முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 24வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21 தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.