ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் IIஇந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் அறிமுகம்
சென்னை, பிப்ரவரி 12, 2015: உலக புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இன்று காலை தங்களின், பெரிதும் எதிர்ப்பாக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சீரிஸ் II கார்களை அறிமுகப்படுத்தியது. தென்னிந்தியாவிலேயே சென்னையில் முதன் முதலாக இக்கார்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்தியாவின் முன்னனி தொழிலதிபர்களின் வெற்றிச்சின்னமாக விளங்கிவரும் ரோல்ஸ் ராய்ஸ் 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு புதிய மற்றம் வளரும் தொழில் முனைவோர்களையும் பிரபலங்களையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் லக்சுரி கோஸ்ட் சீரிஸ் II கார்களின் அசத்தலான வடிவமைப்பு ஆடம்பரமான தோற்றம், பிரத்யேகச் செயல்பாடு, உயர்தரம், நுணுக்கமான தயாரிப்பு, அதி நவின தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான பொறியியல் அம்சங்கள் ஆகியவைகளே அதன் உலகளாவிய வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.
அறிமுக விழாவில் பேசிய ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் காரின் ஆசிய பசிஃபிக் பிராந்திய பொது மேலாளர் ஸ்வென் ரிட்டர் கூறுகையில் “எங்கள் நிறுவனம் சர் ஹென்றி ராய்ஸ் வார்த்தைகளான “இருப்பதில் சிறந்ததை எடுத்து அதை மேலும் சிறப்பாக்குவது” என்பதற்கேற்ப புதிய கோஸ்ட் சீரிஸ் II கார்களை தயாரித்துள்ளோம். முக்கிய மெட்ரோவும் வசதி படைத்தவர், தொழிலதிபர்களும் நிறைந்த சென்னையில் இதை அறிமுகப்படுத்தவதில் பெருமையடைகிறோம்.
ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் இயக்குனர் வசந்தி பூபதி பேசுகையில் “ ஆடம்பரம் என்பதை சரியாக புரிந்துக்கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் சீரிஸ் II வெற்றிகரமான இந்திய தொழிலதிபர்களுக்கேற்ற சிறந்த வாகனமாக திகழ்கிறது’ என்றார்.