புரட்சி கவிஞர் பாரதிதாசன் – ஏப்ரல் 29 பிறந்தநாள் விழா

0
107
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

 • தமிழ் கவிதை உலகம், பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பெருமை பெற்றது.
 • புரட்சிக் கவிஞரின் வரிகளைப் பேசாத, கேட்காதவாய், செவிகள் தமிழகத்தில் இல்லை. இவர் போன்ற கவிஞர்கள் இதுவரை தோன்றியதில்லை.
 • புரட்சிக் கவிஞர் பாடாத பொருள் இல்லை. காவியம், காப்பியம், இயற்கை, மொழி, வடவர், சுரண்டல், பகுத்தறிவு, தன்மானம், மானவாழ்வு, சமத்துவம், இயற்கை, அழகு, மலையருவி, பெண் கல்வி, காதல், தலைவர்களின் சிறப்பு பக்தராய் இருந்தபோது பாடிய கடவுள் பாடல்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
 • உலகப்பன் பாடல் ஒன்றுபோதும் அவர் மானுட சமத்துவத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம்.
 • நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாய் செய்த ஆசிரியப் பணியில் எத்தனையோ இடர்பாடுகள் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் நிரந்தர பணி நீக்கம் அதை எதிர்த்து பிரெஞ்சு தலைமை நீதிமன்றத்தில் வழக்கிட்டுப் போராடி மீண்டும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 • தன் மூத்தமகள் பள்ளிக்குச் செல்லாமல் பள்ளிச் சீருடையோடு அழுது அடம்பிடிக்க மனைவி பழனியம்மாள் புரட்சிக்கவிஞரிடம் மகளைச் கண்டித்து பள்ளிக்கு போகச்சொல்லுங்கள் என்கிறார். இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே சென்று அதே வேகத்தில் கவிதையோடு வெளியே வருகிறார். அந்தக் கவிதைதான் “தலைவாரிப்பூச்சூடி உன்னை” என்ற புகழ் மிக்க கவிதை.
 • 1928-ல் பச்சை அட்டைக் குடியரசு வாசித்ததன் மூலம் பெரியாரையும் அவர் கொள்கைகளையும் நேசித்தார் பின்பு சுவாசித்தார்.
 • புரட்சிகவிஞர் என்ற இந்தக் கவிவேழம் பெரியார் என்ற அங்குசத்திற்கு மட்டுமே அடங்கியது.
 • 1933-ல் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டான ம.வெ. சிங்காரவேலு நடத்திய நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு தான் ஒரு “நிரந்திர நாத்திகன்” என்று கையெழுத்திட்டுப் பதிவு செய்தார்.
 • புரட்சிக் கவிஞரின் கவிதைகளை தொடுத்து முதலாவதாக “பாரதிதாசன் கவிதைகள்” என்று அச்சிட்டு புத்தகவடிவில் கொண்டு வந்தது குத்தூசி குருசாமி குஞ்சிதம் குருசாமி ஆகியோர்தான். வடவர் ஆதிக்கம் பற்றி கவிதை எழுதியதாலோ என்னவோ டெல்லி “இலக்கியவாதிகள்” இவரது கவிதைகளை கண்டுகொள்ளாமல் அவர் மறைவிற்குப் பிறகு பிசிராந்தையார் நூலுக்கு சாகித்திய அகாடமி விருந்தளித்தனர்.
 • அண்ணா, கலைஞருக்கு முன் திரைப்படத்திற்கு கவிதை வசனம், பாடல்கள் எழுதச் சென்ற முதல் திராவிடர் இயக்கக் கவிஞர் பாரதிதாசன். இன்றைக்கும் இவரின் திரைப் பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
 • பாரதிதாசன் பரம்பரைச் கவிஞர்கள் என்று ஒரு பெரிய கவிப்பட்டாளமே புரட்சிக் கவிஞரின் பாணியைப் பின்பற்றி கவிதையினை எழுதிப் பெரும் புகழ் பெற்றனர்.
 • அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் பேராசிரியர் அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் பல அரசியல், சமூக, நட்சத்திரப் பேச்சாளரெகள் புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டாமல் பேசுவது மிகவும் குறைவு.
 • பாரதியாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசாலாம். ஆனால் பாரதிதாசனைப் பற்றிப்பேச அவரது கவிதைகளை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதற்கும் ஒரு துணிவும் வேண்டும்.
 • 1944-ல் சிறுகதைக்குப் புகழ் பெற்ற புதுமைப்பித்தன் பாரதிதாசன் பற்றி எழுதிய ஓர் அரிய கட்டுரையை தேடிப் பிடித்து வாசித்தால் பாரதிதாசனின் பெருமைகள் புலப்படும். பாரதியார் எழுதிய கவிதைகளில் முக்கியமானவை பாரதிதாசன் என்று அவரை கவிதைகளில் முக்கயிமானவை பாரதிதாசன் என்று அவரை கவிதையாகவே வர்ணித்திருப்பார்.
 • “இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”

” தூண்டா விளக்காய்த் துவங்கும் பொருமாட்டி”

“கிளம்பிற்றுக்காண் தமிழ்ச்சிங்கச் கூட்டம்

கிழித்தெறியதுத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை”

“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது

சிறுத்தையே வெளியில் வா”

மேற்கண்ட கவிதை வரிகளை படித்தோ அல்லது யார் மூலமாவது கேட்காதவர்கள். தமிழ் நாட்டில் யாரும் இல்லை.

 • பாரதிதாசன், கேஎஸ், பாரதிதாசன். கே.எஸ். ஆர். புதுவை கே.எஸ்.ஆர்.நாடோடி வழிப்போக்கன் அடுத்த வீட்டுக்காரன் சுயமரியதைக்காரன், வெறுப்பன், கிறுக்கன், கிண்டல்காரன், அரசு, கைகாட்டி, கண்டெழுதுவோன், என்ற பெயர்களிலும் வேறு.

சில பெயர்களிலும் கவிதை கதை கட்டுரைகள் எழுதித் தமிழர்களைத் தம் பால் ஈர்த்தார்.

 • புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் அவைத் தலைவராகவும் பணியாற்றினார்.
 • புரட்சிக் கவிஞர் என்று தந்தை பெரியாரும். புரட்சிக் கவி என்று அண்ணாவும் அழைத்தனர். அவரது கவிதையால் ஊக்கம் பெற்ற தமிழர்கள் இன்றும் அவர் புகழ் பாடுகிறார்கள் என்றால் அவரின் கவிதைத் தாக்கத்தின் வீச்சு எப்பேற்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாழ்க புரட்சிக் கவிஞர் !

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்