இன்வெர்ட்டர் ஏ/சி (A/c) – மின்சாரம் சேமிக்கும் கோடை நண்பன்   

0
110
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

                     அடிக்கிற வெய்யிலுக்கு படம்புடிக்குதோ இல்லையோ ஒரு ரெண்டுமணி நேரம் ஏசியில உட்காந்துட்டு வரலாம் என்றே திரையரங்குக்கு செல்வோம் இன்று அதிகம். அந்த அளவிற்கு கோடை தன் கைவரிசையை காட்டி வருகிறது. ”வெய்யில்ல எதுக்கு வெளிய அலஞ்சிகிட்டு, பேசாம வீட்லயே இருப்போம்” என்று வீட்டில் விடுமுறையை கழிப்பவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்குமேல் அனல்காற்றின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த நிலமையை சமாளிக்க ஒரு சிறந்த வழி வீட்டில் ஏசி பொருத்திவிடுவதுதா. ஒரு காலகட்டத்தில்  உயர் வருவாய் பிரிவினர் மட்டுமே பயன்படுத்தி வந்த ஏ/சி இன்று நடுத்தர மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வீடு, அலுவலகம் என அனைத்திலும் ஏ/சி யை பொருத்தி பயன்படுத்திவருகின்றனர்.

           குழந்தைகளுடன் ஷாப்பிங் செல்வோர் முன்பெல்லாம், பெரிய கடைதெருவுக்கு சென்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கடை என்று ஏறி பொருட்களை வாங்குவார்கள். ஆனால் இப்போழுதோ, எல்லோருடைய தேர்வும் பெரிய மால்களாகத்தான் இருக்கிறது. அதற்கு எல்லா கடைகளும் பக்கத்துபக்கத்தில் ஒரே இடத்தில் இருப்பது மட்டும் அல்ல, அங்கிருக்கும் ஏ/சி வசதியும் ஒரு முக்கியமான காரணம்.  வெய்யில் வேர்க்க விறுவிறுக்க அலையாமல் சில்லென்ற காற்றுவாங்கியபடி ஷாப்பிங் செய்ய யாருக்குதான் பிடிக்காது. ஆதனால்தான் இன்று வியாபாரிகளும் உடையகம் முதல் உணவகம் வரை எல்லாவற்றிலும் ஏ/சி வசதியுடன் என்று விளம்பரப்படுத்த தவறுவதில்லை.

நாம் வசிக்கும் வீட்டின்  அறையின் அளவை பொருத்து எவ்வளவு டன் உள்ள ஏ/சி தேவைப்படும் என்று கணக்கிட்டு வாடிக்கையாளரின் தேவை அறிந்து ஏ/சி பொருத்தும் கம்பனிகள் இருக்கின்றனர். சிலர் வீடு முழுவதும்கூட ஏ/ழி வசதி பொருத்திக்கொள்வதும் உண்டு. செலவு என்பது குறிப்பிட்ட மொத்த செலவு ஒரு வருடம் செய்துவிட்டால் போதும், அவ்வப்போது பராமரிப்பு செலவுகள் தான் ஆகும். இன்று ஏ/சிகள் நவீன வடிவில் சிறியதான இடத்தில் பொருத்தி கொள்ள கூடியதாக வந்துள்ளது. முன்பு போல் ஜன்னல் பகுதியில் தான் பொருத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஏ/சியின் இத்தனை வகைகளா :

       ஏ/சி யை  அதன் காற்று வெளியேற்றும் திறன், எடை  பொருத்து வகைபிரிக்க படுகின்றன. 1 டன், 1.5 டன், 2 டன் என்ற அளவுகளில் கிடைக்கின்றன. ஸிபிலிட் ஏசிகள் பெரும்பன்மையாக விற்பனை செய்யப்படுகின்றன.

       மேலும் குளிர்சாதன பெட்டிகள் ஆட்டோமெடிக் தொழில் நுட்பத்துடன் அறை வெப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளகூடிய வகையில் உள்ளன. நம் உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தை உள் வாங்கி அதற்கேற்ப அறையின் தப்ப வெப்ப நிலையை சரிவிகிதமாக வைத்திருக்கும் நவீன தொழில்நுட்பமும் உண்டு.

        நாம் நேரத்தை செட் செய்து விட்டால் அந்த நேரத்தில் தானே இயங்கும்  அல்லது நின்று விடும்  டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் உள்ளன.

அதெல்லாம் சரி கரண்ட் பில்லு எகிறுமே :

      இப்படி கவலைப்படுவர்களுக்காகத்தான் ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மின் வசிறி ஏற்படுத்தும் மின் உபயோகத்தை விட சற்று கூடுதலான அளவு மின்சாரத்தை மட்டுமே செலவு செய்யகூடிய மின் சேமிப்பு குளிர்சாதன பெட்டிகள் உள்ளன். நாம் வாங்கும் குளிர்சாதன பெட்டியின் நட்சத்திர குறியீடுகள் அவற்றின் மின்சார சேமிப்பு திறனை குறிக்கும் குறியீடுகள்..எவ்வளவு ஸ்டார் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு மின்சாரம் சேமிக்கப்படும்.

மேலும் சுற்றுபுற சூழலை மாசுபடுத்தாத புதிய வகை குளிர்சாதன பெட்டிகள் வந்துள்ளன இவை பூமியின் வெப்பத்தை அதிகரிக்காமல் நமது இல்லத்தின் வெப்பத்தை குறைக்கும்.

இன்வெட்டர் ஏ/சி:

   மின் தடை என்பது இப்பொது சகஜமாகி வருகிறது. நம் சூப்பர் ஸ்டார்கள் சினிமாவில் சொல்லும் வசனம் போல் எப்போது வரும் எப்போது போகும் என்றே சொல்லமுடியாதது மின்சாரம்.  அவ்வாறு மின்சார தடை நேரங்களில் பெரியவர்கள் காற்றோட்டமாக வெளியே சென்று தப்பிவிட வழி உண்டு, ஆனால் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் பெண்கள் நிலைதான் மிகவும் மோசம்.  இரவில் என்றால் தூக்கமின்றி நாமும் குழந்தைகளும் பெரிய இன்னல்களுக்கு ஆட்பட நேரும். இத்தகைய பிரச்சனை தீர்க்க நினைத்த குளிர் சாதனை பெட்டி தயாரிப்பாளர்கள் மின்சார தடைநேரத்தில் இயங்க்கூடிய இன்வெர்ட்டர் ஏ/சி யை தயார் செய்துள்ளனர்.

    பெரிய வீட்டில் அனைத்து பகுதியும் இயங்ககூடிய பெரிய இன்வெட்டர்கள் பொருத்தினாலும் வீடு முழுதும் மின்சாரம் கிடைப்பது கடினம். மேலும் இன்வெர்ட்டர் பொருத்த முடியாத வீட்டினரும் தங்களுக்கு என புதிய இன்வெட்டர் ஏ/சி பொருத்தி கொள்ளலாம்.

       இந்த ஆண்டு கண்டிப்பாக என் வீட்டிற்கு ஏ/சி போடுவேன் என் று சபதம் எடுத்தவர்கள் இனி வாங்க போகும் போது இன்வெர்ட்டர் ஏ/சி வாங்கிடலாம்.

       இன்வெர்ட்டர் ஏ/சி ஈ.பி பில்லை பற்றி கவலைப்படாமல் நாம் சில்லென்ற காற்றை அனுபவிக்க நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்