இந்திய பெருங்கடல் எல்லை பகுதி இந்தியாவிற்கு சொந்தமா? சீனா கேள்வி

0
223
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்றால் மற்ற நாடுகளின் கப்பல்கள் அனுமதி அளிப்பது ஏன்? என்று இந்திய அரசுக்கு சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ  கேள்வி எழுப்பி உள்ளது. சீன அரசு தனது கடற்படையை விரிவுபடுத்தி வருகிறது.

இது குறித்து சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ இந்திய பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியா சொந்தம் கொண்டாடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கடல் எல்லை பகுதி என்பது அனைவருக்கும் சமம். இதனை இந்தியா சொந்தம் கொண்டாட முடியாது. இந்திய கடல் பகுதியில் உள்ள கடைக்கோடி பகுதி இந்தியாவிற்கு சொந்தம் என்றால் அதற்குள் ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்ரேலியா நாட்டுக்கு சொந்தமான  கடற்படைகள் செல்ல அனுமதித்தது ஏன்? இதனை இந்தியா விளக்க முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்