விடுவது தான் காரணம்.

இன்று நவீன தொழில்நுட்பத்தில் கண்டென்ஸ்ர் காயில்கள் வெளியே தெரியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் அநேக இல்லங்கள் பழைய மாடல் பிரிட்ஜ் உபயோகத்தில் இருக்கிறது. அவைகளின் பின் புறம் உள்ள இந்த காயில்கள் வெளிபுற தூசு மற்றும் ஒட்டடை படிந்திருக்கும்.  அழுக்கான கண்டென்ஸர் காயில்கள் ரெப்ஃரிஜிரேட்டரை அதிக அளவு வேலை அவாங்கும். அதுபோல் அதிகபடியான மின்சாரத்தை உபயோகிக்கும். ஃபிரிட்ஜின் ஆயுள் சீக்கிரம் முடிந்துவிடும். எனவே கண்டென்ஸர் காயில்களை வாக்யூம் கிளினர் கொண்டு மூன்று மாதத்திற்கு ஒரு தடவை சுத்தம் செய்ய வேண்டும்.

மாடல்களுக்கு ஏற்றவாறு காயில்கள் ஃபிரிட்ஜின் பின்புறம் அல்லது அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். அதற்கேற்ப அதனை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். கவனம் இதை செய்வதற்கு முன் பிரிட்ஜின் மெயின் பிளக்கை மின் இணைப்பில் இருந்து  கழற்றிவிட்டு செய்ய வேண்டும்.

அடுத்தாக தண்ணீர் வெளியேறும் குழாய் மற்றும் தண்ணீர் சேரும் பாத்திரம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சில மாடல்களில் வெளியேறும் தண்ணீர் குழாய் மற்றும் அது சேர சிறு தண்ணீர் பாத்திரம் இருக்கும் அந்த குழாய்களில் ஏதேனும் உணவு பொருள் அடைத்திருந்தால் மற்றும் பாத்திரத்தில் உணவு பொருள் படிந்திருந்தாலே. அதிக படியான துர்நாற்றம் அடிக்கும். மேலும் ஃபிரிசர் சரியாக இயங்காது. அதனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

ஃபிரிட்ஜின் குளுமை வெளியேறாவாறு அதனை சுற்றி கேஸ்கட் அமைத்து சீல் வைக்கப்பட்டிருக்கும். அந்த கேஸ்கட்டில் ஏதேனும் உடைப்பு, பிளவு ஏற்பட்டிருக்கிறதா என்று சோதித்து அதனை சிறு பஞ்சில் நனைத்த நீர் கொண்டு நன்றாக துடைத்து விடவேண்டும்.

குளுமை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் :

ஃபிரிட்ஜின் டெம்பரேச்சர் அளவு நடுநிலையோடு இருத்தல் வேண்டும். ஃபிரிட்ஜ் 38 முதல் 42 டிகிரி பாரன்ஹீட் அளவு – பிரிசர் 1 to 10 டிகிரி அளவு இருந்தால் போதுமானது. உள்ளே பொருட்கள் குறைவாக இருக்கும்போது குளுமை அதிக மாக இருக்க வேண்டியதில்லை. அது மின்சார இழப்பைத்தான் ஏற்படுத்தும்.

சில நேரங்களில் ஃபிட்ஜ் திறக்கும்போதே துர்நாற்றம்  வீசும், இடை தவிர்க்க கொஞ்சம் கசங்கிய செய்தித்தாள் ஓர் பகுதியில் வையுங்கள், அது துர்நாற்றத்தை கிரகித்து கொள்ளும். மற்றொரு உபாயம், கடையில் கிடைக்கும் பேக்கிங் சோடா பாக்கெட்டை சேலாக  திறந்து ஒரு மூலையில் வைத்தால் துர்நாற்றம் வீசாது.

ஃபிரிட்ஜ் உட்பகுதியில் எந்த விதமான ரசாயனமற்ற பொருள்கள் கொண்டு நன்றாக துடைத்துவிடவேண்டும். ஃபிரிட்ஜ் கதவு நன்றாக மூடி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சிறுகுழந்தைகள் , அவசரத்தில் திறந்து மூடும்போது சரியாக மூட தவறிவிடுவார்கள், அத்தகைய நேரங்களில் காற்று வெளியேறி பிரிட்ஜின் செயல்பாட்டை பாதிக்கும்.

அடுத்து பிரிட்ஜை வைக்கும் இடம். சுவற்றில் மிக நெருக்கமாக ஃபிரிட்ஜ் வைக்கக்காமல் சற்று இடைவெளி விட்டு வையுங்கள். இன்றைய புதிய தொழில்நுட்பத்தில் மின்சார சிக்கன ரெப்ஃபிரிஜிரேட்டர் (ஸ்டார் ரெட்டிங் )வந்த வண்ணம் உள்ளன. சுவற்றில் திறன் அறிந்து அதற்கேற்ப நாம் வாங்கினால் மின்சாரத்தை சேமிக்கலாம்.

வெளியூறுக்கோ , சுற்றுலாவுக்கோ செல்லும்போது பிரிட்ஜில் உள்ள பொருட்களை எடுத்துவிட்டு, சுத்தமாக துடைத்துவைத்துவிட்டு செல்லுங்கள்.

இதுபோன்ற சிறு விஷயங்களை பின்பற்றினாலேபோதும், பிரிட்ஜில் தேவையில்லாத கோளாறுகள் வருவதை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்