கர்நாடக அரசை தொடர்ந்து திமுக ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது.
1991-1996 காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கடந்த மே 11ம் திகதியன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.
தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் இன்று ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மற்றும் 7 பினாமி நிறுவனங்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து இம்மனுவை அன்பழகன் தாக்கல் செய்துள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.