உன்னிக்கிருஷ்ணனுக்கு பெருமை சேர்த்த மகள் உத்ரா  

0
136
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

மதராச பட்டினம்’ ‘தெய்வ திருமகள்’,’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘தலைவா’ படத்திற்கு பின்னர் ‘சைவம்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய, பாடல் ‘அழகே…அழகே.’ ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் அனைவராலும் ரசிக்கப்பட்டு இதயம் தொட்ட இந்த பாடலை பாடியது உத்ரா என்கிற  பத்து வயது சுட்டி பெண். சிறு வயது முதலே கர்நாடக சங்கீதம் பயின்றுவரும் இவர்  நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான பிரபல பாடகர் உன்னிக்கிருஷ்ணன் மகள் ஆவாள்.

\

1994ல் வெளியான காதலன் திரைப்படத்தில் இடம் பெற்ற ”என்னவளே” என்ற பாடல்தான் உன்னிக்கிருஷ்ணன் பாடிய முதல்  திரைப்பாடல். ஏ.ஆர் ரகுமானின் இசையில் கேட்டவரையெல்லாம் மயக்கி முனுமுனுக்க வைத்த அந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. உன்னிகிருஷ்ணனை போலவே அவர் மகள் உத்திரா பாடிய முதல் திரைபாடலுக்கும் தேசிய விருது கிடைத்திருப்பது ஆச்சரியம்தான் அல்லவா.!

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்