Sunday, March 20, 2016
                                                                                                                                                                                   
தொழில்நுட்பம்
இணையம்
Google மாற்றத்தால்இணையதள நிறுவனங்களுக்குஅதிரடி சிக்கல்
video
மணிக்கு 600 கிலோமீற்றர் வேகத்தில்ஓடிய ஜப்பான்ரெயில்
ஆராய்ச்சி
இனி எங்கும்இணைய வசதி
ஆராய்ச்சி
பார்வையை இழந்தவர்களுக்குகரு முட்டையில்இருந்து பார்வை
கைபேசி
புதிதாக அறிமுகம்செய்யப்பட்டுள்ளClean Reader எனும்Application
கணணி
Microsoft நிறுவனத்தினால்அறிமுகப்படுத்தப்படும்Windows Hello எனும்புதிய கடவுச்சொல்
ஆராய்ச்சி
செவ்வாயில்திரவ நிலையில்நீர் இருப்பதற்கானஆதாரம் கண்டுபிடிப்பு

0

இணைய ஜாம்பவானான கூகுள் Nexus எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றமை அறிந்ததே.

இந்நிலையில் அண்மையில் கூகுள் நிறுவனத்திற்காக Nexus ஸ்மார்ட் கைப்பேசிகளை LG நிறுவனம் வடிவமைத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஆனால் தற்போது LG நிறுவனத்துடன் Huawei நிறுவனமும் கூகுளிற்காக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கவுள்ளதாக மற்றுமொரு தகவல் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இதன்படி இந்த வருடம் கூகுள் நிறுவனம் இரு வகையான Nexus கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் Huawei நிறுவனம் வடிவமைக்கும் கைப்பேசியானது 5.7 அங்குல அளவும், 1260 x 1440 Pixel Resolution உடையதுமான OLED தொடுதிரையினை உள்ளடக்கியுள்ளதுடன், Qualcomm Snapdragon 810 Eight Core 64-Bit Processor இனைக் கொண்டு வடிவமைக்கப்படவுள்ளது.

0

சமூக வலைதளமான பேஸ்புக் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் தேடல் பொறி செயலியால், அத்துறையில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் நாம் எதாவது ஒன்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தேடல் பொறி செயலியின் உதவி தேவை.

அந்த வகையில் முன்னணியில் இருந்த யாகூ (yahoo) தேடு தளத்தை பின்னனுக்கு தள்ளி கூகுள் முதல் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் பேஸ்புக் புதிய தேடுதல் வசதியை தனது பயனாளர்களுக்கு வழங்குவதால் கூகுள் அச்சம் அடைந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சிலரின் பேஸ்புக் பக்கத்தில், அட்-லிங் எனும் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த புதிய வசதி மூலம் நீங்கள் விரும்பிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

அது தொடர்பான இணைதள லிங்குகளும் கிடைக்கும். மேலும் அந்த தகவல்களை நேரடியாக பேஸ்புக்கில் ஸெட்டசாக பகிர்ந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த துறையில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம் அச்சத்தில் உள்ளது. மேலும் பேஸ்புக்கின் இந்த புதிய தேடுதல் வசதி உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தால் கூகுலின் விளம்பர வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

தற்போது டிஜிட்டல் சாதனங்களில் தரவுகளை சேமிப்பதற்கு (Solid State Disk) SSD கார்ட்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை அளவில் சிறியதாகவும், அதிக சேமிப்பு கொள்ளளவினை உள்ளடக்கியதாலும் அதிகளவில் விரும்பிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது Fixstars நிறுவனம் 6TB கொள்ளளவினை உடையதும், 2.5 அங்குல அளவுடையதுமான SSD கார்ட்டினை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

இது 9.5 மில்லி மீற்றர் தடிப்பம் உடையதாகவும், 97 கிராம் நிறையைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

செக்கனுக்கு 540 MB வேகத்தில் தரவுகளைக் கடத்தக்கூடிய இந்த கார்ட்டின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Google மாற்றத்தால் இணையதள நிறுவனங்களுக்கு அதிரடி சிக்கல்

0

கூகுள் நிறுவனம் அதனுடைய தேடுதளத்தில் அதிரடி மாற்றத்தை நடைமுறைப் படுத்தியுள்ளதால், பல இணையதள உரிமையாளர்கள் வருமான இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி (Search Engine) தளத்தில் இன்று முதல் (21.04.15) அதிரடி மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதாவது, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவ்வகையான போன்களுக்கு மட்டும் பொருந்துமாறு கூகுள் தேடுதளத்தை புதிதாக மேம்படுத்தியுள்ளது.

இதன் மூலம், ஸ்மார்ட்போன் பிரவுசர் (Browser) வசதிகளை பொருத்தே இணையதளங்களும் செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இணையதளங்களுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

கூகுளின் இந்த அதிரடி மாற்றத்தால், இணையதள நிறுவனங்களின் தரவரிசை மதிப்பீடு (Google Ranking) பாதிக்கப்படுவதோடு, அந்த நிறுவனங்களுக்கு பெருமளவில் வருமான இழப்பும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, இந்த புதிய மாற்றமானது ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆங்கிலம் தவிர்த்து பிற உள்நாட்டு மொழிகளை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுவும் உலகளவில் உள்ள இணையதள உரிமையாளர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

Duda என்ற தனியார் வலைத்தள வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த Itai Sadan என்ற வல்லுனர் கூறுகையில், கூகுளின் இந்த அதிரடி மாற்றத்தினால் ஏற்படும் மோசமான விளைவுகளை பெரும் நிறுவனங்கள் இன்னும் உணராமலே உள்ளன.

இந்த மாற்றத்தால், இணையதளங்களுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைய வாய்ப்பு உள்ளதால், இணையத்தளம் மூலமாக செயல்படும் லட்சக்கணக்கான வலைத்தளங்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஸ்மார்ட்போன் உரிமையாளர்களுக்கு சிறந்த பிரவ்சிங் (Browsing) அனுபவத்தை வழங்கவே இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னால், கூகுள் இயங்குதளமான ஆன்டிராய்டு (Android) சேவையை மட்டும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என கூகுள் நிறுவனம் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஐ.நா கமிஷன் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மணிக்கு 600 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடிய ஜப்பான் ரெயில்

0

ஜப்பானிய ரயில் ஒன்று அதிவேகமாக ஓடுவதில் முன்னர் இருந்த சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

ஃபூஜி மலைப் பகுதிக்கு அருகே நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் மணிக்கு 600 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த ரயில் வண்டி மிக அதிக காந்த சக்தி மூலம் இயங்குகிறது. ஓடும் ரயில் தண்டவாளங்களைத் தொடாமல் அதியுயர் காந்த சக்தி மூலமே செயல்படும் இந்த வண்டி, ஈர்ப்பு விசை மற்றும் இதர சக்திகளை சமன்படுத்தி பயணிக்கும்.

தலைநகர் டோக்யோ மற்றும் நகோயா நகருக்கு இடையே 2027 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம் எண்ணியுள்ளது.

இந்த அதிவேக ரயில் வண்டி 283 கிலோமீற்றர் தூரத்தை நாற்பது நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கும்.

ஆனாலும் இந்தச் சாதனை வேகத்தை ரயில் பயணிகள் தமது பயணத்தில் அனுபவிக்க இயலாது என அந்த ரயில் வண்டி சேவையை நடத்தும் ஜப்பான் மத்திய ரயில்வே கூறியுள்ளது.

ஏனெனில் மிக அதிகபட்சமாக மணிக்கு 505 கிலோ மீற்றர் வேகத்திலேயே தங்கள் அதை இயக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

2003ஆம் ஆண்டு மணிக்கு 581 கிலோ மீற்றர் என்ற வேகத்தைப் பதிவு செய்த ஜேஆர் சென்ட்ரல், கடந்த வாரம் மணிக்கு 590 கிலோ மீற்றர் என்ற சாதனையை நிலைநாட்டியது. அதனை அந்தக் கம்பனியே முறியடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

மெக்லெவ் ரயில் வண்டி தண்டவாளத்தில் இருந்து 10 சென்ரி மீற்றர் உயரத்தில் வழுக்கிச் செல்வதுடன், மின்னேற்றப்பட்ட காந்தங்களின் மூலம் முன்னோக்கி உந்தப்படுகிறது.

இனி எங்கும் இணைய வசதி

0

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது கூகுள், அப்பிள் நிறுவனங்களைப் போன்று பல்வேறு முயற்சிகளிலும் காலடி பதித்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக Internet Drones எனும் திட்டத்தினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இது Drone ரக விமானங்களைப் பயன்படுத்தி கடற்பரப்பு, அடர்ந்த காடுகள் உள்ள பகுதிகளுக்கு இணைய வசதியினை வழங்கும் திட்டமாகும்.

இத்திட்டத்தினை வரவுள்ள கோடை காலப் பகுதியில் பரீட்சிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோலர் மின்சக்தியில் இயங்கவுள்ள Drone ரக விமானங்களின் உதவியுடன், இணையப்பாவனை வசதி அற்ற மொத்த மக்கள் தொகையில் 1.1 பில்லியன் தொடக்கம் 2.8 பில்லியன் வரையான மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பார்வையை இழந்தவர்களுக்கு கரு முட்டையில் இருந்து பார்வை

0

பார்வையை இழந்தவர்களுக்கு கரு முட்டையிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மீண்டும் பார்வையை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் வயதின் மூப்பு அடிப்படையில் கண்பார்வையை இழக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த முறை வெற்றியளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பார்வைக் குறைபாடு உடைய 18 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவர்களுக்கு மனித கருமுட்டையிலுள்ள ஸ்டெம்ஸ் செல்களை மாற்றீடு செய்ததன் மூலம் படிப்படியாக பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Clean Reader எனும் Application

0

E-books எனப்படும் இலத்திரனியல் புத்தகங்களை வாசிப்பதற்கு பல்வேறு application காணப்படுகின்றன. எனினும் குறித்த இலத்திரனியல் புத்தகங்களில் காணப்படும் அநாவசியமான சொற்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் அந்த Applicationகளில் காணப்படுவதில்லை.

ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Clean Reader எனும் Applicationனில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. தமது மகளின் வேண்டுகோளுக்கு இணங்க Jared மற்றும் Kirsten Maughan தம்பதிகளின் கூட்டு முயற்சியால் இந்த அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

iOS மற்றும் Andorid சாதனங்களில் இந்த application னைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக கோப்பு ஒன்றினை வாசிப்பதற்கு iTunes தளத்தில் அக்கோப்பினை பதிவேற்றம் செய்த பின்னர் குறித்த Application னில் திறக்க முடியும்.

இதில் அநாவசியமான சொற்களை தவிர்ப்பதற்கு 3 வடிகட்டும் (Filter) முறைகள் காணப்படுகின்றன. இதில் சில அநாகரிகமான சொற்களை அவற்றிற்கு நிகரான நாகரிகமான சொற்களாகவும் மாற்றித்தரும் வசதியும் காணப்படுகின்றது.

Microsoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்படும் Windows Hello எனும் புதிய கடவுச் சொல்

0

Microsoft நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் Windows இயங்குதளத்தில் கணனியிலுள்ள தரவுகளின் பாதுகாப்பிற்கென கடவுச் சொற்களை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளமை அறிந்ததே.

இக்கடவுச் சொற்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.

அதாவது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் Windows Hello எனும் புதிய கடவுச் சொல் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இது கருவிழி, கைவிரல் அடையாளம் அல்லது Face Recognition என்பவற்றினூடாக விண்டோஸ் 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணனி அல்லது ஏனைய சாதனங்களினுள் நுழையும் முறையாகக் காணப்படுகின்றது.

செவ்வாயில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

0

நான்கு வருடங்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து வரும் கியூரியோசிட்டி ரோவர்(Curiosity rover) விண்கலம் தற்போது அங்கு திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நீரானது செவ்வாயில் காணப்படும் Perchlorate எனும் இரசாயனப் பதார்த்தத்தினால் வளிமண்டலத்திலுள்ள நீராவியை உறுஞ்சுவதனால் சேமிக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர இங்குள்ள திரவங்கள் -70 டிகிரி செல்சியஸ் எனும் மறை வெப்பநிலையில் உறைந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கலாம் எனவும் இதனால் நுண்ணுயிர்கள் வாழும் சாத்தியம் இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியிலுள்ள 15 சென்ரி மீற்றர் உயரமான மணலில் உயர் மட்டத்திலான கதிர்ப்பு நடைபெறுவதனால் உயிர் வாழ்க்கைக்கு சவாலாக விளங்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sky Bet by bettingy.com