தாய்மார்களின் முதல் தேவை?

0
51
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

தாய்மார்கள் அனைவரும் குடும்பம், வீட்டை பராமரிப்பது, சில சமயம் வீட்டைத் தவிர அலுவலகப் பணி என அனைத்தையும் கையாள்வது சற்று கடினமான விஷயம். இதன் காரணமாய் தாய்மார்கள் நாள்முழுவதும் கவனத்துடன் மற்றும் உள்நோக்கத்துடன் பணிபுரிவது கடினமே. பெரும்பாலும் இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், போன்றவைகளுக்கு உள்நோக்கம் எனும் ஊக்குவித்தலே நல் உதவி புரிகிறது. சில சமயம் இந்த ஊக்குவித்தல் தாய்மார்களுக்கு குறைந்துவிடுகிறது அவ்வாறு குறையும்போது அதை தடுக்கும் சில வழிமுறைகள்.

நமது செயல்களை என்ன, எப்படி என்பதை ஊக்குவித்தலே தீர்மானிக்கிறது :

நிறைய நேரங்களில் நல்ல ஊக்குவித்தலுடன் இருக்கும்போதே மனம் தெளிவுடன், திறந்த நிலையில் நல்ல செயல்களை செய்திட உதவும். இதனை பல அன்னையர்கள் மிக சுலபமாக செய்துவிடுகின்றனர். அதாவது, தினமும் இரவில் தூங்கும்முன் தன் குழந்தை மறுநாள் காலை பாத்ரூம் செல்வது முதல் அன்றைய நாள் முழுவதற்குமான பணிகளை பட்டியலிட்டு செய்கின்றனர். இது எப்படி முடிகிறது என்றால், நம்மை நாமே ஊக்குவிப்பதன் மூலமே. இதன் மூலமே அதிக நாட்கள் தாய்மையுடன் கவனிப்பு நிகழ்கிறது.

குறிக்கோள் :

ஊக்குவித்தலின் ஒரு முக்கிய பங்கு குறிக்கோள். நமக்கு என்ன தேவை அல்லது என்ன செய்யப்போகிறோம் என எதனையும் செய்யும் முன்பு நன்றாக புரிந்துகொண்டு செய்தல் வேண்டும். குறிக்கோள் ஒன்றே நமது மனநலனை தெளிவடைய செய்து நாம் வெற்றியை பெறுவதற்கு உதவி செய்கிறது.

உங்கள் பணிகளை பட்டியலிட்டுக்கொள்ளுங்கள் :

உங்கள் இலக்குகள், வேலைகள், பணிகளை ஒரு பட்டியலாக தயார் செய்துகொள்ளுங்கள்.இது அந்த நாள் முழுவதும் கவனுத்துடன் பணிகளை வெற்றிகரமாக முடிக்க உதவும். ஒரு இலக்கை முடித்தவுடன் அதனை டிக் செய்து கொள்ளுங்கள்.  அன்றையநாள் பட்டியலை முடித்து இரவில் பார்க்கும்போது அதுதான் உங்களது அடுத்தநாள் இலக்கை அடைய செய்வதற்கான உத்வேகமாகவும் ஊக்குவிப்பாகவும் இருக்கும்.

தள்ளிப்போடவேண்டாம் :

பணிகளையும், வேலைகளையும், சரிவர கவனிக்காதபோது உங்கள் இலக்கை அடைய முடியாது. எப்போதும் ஊக்குவிப்புத் தருபவை பணி முடிப்பு மட்டுமே. வேலைகளை தள்ளிப்போடும்போது கடைசிநேரத்தில் அவைகளை ஒட்டுமொத்தமாக செய்ய வேண்டிவரும் இதனால் ஊக்குவிப்பு குறையும். இதனை தவிர்க்கவும்.

அனைவருடன் கலந்துபேசுங்கள் :

தாய்மார்கள் தங்கள்  கவலைகள் மற்றும் உணர்வுகளை மனத்திற்குள்ளேயே பூட்டிவைப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடிவதில்லை. உங்கள் மனதில் உள்ள விஷயங்களை நண்பர், கணவர், அல்லது சிறந்த நிபுணர்களுடன், கலந்துரையாடுங்கள். பல தாய்மார்கள் சமூக செய்தி தளங்கள் மூலம் தங்கள் கவலைகளை பகிர்ந்ததன் மூலம் சிறப்பான நன்மைகளை பெற்றுள்ளனர்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி தாய்மார்களின் இலக்கை நோக்கி பயணிக்க சிறந்த ஊக்குவிப்பாக திகழ்கிறது. இதற்கு குறைந்த நேரமே போதுமானது. உடற்பயிற்சியின்மூலம் மனமும் உடலும் நல்ல உத்வேகத்துடன் செயல்படும்.

சிறந்த உணவை சாப்பிடுங்கள் :

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை கவனிக்கிறேன் என்று தங்களுக்கு தேவையான உணவை சரிவர எடுத்துக்கொள்வது கிடையாது. இதன்மூலம் அவர்களின் உடல்நலம் பாதிக்கும். தாய்மையின் லட்சியங்களை அடைய நல்ல உடல்நலமும் அவசியம் எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். இதன்மூலம் அன்னையர் ஊக்குவிப்புடன்,உத்வேகத்துடன் நாள்முழுவதும் செயல்படலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்