யுவதிகள் விரும்பும் குர்தீஸ்

0
61
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

சந்தை பொருட்களில் எதை எடுத்துக்கொண்டாலும் அவை,அதிக அளவில் பெண்கள் பயன்படுத்தும் பொருளாகவே இருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களில் இருந்து, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நவீன சாதனங்கள் ஆனாலும் பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவமும் அதில் அதிக வகைகளும் இருக்கும். அதேபோல்தான் அணியும் ஆடையிலும். ஆண்களுக்கு என்று எடுத்துக்கொண்டால், பேண்ட், சட்டை, டி-சர்ட், ஜீன்ஸ் , வேட்டி என்று பட்டியல் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால் அதே பெண்கள் அணியும் ஆடை வகை என்று எடுத்துக்கொண்டால் பட்டியல் நீளும். போதாதற்கு மேற்குறிப்பிட்ட பேண்ட் ,சட்டை என்று எல்லாவற்றையும் பெண்களும் அணியத்துவங்கி விட்டார்கள், வேட்டி தவிர(கேரளாவில் அதையும் அபகரித்துக்கொண்டார்கள்). அந்த வகையில் குர்தீஸ் என்பது நவீன யுக பெண்கள் அணியும் மற்றுமொறு ஆடை வகை.

குர்தீஸ் என்பது பெண்கள் அணிகின்ற குர்தா வடிவிலான மேல்சட்டை. ஜீன்ஸ் பேண்ட், சுடிதார் மற்றும் லெக்கிங்ஸ்க்கு ஏற்ப அணிகின்ற குர்தீஸ் இன்றைய நாளில் விதவிதமாக வருகின்றன. எண்ணற்ற வண்ணம், வடிவமைப்பு, கூடுதல் கட்டிங்ஸ் மற்றும் அழகிய நெக்குகள் என பலமாடல்கள் வருகின்றன. பருத்தியிலான காட்டன் குர்தீஸ் முதல் ஜார்ஜெட், டஸ்ஸர், காட்டன், பட்டு மற்றும் பூனம் துணிகளில் குர்தீஸ் உருவாக்கப்படுகின்றன.

குர்தா என்பது நீள்சதுரவடிவிலான ஆடையாகும், அரேபிய நாடுகளில் உடுத்தப்பட்ட தாவாப் என்ற ஆண்கள் ஆடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு எனும் போது அதுவே குர்தீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நீண்ட மற்றும் குட்டை வடிவில் கிடைக்கின்றது. பெண்கள் தினமும் அணிகின்றவாறு இலகுவான அதேசமயம் கச்சிதமான வடிவமைப்பில் குர்தீஸ்-களின் வகைகள் உலகளவில் பிரபலமாக உள்ளன. பருத்தி, ஷிப்பான், பட்டு, கதர் குர்தீஸ்கள் அனைத்து காலங்களிலும் அணிய  ஏற்றவாறு உள்ளன. மேலும் உல்லன் குர்தீஸ்கள் குளிர்காலத்தில் அணிய சிறந்த ஆடையாக விளங்குகிறது.

குர்தீஸ் வடிவமைப்பும், வண்ணங்களும் :

குர்தீஸ் முன்பு பூக்கள் அதிகம் நிறைந்த வாறு உருவாக்கப்பட்டன. மேலும் டை & டை மற்றும் மலைவாழ் மக்கள் அச்சு பதிவு ஆடையாக உலா வந்தன. தற்போது. ஏராளமான எம்பிராய்டரி மற்றும் சரிகை, பூ வேலைப்பாடு நிறைந்தவாறும் வருகின்றன.

ஜீன்ஸ்-க்கு ஏற்ற குர்தீஸ் :

பெண்கள் அணிகின்ற அனைத்து வகை ஜீன்ஸ் பேண்ட் –க்கு ஏற்ற மேலாடையாக குர்தீஸ் விளங்குகிறது. முன்பு டி-ஷர்ட் தான் ஜின்ஸ்-க்கு நல்ல இணையாக இருந்தது. ஜீன்ஸ் க்கு ஏற்ற குர்தீஸ் என்பது அடர்த்தியான மற்றும் இலகு நிற குர்தீஸ் நன்றாக இருக்கும்.

ரேஷம் எம்பிராய்டரி லாங் குர்தீஸ் :

இவை லெக்கிங்ஸ் மற்றும் ஜீன்ஸ்க்கு அணிய ஏற்ற பிரத்யேகமான நீண்ட குர்திஸ். இதில் ரேஷம் எம்பிராய்டரியில் ஏராளமான பூ மற்றும் ஜிரிகை எம்பிராய்டரி செய்யப்பட்டு வருகின்றன. கழுத்து பகுதியில் ஆடை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதில் பல வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்தீஸ் மற்றும் கண்ணாடி எம்பிராய்டரி செய்த குர்தீஸ்களும் வருகின்றன.

அழகிய டிசைனர் குர்தீஸ் :

டிசைனர் குர்தீஸ் என்பதில் சந்தேரி ஸிலிவ்ஸ், டாப்ஸ்டிட்ச், மடிப்பு கொண்ட யோக் ஷார்ட் குர்தா, டிரிம், சைடு டை, பார்டர் வைக்கப்பட்ட கப், பிளைன் குர்தீஸ், ஸ்கூப் நெக் ஷார்ட் குர்தா என்று பல வகைகளில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

யோக் ஷார்ட் குர்தா என்பது ரவுண்ட் நெக் மற்றும் மார்பு பகுதியில் சிறுசிறு மடிப்புகள் கொண்டவாறு தைக்கப்பட்டிருக்கும் குர்தாவின் கீழ் பகுதி இரு ஓரமும் சற்று வளைந்தவாறு இருக்கும்.  டஸ்ஸர் காட்டன் ஷார்ட் குர்தா என்பதில் அழகிய கண்ணாடி எம்பிராய்டரி செய்யப்பட்டு பளபளவென உள்ளது. சந்தேரி பிரிண்ட் மற்றும் ஜெய்பூர் பிரிண்ட் ஷார்ட் குர்தீஸ் வருகின்றன. ஜரிகை பார்டர் கொண்ட குர்தீஸ்களும் விதவிதமான டிசைன்களில் வருகின்றன.

காதி குர்தீஸ் :

சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட காதி துணிகளில் உருவாக்கப்பட்ட குர்தீஸ் என்பது அன்றாட வெளிப்பணிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. வெயில்காலத்திலும் , மழைகாலத்திலும் அணிய ஏற்றது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்