டேப்லட் – மாத்திரை அல்ல வாழ்க்கையை மாற்றும் திரை

0
51
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

ன்றைக்கு வீட்டை விட்டு ஒருவர் கிளம்பும்போது தேவையானவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டாமா என்று சரிபார்த்துக்கொள்ளும்போது அதில் தவறாமல் இடம் பெறுவது அவருடைய மொபைல் . சில சமயங்களில், பர்சை மறப்பவர்கள் கூட மொபைலை மறக்க மாட்டார். அந்த அளவிற்கு இன்று ஒருவரின் தேவைகள் கையடக்க கருவிக்குள் சுருங்கிவிட்டன. தற்போது மொபைலுக்கு இணையாக டேப்லட்களும் அந்த இடத்தை பிடித்துவிட்டன. மொபைலைவிட பெரிய திரை, ஒரு கணினி அல்லது லாப்டாப்பில் இருக்கும் வசதிகள் அனைத்தும் என்பதுதான் டேப்லட். அதனால்தான் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவராலும் டேப்லட்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சிறந்த இயங்குதளம் (OS)

டேப்லட்-களை இயக்கும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற இயங்குதளம் மிக விரிவான வகையில் உள்ளன. அதாவது ஆண்ட்ராய்டு, iOS மற்றும் விண்டோஸ் போன்ற OSக்களில் பயன்பாடு உள்ளன. இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ios போன்ற OS-க்கள் தான் டேப்லட்களில் பிரதான இடம் பிடிக்கின்றன. விண்டோஸ் போன்றவை இதற்கு அடுத்த நிலையில் வருகின்றன.

ஆண்ட்ராய்டு என்பதில் அதன் புதிய வரிசைகள்தான் மேம்பட்ட OS என்றவாறு கொள்ள வேண்டும். லேட்டஸ்ட் வருகை எனும்போது கிட்காட் மற்றும் லாலிபாப், மாஷ்மெலோ (MARSHMALLOW) போன்றவை கொண்ட டேப்லட் வருகின்றன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில், ‘மிகப்பெரிய சந்தை பகுதியான கூகுள்-பிளே ஸ்டோர் உள்ளது. இதன் மூலம் கூகுள்நௌ, ஹேங் அவுட்ஸ், ஜிமெயில், கூகுள் காலண்டர், கூகுள் பிளே, கூகுள் மேப்ஸ் போன்றவை கிடைக்கின்றன.

Ios என்பது ஆப்பிள் டேப்லட் – ன் OS ஆகும். இதனை ஐபேசு என்று அழைக்கின்றனர். ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பல ஆப்ஸ்களை பெறமுடியும். விண்டோஸ் எனும் போது பழைய கணிணி போன்ற இயக்க வசதியை பெறமுடியும். அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற டேப்லட் என்பதில் இதன் சிறப்பு தனித்து விளங்குகிறது. மேலும் விண்டோஸ் ஸ்டோர் மூலம் 200,000 ஆப்ஸ்களை பெற முடியும்.

சேமிப்பு வசதி :

மிக அதிகமான சேமிப்பு வசதி கொண்ட டேப்லட் கிடைக்கின்றன. குறைந்த சேமிப்பு வசதி என்பது 4 GB முதல் அதிகபட்சம் 128 GB சேமிப்பு வசதி கிடைக்கின்றன. டேப்லட் என்பதில் 16 GB சேமிப்பு வசதி கொண்டது அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது. அதிக டவுன்லோட், சேமிப்பு வசதி தேவைப்படுவோர்  128 GB வசதிகொண்ட டேப்லட் வாங்கிக் கொள்ளலாம்.

காட்சி திரை :

டேப்லட் – ல் மிக முக்கியமானது காட்சி திரை. இதன் அளவு 7 இன்ச் முதல் 14 இன்ச் வரையில் கிடைக்கின்றன. காட்சி திரை, பகுத்தல் திறன், பிக்சல் எண்ணிக்கை என்பதை தீர்மானித்து டேப்லட் தேர்ந்தெடுக்கும் விதம் வேறுபடும்.

அப்ளிகேஷன் :

தனிப்பட்ட ஓர் இயக்க செயலி மூலமாக குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்வது. அதாவது ஆபீஸ் சாப்ட்வேர், கேம்ஸ், நியூஸ், இ-புக்ஸ், பத்திரிகைகள், மேப்ஸ், சமூகவலைதளங்கள் போன்றவை. டேப்லட்கள் இது போன்ற பல ஆப்ஸ்களை முன்பே பொருத்தப்பட்டவாறு கிடைக்கின்றன.

வை-ஃபை – 4G கனெக்‌ஷன் :

தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4G  எனப்படும் நாங்காம் தலைமுறை வேகத்துடன் இணைய வசதியை தருகின்றன.  தவிர எல்லா மாடல்களிலும் வை-பை இணைப்பு வசதியுடன் கூடிய டேப்லட்கள் வருகின்றன. மேலும் டேப்லட்கள் USB போர்ட்ஸ் மற்றும் SD கார்டு ரீடர்களுடன் வருகின்றன. இதன் முலம் பைல்களை ஷேர் செய்யவும், டிரான்ஸ்பர் செய்யவும் முடியும்.

மேலும் டேப்லட்டின் கேமரா வசதி, எடை மற்றும் பேட்டரி ஆயுள் போன்றவற்றை அறிய வேண்டும். பேட்டரி ஆயுள் என்பதில் 10 மணிநேரம் வரை நீடிக்கக்கூடிய பேட்டரியாக இருந்தால் நல்லது. அதுபோல் டேப்லட்கள் மெல்லிய மற்றும் எடை குறைந்தவாறு வருகின்றன.

தற்போது ஒரு டஜனுக்கு மேற்பட்ட டேப்லட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் உயர்தர வசதிகள், சிறப்பான விலை கொண்ட டேப்லட்கள் சந்தையில் வருகின்றன. மேற்கூறிய வசதியமைப்புகளை ஆராய்ந்து டேப்லட் வாங்கினால் நல்ல பயனுள்ளதாக அமையும்.

அலுவலக பணிகளுக்கு ஏற்ற டேப்லட் :

OFFICE USE

அலுவக பணிக்கான அலுவலகம், தொழில்முறை சார்ந்த தேவைக்கு எனும் போது முழு அளவு அதாவது 8.9 இன்ச் (அ) அதைவிட பெரிய திரை கொண்ட டேப்லட் பயன்படும்.  இதில் கீ போர்ட்டு வெளிபுற இணைப்பாக இருப்பது அவசியம். ஒவ்வொரு டேப்லட் தயாரிப்பு நிறுவனமும் அலுவலக பணிசார்ந்த இணைப்புகளை கொண்டவாறு டேப்லட்-யை உருவாக்கி தருகின்றன. உதாரணமாக, விண்டோஸ் 8.1 டேப்லட் –மைக்ரோசாப்ட் ஆபீஸ் உடன், ஐபேட் ஏர்-2 வில் ஐ வொர்க் சூட், போன்றவையுடன் வருகின்றன.

விளையாட்டிற்கு ஏற்ற டேப்லட் :

ஆப்பிள் ஐபேடு விளையாட சிறந்த டேப்லட். அதுபோல் ஆண்ட்ராய்டு டேப்லட்டில் உள்ள ஸ்நாப் டிராகன் 8.50  மற்றும் டெக்ரா K1 CPU சிறந்த கிராபிக்ஸ் –க்கு உதவிபுரிகிறது. டை-ஹார்ட் விளையாட விரும்புபவர்களுக்கு நிவிடியா ஷீல்டு டேப்லட் நல்ல பலனை தருகிறது.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்க்கு ஏற்ற டேப்லட் :

குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன் நிறைய குடும்ப பகிர்வுகளை கொண்ட டேப்லட் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் அமேசான் ஃபயர் டேப்லட் நன்மைபயக்கும். அமேசான் பையர் 6 மற்றும்

7 HD KIDS எடிஷன் அதிக வாரண்டி மற்றும் குழந்தைகளுக்கேற்ற பல சிறப்பம்சம் கொண்டது. இவை தவிர கிட்ஸ் பேலஸ், பெமிகோ, திகேட் இன் தி ஹேட், ஐஸ்டோரி ,டைம் ஸ்டோரி புக், பிக் ஆர்ட்ஸ் கிட்ஸ், டிப் டாப், ஸ்லிப் வாக்கர் ஜார்னி, டோகோ மினி, டோகோ டவுன் என்ற ஆப்ஸ்கள் பிரபலமாக உள்ளன. இவற்றில் குழந்தைகள் விளையாட்டு, படிப்பறிவு சம்பந்தமான சில விஷயங்கள், வரைதல் போன்ற பல குழந்தைகளுக்கான அம்சம் நிறைந்துள்ளது.

ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஸ்கள் :

நமது வீட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்திற்கு ஏற்ற ஓரே ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஸ்கள் வந்துள்ளன. எந்த நிறுவனப்பொருள் எந்த சாதனம் என்றாலும் தனிப்பட்ட ரிமோட் கண்ட்ரோலை நமது ஸ்மார்ட் போன் அல்லது டேப்லட் களில் பெற்று இயக்கிட இந்த வகை ஆப்ஸ் உதவி புரிகிறது. ஆண்ட்ராய்ட் டிவி,  ஓபன் ரிமோட் என்ற பல ஆப்ஸ்கள் உள்ளன.

ஸ்மார்ட்போன்களுக்கான ஆப்ஸ் என்பது பெருங்கடலாக உள்ளது. தற்போது எண்ணற்ற புதியபுதிய ஆப்ஸ் நமது அன்றாட செயல்களுக்கு ஏற்ப சுலபமான வடிவில் வருகின்றன. மேற்கூறியவை சில குறிப்பிட்ட ஆப்ஸ்களை மட்டுமே.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது வாழ்க்கை தத்துவம் மட்டுமல்ல டெக்னாலஜிக்கும் அது பொருந்தும். இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் நேரம் இன்னும் புது அப்டேட்கள் டேப்லட்டில் செய்யப்பட்டிருக்கும். அது பற்றி அடுத்த கட்டுரையில்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்