பெருகி வரும் நகரமயமாக்கலில் நாம் நம் சுகாதாரத்தை காப்பாற்றுவது என்பது ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. இதில் பெண்களுக்கு என்றால் அவர்கள் தங்கள் சருமத்தையும், முக்கியமாக முக அழகையும் காப்பாற்றும் பெரும் கடமை இருக்கிறது. இன்றைக்கு ஆண்கள் அழகு நிலையங்களே அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் ப்யூட்டி பார்லர்கள் தெருவுக்கு தெரு முலைத்திருப்பது இதற்கான தேவை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது.
இன்று புதிதாக அறிமுகமாகும் ஒரு சோப்பு விளம்பரத்தை கவனித்தால், அவர்கள் முதலில் சொல்லும் ஒரு விஷயம் ”வெய்யினால் கருத்திருக்கும் உங்கள் முகம் மீண்டும் பட்டுபோல் பளபளப்பாகும்” என்பதுபோன்ற வாசகங்கள்தான். முக அழகை பராமரிக்க இன்று பெண்கள் பல்வேறு நடைமுறைகளில் ஈடுபடுகின்றனர். அவற்றில் மிக முக்கியமானது பேஷியல் எனப்படும் முகத்தில் செய்யப்படும் அழகு பராமரிப்பு.
தற்போது பனிக்காலங்களில் முகச்சருமம் மிகவும் வறட்சியாகவும். தோல்பகுதியில் வெள்ளை படிமங்கள் தோன்றும். இதனை போக்க அழகு சாதன கூடங்களுக்கு சென்று முகப்பொலிவு பேஷியல் செய்து வந்தாலும் அவை மறுபடியும் சில நாளில் அதன் பொலிவு குறைந்து விடும். இதனை போக்க நமது இல்லத்தில் உள்ள பொருட்களை கொண்டு சிறப்பான பேஷியல் செய்யமுடியும். வீட்டிலேயே செய்வதேல் இதற்கான செலவும், பார்லருக்கு சென்ரு வரும் நேரமும் நமக்கு மிச்சமாகும். வீட்டில் இருந்தபடியே வார இறுதிநாட்களில் ஹாயாக FMலோ, சிஸ்டத்திலோ மனதிற்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டே செய்துகொள்ளலாம்.
இயற்கையான பேஷியல் செய்வது எப்படி :
நாம் கடைகளில் கிடைக்கும் இரசாயன முகப்பூச்சுகளை கொண்டு பேஷியல் செய்வதை விட, இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை கொண்டு பேஷியல் செய்தால் நமது சருமம் போஷாக்குடன் திகழ்வதுடன், சிறந்த பொலிவுடன் திகழும். தோலின் இயற்கை தன்மையும் மாறாது. இதற்கான சில குறிப்புட்ட பொருட்கள் சிறந்த பலனை தருகின்றது.
பேஷியல் செய்வது என்பது நான்கு முக்கியமான வேலைகள் சேர்ந்தது. அதாவது சுத்தம் செய்தல், தேய்ப்பது, மசாஜ் மற்றும் மிருதுவாக்கல் போன்றவையாகும்.
முதலில் நம் முகத்தில் மேல் புறத்தில் படிந்திருக்கும் அழுக்கு, மணல்துகள், தூசு போன்ற மாசுக்களை சுத்தம் செய்ய வேண்டும். நல்ல ஸ்டீமரில் அல்லது கொதிக்க வைத்த நீரில் முகத்தை காண்பித்து ஆவிபிடிக்க வேண்டும். வேர்வையுடன் சேர்ந்து தோலில் உள்ள அழுக்கும் வெளியேறிவிடும். பின் ஒரு மிருதுவான துணியை கொண்டு வேர்வையை ஒற்றி எடுக்க வேண்டும். பிறகு நல்ல கொழுப்புடன் கூடிய பால் 2 டேபிள் ஸ்பூன் அத்துடன் அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணைய் கலந்து ஒரு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாக துடைத்து விட வேண்டும். இதனை செய்யும்போது மெதுவாக அவசரமின்றி பொறுமையாக செய்ய வேண்டும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக முகத்தை கழுவி விட வேண்டும்.
அடுத்து ஸ்கிரப்பிங் அதாவது முகச் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு 2 டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தேய்த்து விட வேண்டும். இல்லையென்றால் பால் கீரிம் உடன் மூன்று பாதாம் அரைத்து கலந்து தேய்த்து விடலாம். எண்ணெய் பசை சருமம் என்றால் தேன் மற்றும் ஓட்ஸ் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முடிந்ததும், மசாஜ் செய்ய துவங்கலாம்.
பல்வேறு முக மசாஜ் கிரீம்கள் தயாரித்து விற்கப்பட்டாலும் நாம் வீட்டில் தயாரிக்கும் கிரீம் மிகவும் பாதுகாப்பானது. பப்பாளி பழத்தின் சதைப்பகுதியுடன் பால் கலந்து பசை போன்று ஏற்படுத்தி கொள்ளவும். இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். மசாஜ் செய்ய ஆரம்பிக்கும்பகுதி கழுத்தில் இருந்து தொடங்கி மேலெழுந்துவாராக கன்னப்பகுதிக்கு வரவேண்டும். கன்னத்தில் மசாஜ் செய்ய கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் பயன்படுத்த வேண்டும். கன்னத்தில் விரல்கள் சுழற்சி என்பது வலதுபுறம் மற்றும் இடதுபுறம் என்றவாறு சுழன்று செய்தல் வேண்டும். கண்ணிற்கு கீழ் மற்றும் புருவங்கள், மூக்கு பகுதிகள் போன்றவற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் சருமத்திற்கு அப்ரிகோட் பழத்தின் சதைப்பகுதி தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம்.
கடைசியாக முகத்தை மிருது வாக்கல். மசாஜ் செய்து முடித்த பின் இந்த முகத்தின் பூச்சு மீது சூடான டவலை மேல் மூடி சற்று நேரம் பொருத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் முகசருமத்தில் உள்ள துளைகள் திறந்து போஷாக்கு ஏற்பட முடியும். ஃபேஷியல் முடித்து சிறிது நேரம் கண்களை மூடி மனதை ரிலாக்ஸ்டாக வைத்திருக்கலாம். தூக்கம் வந்தால் சிறிது தூங்கலாம்.
எழுந்ததும் உங்கள் முகம் உங்களுக்கே புதிதாக இருக்கும்.