வளம் பல தரும் வைகாசிமாதம்       

0
128
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

    ஜோதிட ரீதியில் வைகாசி மாதம் என்பது  ரிஷப ராசியில் சூரியன்  சஞ்சரிக்கும் காலம் ஆகும். சூரியன் தனது சொந்த வீடான சிம்ம ராசிக்கு பத்தாம் வீடான ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் இருக்கும் காலமே வைகாசி மாதம். சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் இருப்பதால் அனைவரும் இம்மாதம் நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு உரிய பலனை  வைகாசி மாதம்  நிச்சயம் வழங்கும்.  தமிழ் மாதம் பன்னிரண்டில் நான்கு மாதங்கள் ஸ்திர மாதங்கள் எனப்படும். அதில் முதல் மாதமாய் திகழும் வைகாசி மாதத்தில் நாம் எந்த காரியம் செய்தாலும் அது ஸ்திரதன்மை பெற்றிருக்கும் என்பது உறுதி. மேலும் வைகாசி மாதம் ரிஷபத்தில் சஞ்சரிப்பதால் அவரது சொந்த வீடான சுக்கிரன் அருளால் செல்வம், வசதி, சந்தோஷம், சுகம் என அனைத்து சுகபோகங்களையும் பெறலாம்.அதன் காரணமாய் தான் வைகாசி மாதத்தில் புதிய தொழில் தொடங்குதல் , திருமணம் , புதுமனைபுகுவிழா போன்றவை அதிகமாய் நிகழ்த்தப்பட்டன.

வைகாசி மாத்த்தில் முக்கிய விழாவாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் தான் ஆறுபடை முருகன்  சரவணப்பொய்கையில் பிறந்த நன்னாள். முருகனுக்கு மற்றொரு பெயர் விசாகன். வைகாசி விசாகத்தன்று முருகனை வணங்கி விரதமிருந்தால் மணமாகாதவர்களுக்கு திருமணம் நிகழும். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.  ஆறுபடை வீடுகளிலும் அன்றைய தினம் அலகு குத்துவது, பால் காவடி எடுப்பது என பல வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும்.

ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் அவதரித்த நன்னாள் வைகாசி விசாகமே. மேலும் வைகாசி மாதத்தில் பல ஞானியர்கள் அவதரித்துள்ளனர். வைகாசி பெளர்ணமி அன்று புத்தர்  அவதரித்தார். அன்றைய தினம் புத்த பூர்ணிமா என்றவாறு கொண்டாடப்படுகிறது. காஞ்சி மகா பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார். எக்குறையுமின்றி விசேஷங்கள் நடத்துவதற்கும், புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற மாதமான வைகாசி மாதம் வளர்ச்சி தரும் வளமான மாதம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்