கோடையும் குழந்தைகளும் – ஒரு எச்சரிக்கை

0
185
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஒரு வருடத்திற்குள் நான்கு பருவகாலங்களும் மாறி மாறி வரும் நம் சீதோஷநிலையும் இதற்கு ஒரு உதாரணம். கால நிலைக்கேற்ப நம் உடலும் மாறிக்கொள்ளும் என்றாலும், சிலருக்கு பருவ நிலைகள் மாறும்போது சிலருக்கு தலைவலி, ஜுரம் என்று உடலில் உபாதகளை ஏற்படுத்தும். பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு இது ஒரு பிரச்சனைதான். அதிலும் முதல் குழந்தையை வளர்க்கும் தாய்மார்கள் எதற்கெடுத்தாலும் பயந்துகொண்டு குழந்தையை டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அவர்கள் பயம் பல சமயங்களில் தேவையற்றதாக இருந்தாலும், சீதோஷ நிலை மாறும் இதுபோன்ற சமயங்களில் அவசியமானதே. ஏனேன்றால் ஒரு பருவகாலம் மாறிவரும்போது அதனால் எற்படும் மாற்றம் குழந்தைகளை பொதுவாக பாதிப்படைய செய்யும். குழந்தைகளுக்கென்றே சில பருவ கால நோய்கள் காத்திருந்து வந்து தாக்கும். எனவே காலண்டரில் அக்னிநட்சத்திர நாளை தேடாமல் வெயில் சுட்டேரிக்க ஆரம்பித்ததுமே  குழந்தைகளை கோடைக்கால நோய்கள் ஏதும் அண்டாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

கோடைக்காலத்திற்காக காத்திருக்கும் நோய்கள் :

கோடைக்காலம் என்பது குழந்தைகளின் பள்ளிவிடுமுறை காலமாக அமைகிறது. எனவே எப்போது சம்மர் வேகேஷன் வரும் என்று குழந்தைகள் காத்திருப்பார்கள். கூடவே அவர்களுக்கேன சில கோடைக்கால நோய்களும் காத்திருக்கும். நோய்க குழந்தைகள் விடுமுறை காலத்தில் எந்த வெயிலும் எங்களை தாக்காது என்று விளையாடி வீட்டையும், ரோட்டையும் துவம்சம் செய்துவிடுவர். ஆனால் அக்காலத்தில் நோய்தாக்கம் ஏற்பட்டால் குழந்தைகள் மன அளவில் பெரிய பாதிப்பு அடைகின்றனர்.

கோடையின் போது தொண்டை வறட்சி, சளி, ஜுரம் போன்ற நோய்களோடு ஒருசில குறிப்பிட்ட நோய்களும் தாக்கூடும். அதவாது வெப்பத்தால் ஏற்படும் மயக்கம், வெடிப்புகள், அலர்ஜி, தண்ணீர் குறைவால் ஏற்படும் நோய்கள், உணவு மூலமாக ஏற்படும் நோய்கள் மற்றும் அம்மை நோய்கள்.

இவைதவிர சூரிய வெப்பத்தினால் உடல்வெம்மை அதிகரித்து மயக்கம், ஜுரம்போன்றவைஏற்படும். அதனைஉடனேஅறிந்து தீர்க்கவேண்டும்.

குழந்தைகள் அதிகமாக மணலில் விளையடுவதன் காரணமாக உடல்வெப்பம் தோலினை தாக்கிகொப்புளங்கள் மற்றும் வெடிப்புகள் உடலின் பலபாகங்களில் ஏற்படும். அதனை சிறு கொப்புளமாக இருக்கும்போதே குறைக்க வழிவகைசெய்யவேண்டும்.

சில குழந்தைகளுக்கு சூரியனினால்அலர்ஜி, மற்றும் வெப்பத்தினால் தோல்பகுதி முழுவதும் வறட்சி, மற்றும் தோல் நோய்கள் ஏற்படும்.

பொதுவாக வெய்யில் காலத்தில் தாகம் அதிகமாக எடுக்கும். தண்ணீரை அதிகமாக குடிக்க சொல்லுங்கள் ஆனால் எங்கும் கிடைக்கும் சுகதாரமற்ற நீரைகுழந்தைகள் பருகிவிட்டால் டைபாய்டு, மஞ்சள்காமாலை, பேதி, இருமல் போன்றவை ஏற்படும்.

நிறையநோய்பரப்பும்பூச்சிகள்வெயில்காலத்தில்பரக்கும். அவைஉணவுபொருள்மீதுஅமர்வதால்நோய்பரவும். எனவேசுத்தமானஉணவுஅருந்தவேண்டும். இல்லையென்றால்புட்பாய்சன்ஏற்படும் ஆபாயம் உண்டு.

வரும்முன் என்ன செய்யலாம் :

சலையோரம் விற்கும் வெட்டிய காய்கறி பழங்களை குழந்தைகளுக்கு வாங்கித்தறாதீர்கள். விலை மலிவாக உள்ளது என சாலை யோரகடைகளில் விற்கும் பழரசங்களையும் வாங்கிதராதீர். பழம் நல்லதுதான் என்றாலும் அவர்கள் உபயோகிக்கும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருக்கலாம். மேலும் அவர்கள் பயன்படுத்தும் மிக்சி, கலக்கும் கரண்டு, பரிமாறும் கண்ணாடி க்ளாஸ் போன்றவை சுகாதார சந்தேகங்களுக்கு உட்பட்டதே.

எனவே குழந்தைகள் அடம்பிடித்தாலும், கொஞ்சம் பொருத்திருந்து விட்டிற்கு வந்ததும் நம் வீட்டிலேயேத யாரித்தபழரசம்மற்றும்பழங்களைவெட்டி குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுக்கலாம்..

வெயில் தாக்கத்தை குறைக்க குழந்தைகளை அதிகமாக நீர்அருந்த செய்யுங்கள். அவை நம்வீட்டில் நன்றாக கொதித்த ஆரியநீராக இருப்பதுநல்லது. வெளியே விளையாட சென்றாலும் வீட்டில் இருந்து சுத்தமான தண்ணீர் எடுத்து சென்று பருககுழந்தைக்கு அறிவுறுத்துங்கள்.

அதிகமான தூரத்திற்கு செயலில் பயணிக்க அனுமதிக்காதிர்கள். சிறந்த சத்துள்ள சரிவிகித உணவை குழந்தக்கு சாப்பிடகொடுங்கள்.

எலுமிச்சைசாறு, மோர், இளநீர்போன்ற இயற்கை குளிர்பானம், அருந்தி குழந்தையை உற்சாகப்படுத்துங்கள்.

காலை, மாலை இருவேளை நல்ல சுத்தமான தண்ணீரில் குழந்தைகளை குளிக்கசொல்லுங்கள்.

விளையாட்டு அரங்கில் விளையாடிவிட்டு குழந்தைகள் வரும்போது கை, கால் அலம்பி விட்டு வரச்சொல்லுங்கள்.

சிறந்த இலகுவான பருத்தி ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவியுங்கள்.

நாம் தினம் பழக்கப்படுத்தும் நல்ல விஷயம்தான் குழந்தைகள் செய்யும் எனவே வெயிலின் தன்மை நோய்கள் ஏற்படும் விதம் குறித்து குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்து சொன்னால் அவர்களே அந்த பழக்கங்களை மெல்ல மெல்ல கடைபிடிக்க ஆரம்பிப்பார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்