உங்கள் குழந்தை நன்றாக படிக்க வேண்டுமா…..

0
68
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

என் குழந்தை சரியாக படிக்க மாட்டேன் என்கிறான். ஸ்கூலில் டீச்சர் சொல்லிக்கொடுப்பதை .ஒழுங்காக படிப்பதோ எழுதுவதோ இல்லை. கையெழுத்து சரியாக இல்லை. இது போன்ற குற்றச்சாட்டை சொல்லாத பெற்றோரே இன்று இல்லை. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு எற்படும் கற்றல் குறைப்பாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளாததேயாகும்.

டிஸ்லேக்சியா

            இது பள்ளி செல்லும் குழந்தைகள் படிப்பில் மந்தமாகவோ. மதிப்பெண் குறைவாகவோ எடுக்கும்போது தெரியவரும் ஒரு பிரச்சனையாகும், படிப்பதில் (டிஸ்லெக்சியா). எழுதுவதில் (டிஸ்க்ராஃப்பியா). கணக்கில் (டிஸ்கால்குலியர்) என்று ஏதாவது ஒன்றிலோ ஒன்றுக்கு மேற்பட்டதிலோ இவர்களுக்கு பிரச்சனை இருக்கும். இப்பிரச்சனை 2 முதல் 10 சதவிகித பள்ளிக்குழந்தைகளிடம் காணப்படுவதாகும். நரம்பியல் தொடர்பான இப்பிரச்சனையை சில சிறப்பு பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும் என்பது நம்பிக்கை தரும் உண்மை.

            படிப்பதில் சிரமம் உள்ளவர்கள் வார்த்தைகள் கண்டுபிடிப்பதிலும், புரிந்துக்கொள்வதிலும், வேகமாக படிப்பதிலும் கஷ்டப்படுவார்கள். வார்த்தைகளை தலைகீழகாவோ, மாற்றியோ, ஒரு வார்த்தையை விட்டு விட்டோ, ஒரு அடியையே விட்டு விட்டோ படிப்பார்கள்.

            எழுதுவதில் சிரமம் உள்ளவர்கள் (டிஸ்கிராஃ;பியா) மோசமான கையெழுத்துடனோ, எழுத்துப்பிழையிடனோ, மெதுவாக எழுதுபவர்களாகவோ, இலக்கணப்பிழையுடன் எழுதுபவர்களாகவோ, எழுதும் கை வலிப்பதாக அடிக்கடி கூறுபவர்களாகவோ இருப்பார்கள்.

            கணக்கில் சிரமம் உள்ளவர்கள் (டிஸ்கால்கூலியா) கணித விதிகளை ஞாபகம் வைத்துக் கொள்வதிலோ, புரிந்துக் கொள்வதிலோ சிரமப்படுவர். எண்களை சரியாக புரிந்துக்கொள்ள முடியாமலும், கூட்டுவது கழிப்பது போன்றவைகளை மாற்றி செய்பவர்களாகவோ இருப்பர்.

            பொதுவாக இம்மாதிரி பிரச்சனை உள்ள குழந்தைகள் ஓரிரு விக்ஷயங்கள் தவிர மற்றவற்றில் பிரச்சனை இன்றியும் அல்லது படிப்பில் வேறு ஏதாவது ஒரு துறை மித மிஞ்சிய திறமை உள்ளவர்களாவே கூட இருப்பர். உலகின் பிரபல விஞ்ஞானிகள், மேதைகள், அரசியல் பிரமுகர்கள், பெரிய செல்வந்தர்களுக்கும் இப்பிரச்சனை இளம் வயதில் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

            படிப்பில் எங்கு குழந்தைக்கு பிரச்சனை இருக்கிறது என்பதையே தெரிந்துக் கொள்ளாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் படிக்கவில்லை என்று குறை கூறுவதும், திட்டுவதும் அடிப்பதும் மட்டுமின்றி மற்ற நார்மலான குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசி அவமானப்படுத்தும்போது இக்குழந்தைகள் மேலும் மோசமான நிலைக்கே தள்ளப்படுகிறார்கள்.

            ஆனால் இன்று இக்குழந்தைகளுக்கென பிரத்தியேக பள்ளிகளும், முறைகளும், இதற்கென இவர்களுக்கேற்ற முறையில் பயிற்சியளிக்கக்கூடிய பயிற்சியாளர்களும், கல்வியாளர்களும் இருக்கிறார்கள் என்பதே பல பெற்றோர்க்கும் ஏன் ஆசிரியர்களுக்குமே கூட தெரியாத உண்மையாகும், மனநல ஆலோசர்களின் பங்கும் இதில் முக்கியமானது, டிஸ்லெக்சியா குழந்தைகளின் பிரச்சனையை ஸ்க்ரீனிங், அசெஸ்மென்ட் டெஸ்ட்கள் மூலம் துல்லியமாக கண்டறிந்து அறிக்கை அளித்தல், அவர்களின் தன்னம்பிக்கையைத்தூண்டி மன அழுத்தத்தை குறைத்து, பெற்றோருக்கு கவுன்சிலிங்  கொடுப்பது போன்றவற்றை மனநல ஆலோசகர் செய்வதுடன் அவர்களை அதற்கான பிரத்தியேக பள்ளியில் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செல்லவும் பரிந்துரைக்கிறார்.

            ஒவ்வோரு பள்ளியிலும் மனநல ஆலோசகர் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பிரச்சனை உள்ள குழந்தைகளை சோதித்து அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கு கவுன்சிலிங் கொடுத்து சிறப்பு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.

       ப்ரச்சனையை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கான தீர்வை மேற்கொண்டால், பெற்றோர் குழந்தை உறவும் மற்றும் ஆசிரியர் மாணவர் உறவும் இனிமையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்