4s Fluidic வெர்னா சென்னையில் அறிமுகம்
கார் தொழில்நுட்ப உலகில் இந்தியா தனித்துவமான ஒர் இடத்தை பெற்று வரும் நிலையில் இந்திய மாநகரங்களில் சென்னையும் ஒரு தனித்துவமான இடத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் பல வகையான புதுமையான கார்களை சென்னையில் அறிமுகம் செய்கின்றனர் கார் நிறுவனர்கள்.
இன்று சென்னை லீலாபேலஸ் நட்சத்திர விடுதியில் ஹ்யுண்டாய் கார் நிறுவனம் அதன் புதிய மாடலான 4s Fluidic வெர்னா என்ற காரை மிக பிரமாண்டமாக அறிமுகம் செய்தது இதில் Mr. Bs.Seo ஹ்யுண்டாய் நிறுவன MD மற்றம் CEO பேசுகையில் “எமது நிறுவனத்தின் கார்கள் எப்போதும் அந்தந்த நாட்டுக்கு ஏற்றாற்போல் நாங்கள் வடிவமைக்கிறோம். அந்த வகையில் தான் குடரனiஉ வெர்னா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் ஸ்டாhட்;கீ. (Smart key with push Button Start)
ஆட்டோமட்டிக் வெப்பக்கட்டுப்பாடு, ஆட்டோமட்டிக் முன்விளக்கு, உணவுப்பொருள்கள் குளிர்படுத்த சிறிய குளிர்பெட்டி, என பல அம்சங்களை இது கொண்டுள்ளது. மிக முக்கியமாக இதில் 6 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ஓர் கச்சிதமான கார் போல் உருவாக்கப்பட்டுள்ளது.