அக்‌ஷய திருதியை – என்ன விசேஷம்

0
101
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

அக்ஷய திருதியை, சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாளாகும். நட்சத்திரம் , திதி போன்றவை நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவன. ஒவ்வொரு மாதத்திற்கு என சில குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றும் திதிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

திருதியை திதி என்பது திருமகளுக்குறிய திதி. அக்ஷயம் என்றால் அளவற்ற,குறையாத, வளர்தல், பெருகுவது என்று பொருள்படும். சித்திரை மாத அமாவாசசைக்கு பிறகான திருதியை நாளான்று சூரியனும், சந்திரனும் உச்சப்பலத்துடன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் அந்நாள் சிறப்பு பெற்ற அக்ஷய திருதியை நன்னாளாக கூறப்படுகிறது. இந்த வருடம் மே 9 ஆம் நாள் அக்ஷய திருதியை நாளாகும்.

சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்துள்ள நன்னாளே அக்ஷய திருதியை நன்னாள். அனைத்து செல்வ நலன்களையும் குறைவில்லாது அள்ளி வழங்கிடும். அக்ஷய திருதியை நாளை இந்துக்களும், ஜெயின் சமூகத்தவரும் மிக சிறப்பான திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். அக்ஷய திருதியை அன்று அனைத்து புதிய முயற்சிகள், திருமணங்கள், வியாபாரம், பொருட்கள் வாங்குவது, தானம் வழங்குவது யாகம் செய்தல் போன்றவை செய்யும் போது அனைத்தும் நற்பலன்களை அள்ளித்தரும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்