- அக்ஷய திருதியை அன்று நாம் வீட்டிலேயே மகாலட்சுமி பூஜை செய்து பால் பாயாசம் நிவேதனம் செய்து வழிபடலாம்.
- பித்ருக்களுக்கு தர்ப்பணம் தரலாம்.
- கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவை செய்யலாம்.
- மிருத்யுங்ஜய மந்திரம் சொல்லி ஹோமம் செய்யலாம்.
- அன்றையதினம் புண்ணிய நதிகளில் நீராடலாம்.
- குலதெய்வ கோயில்களுக்கு சென்று வழிபடலாம்.
- தான தர்மங்களை செய்யலாம்.
- வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள், உப்பு போன்றவைகளை வாங்கினால் நன்று.
- தங்கம் வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கலாம்.
- புதிய தொழில் மற்றும் கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
அக்ஷயதிருதியை அன்று வழிபடக்கூடிய கோயில்கள் :
அக்ஷயதிருதியை அன்று அனைத்து ஆலயங்களுக்கும் சென்று வழிபடுவது நலம். நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளுர் பெருமாள் கோயில், திருச்சி அருகே உள்ள வெள்ளுரில் உள்ள மகாலட்சுமி பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்காமீஸ்வரர் கோயில், ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் வழிபாடும், முக்கூடலில் நீராடுதலும் சிறப்பு. வண்டலுர் அருகே உள்ள ரத்தின மங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் திருக்கோயில், பெசண்ட்நகர் அஷ்ட லட்சுமி திருக்கோயில் போன்றவையும் அக்ஷய திருதியை அன்று வழிபடக்கூடிய திருக்கோயில்களாகும்.