ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த மனுவில் குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
1223 மற்றும் 1453 வது பக்கங்கள் வெறுமையாக உள்ளதாகவும், அசல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் தகவல் அறிக்கையின் வடிவம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் மனுத் தாக்கல் செய்யப்பட்ட தேதி குறிபிடப்படவில்லை என்றும் பதிவாளர் குறிபிட்டுள்ளார். இதையடுத்து, இந்த குறைபாடுகளை சரிசெய்து புதிய மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை, கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ளது.