‘கொம்பன்’ படத்தைத் தடை செய்யக்கோரி ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போராட்டங்கள் நடத்தி வருகிறார். முன்பு கமல் ஹாஸனின் சண்டியருக்கு எதிராக சண்டை போட்ட கிருஷ்ணசாமி, இன்று கொம்பனுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றார். திரைப்படங்களுக்கு எதிராகப் போராடத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி என்று சீமான் கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.