வெற்றி பெறுவது கடினம்தான். ஆனால் முடியாததல்ல….

0
61
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

 

 

வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதை அடைய முடியும். வெற்றியின் பாதை கடினமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய உதவும். குறுக்கு வழிகளையோ, மிகச் சுலபமானது, சுகமானது தான் வேண்டும் என்று நினைத்தால், நினைத்தது ஈடேறுவது கஷ்டம் தான். நாம் நினைத்த காரியத்தை முடிக்கவும் வேண்டியதை அடையவும் இரண்டு முக்கிய விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1.மிகச்சுலபமாக எதுவும் கிடைத்துவிடாது.

2.தோல்வியை பார்த்து பயப்படக்கூடாது.

மிகச்சுலபமாக எதுவும் கிடைத்துவிடாது :

இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒருவர் 100 கிலோ உடல் எடையுடன் இருக்கிறார். எண்பது கிலோவிற்கு வரவேண்டும் என்று விரும்புகிறார். கடையில் விற்கும் ஏதோ ஒரு மாத்திரையையோ, மருந்தையோ சாப்பிடுவது, சுலபமான ஒரு உடற்பயிற்சியை ஒரு கருவி மூலம் செய்வது, உடலை வறுத்தாமல் குறுகிய காலத்தில் ஏதோ ஒர் சிகிச்சையை செய்து உடல் எடையை குறைப்பது போன்ற விளம்பரங்களை நம்பி தன் பணத்தையும், நேரத்தையும் வீணடித்தால் உடல் எடை குறையுமா? குறையாது.

உடல் எடைக்கு ஏதேனும் நோய் காரணம் என்றால் அதை சரிசெய்வது, நொறுக்குத்தீனியை தவிர்ப்பது, சாப்பிட்ட உணவை உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி மூலம் எரிப்பது, வயது மற்றும் உழைப்பிற்கு ஏற்ப உடல் எடை மேலும் கூடாத வகையில் உணவு முறையை சரிசெய்வது போன்றவைகள் தான் உடல் எடையை குறைக்க உதவும். அல்லவா? ஐயோ இதெல்லாம் செய்யணுமா ரொம்ப கஷ்டமாச்சே என்றால், மெல்லிய உடல்வாகிற்கு ஆசைப்படலாமா.

நம் மூளை எப்போழுதுமே எதிர்ப்பில்லாதவைகளைத்தான் நாடும். ஆனால் நம் சுபாவத்திற்கு எதிராக நாம் செயல்பட்டால் தான் வெற்றியை அடைய முடியும்.

தோல்வியை பார்த்து பயப்படுவது :

தோல்வியை நினைத்து பயப்படுவதே நம்மை பல விஷயங்களை செய்ய விடாமல் தடுக்கும் பெரிய தடையாகும். அந்த வேலைக்கு அப்ளை செய்யணுமா. அது எனக்கு கிடைக்கலைனா? அந்த பெண்ணிடம் என் காதலை சொல்ல முடியாது. அவள் என்னை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறாளே? அவள் என்னை மறுத்துவிட்டால்?

 இப்படி தான் நம்மில் பலரும் நாம் அணுகும் காரியம் தோல்வியை தழுவினால் என்ன செய்வது என்று நினைத்தே அந்த காரியத்தை செய்யாமல் இருப்போம். ஆனால் வெற்றி பெற்றவர்கள் பல தோல்விகளை கடந்து வந்தவர்கள் தான். தோல்வி தரும் அனுபவமே வெற்றிக்கு அடித்தளமாகவும், மனதிற்கு உரமாகவும் இருக்கும். தோல்வியை பற்றிய பயம் எல்லோருக்குமே உண்டு. ஆனால் அந்த பயத்தை புத்திசாலித்தனமாக அனுபவ அறிவாக உபயோகப்படுத்திக்கொண்டால் வெற்றி நிச்சயம் தான்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்