ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பட்டு – சேலைகளின் சோலை

0
253
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

ஒரு நாட்டின் ஒரு மக்களின் அடையாளமாக சொல்லப்படுவதில் உடைக்கு பெரும்பங்கு உண்டு. அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் அடையாளமாக சொல்லப்படுவது பெண்கள் அணியும் சேலைகள். இன்றைய நவநாகரிக உலகில் படித்த பெண்கள் அணிய என்னற்ற வகை உடைகள் வந்திருந்தாலும், திருமணம், மற்றும் சுப நிகழ்ச்சிகள் என்று வந்தால் பெண்ளின் முதல் தேர்வு புடவைதான். அதிலும் பட்டு புடவைகள்தான். பட்டு புடவைக்கு ஒரு பாரம்பர்யமே உண்டு என்று சொல்லலாம். காஞ்சீவரம், தர்மாவரம், மதுரைச்சுங்கடி, செட்டிநாடு காட்டன் சின்னாளம் பட்டு, கோவைக்காட்டன், ரேஷம் சில்க், மைசூர் சில்க், கசவு சேலை, வெங்கடகிரி, கத்வால், போச்சம்பள்ளி, ஆரணிப்பட்டு, கர்நாடாகாப்பட்டு, நாராயணப்பேட்டை பட்டு, வல்கலம், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

        எத்தனையோ பட்டு ரகங்கள் இருந்தபோது, காஞ்சீவரம் பட்டு என்றால் அதற்கு ஒரு தனித்துவமும் பெருமையும் வந்துவிடுகிறது என்பதே பெண்களின் கருத்தாகும். தமிழ் நாட்டில் உள்ள காஞ்சீபுரத்தில் தயாரிக்கப்படும் இச்சேலைகளின் தரத்திற்கும். அழகிற்கும் ஈடு, இணையே இல்லை என்று சொல்லுமளவுகுக்குப் பெயர்பெற்றவை இந்தச் சேலைகள். பெரும்பாலும் தென்னிந்தியாவில் மணப்பெண்கள் இந்தப் பட்டு சேலைகளையே அணிகிறார்கள். கோயில் அமைப்பில் வரும் அழகிய பார்டர்கள் இதனுடைய தனிச்சிறப்பாகும்.

மதுரை என்றாலும் இன்று பலருக்கும் பல அடையாளங்கள் நினைவுக்கு வரலாம். மதுரை மல்லி, மினாட்சி அம்மன் கோயில், உணவு பிரியர்களுக்கு ஜிகிர்தண்டா, ஆனால் பெண்களுக்கு கட்டாயம் நினைவுக்கு வரும் விஷயம் மதுரைச்சுங்கடி சேலையாகத்தான் இருக்கும். இளம் வயதுப்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்றாற்போல் இந்தச் சேலைகள்  இருக்கின்றன. ப்ளெயின் கலர்களில் கண்ணைக் கவரும் பார்டர்கள் வைத்தும், உடல் முழுவதும் பிரிண்டுகள் போடப்பட்டு, சரிகை பார்டர்கள் வைத்தும் அமர்க்களமாக வருகின்றன இவ்வகைச் சேலைகள். இவை முழுக்க முழுக்கப் பருத்தியால் செய்யப்பட்டவை ஆகும். இந்தச் சேலைகளில் உபயோகப் படுத்தும் வண்ணங்கள் இலைகளிலிருந்தும் செடிகளிலிருந்தும் எடுப்பதால் இவற்றை “ஈகோஃப்ரெண்ட்லி சேலைகள்” என்கின்றனர்.

      கேரள நாட்டின் பெருமை சொல்லும் கைகளால் நெசவு செய்யப்படும் கசவு சேலைகள் கேரளத்தின் பாரம் பரியமான சேலையாகும். சந்தனம் அல்லது வெள்ளை நிறத்தில் ப்யூர் கோல்டன் லேயர், காப்பர் கோட்டட் அல்லது ஆர்டிஃபிஷியல் சரிகைகளால் பார்டர்கள் நெய்யப்பட்டு அணிபவருக்குப் பளிச்சென்ற தோற்றத்தைத் தருபவை இந்தக் கசவு சேலைகள். வீட்டு விசேஷம் கல்யாணம், பண்டிகைகள் என்று அனைத்திற்கும் கேரளத்துப் பெண்கள் இவற்றைத் தவறாமல் உடுத்திக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு மாநிலத்திற்கென ஒரு தனித்தன்மை இருப்பதுபோல், நம் அண்டை மாநிலமான ஆந்திராவின் வெங்கடகிரி சேலைகள் காட்டன் மற்றும் பட்டில் ப்யூர் வெள்ளி சரிகை மற்றும் ப்ரொகேட் டிசைன்கள் பார்டர்கள் அமைய1ப்பெற்றிருக்கும் ப்ளெஸன்ட்டான நிறங்களில் தங்க நிறத்தில் புள்ளிகள், இலைகள், கிளிகள் அல்லது எளிமையான் ஜியோமெட்ரிகல் டிசைன்களிலும் அழகாக வருகின்றன

           தர்மாவரம், கத்வால், மங்களகிரி, போச்சம்பள்ளி சேலைகளும் ஆந்திராவில் நெய்யப்பட்டு தனக்கென, ஒரு இடைத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

        

மைசூர் பட்டு கர்நாடகாவின் ஈடு இணையற்ற சேலை எனலாம். மைசூர் பட்டில் ப்ளெயின் கலர், கான்ட்ராஸ்ட் கலர் மற்றும் பிரிண்டட் வேலை செய்யப்பட்டு சுருங்காத பாடர்கள் மற்றும் முந்தியிலும் வேலைப்பாட்டுடன் சரிகை டிசைன்கள் பார்ப்பவரைக் கொள்ளை கொள்கின்றன. மைசூர் பட்டு மிகவும் மென்மையானவை.

சந்தனக் கலரில் மெரூன் பார்டர், மாம்பலக் கலருக்கு பச்சை பார்டர், வெளிர் நீலத்திற்கு கருநீல பார்டர், குங்குமக் கலருக்கு ராமர் கலர் பார்டர் என்று கான்ட்ராஸ்ட் கலர்களிலும், செல்ஃப் கலர்களிலும் கலக்கலாக வருபவை மைசூர் பட்டாகும். இனி மேற்கண்ட ஊர்களில் எந்த ஊருக்கு சுற்றுலா சென்றாலும் தவறாமல் ஒரு பட்டு சேலை பார்சலோடுதான் வருவீர்கள் இல்லையா.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்