Sunday, March 20, 2016
                                                                                                                                                                                   
1.சென்னை
மெட்ரோவில்பயணம் கட்டணத்தைகுறைக்க வலியுறுத்தல்– திருமாவளவன்
மெட்ரோ ரயில்விவகாரத்தில்கருணாநிதிக்குஜெயலலிதா கண்டனம்

சுற்றுலாவாசிகளின் சொர்க்க புரியாக திகழும் சிங்கப்பூர் மனம்கவரும் சுர்சாக அனுபவத்தை சுற்றுலா வருபவர்களுக்கு வாரி வழங்குகிறது. என்றென்றும் இளமையுடன், புதுப்பொலிவுடன் திகழும் சிங்கப்பூர் பயண அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு புதிய அற்புதமான அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு புதிய அற்புதமான வாய்ப்பை டைகர்ஏர் நிறுவனம் வழங்கியுள்ளது.

சிங்கப்பூரின் பொன்விழா  இந்தியா மற்றும் சிங்கப்பூரிக்கிடையே 50 ஆண்டு நல்லுறவை கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் சுற்றுலா கழகத்துடன் இணைந்து டைகர் ஏர் நிறுவனம் சிறந்ததோர் பயண வாய்ப்பை வழங்குகிறது.

ஐந்து இந்திய நகரங்களிலிருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து டைகர் ஏர் விமானங்களிலும் 50 % கட்டணம் தள்ளுபடி என அறிவித்துள்ளது.

சென்னை, திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி நகரங்களிலிருந்து பயணம் சியும் பயணிகள் இச்சிறப்பு சலுகையை ஜூலை 7 முதல் 15 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து பெறலாம். பயணம் செய்யக்கூடிய காலம் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 6 தேதி 2015 வரையில் ஆகும்.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல ஒருவழி பயனகட்டணம் என்பது ரூ 3799இல் தொடங்குகிறது. அனைத்து திரும்புகின்ற கட்டணம் ரூ. 7999 என்றவாறு உள்ளது.

இத்துடன் பொன்விழா கொண்டாட்டத்தின் அங்கமாக சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளும் பயணிக்க பிரத்யோக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டலில் தங்குவதற்கான சலுகை மற்றும் ஷாப்பிங் ஆப்பர்கள்,  முன்னுரிமை சலுகைகள் சிங்கப்பூரை உடனே காண தூண்டும் அளவிற்கு வழங்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வருமை புரிவோர் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் தற்போது இந்திய பயணிகள் சிங்கப்பூரை கண்டுகளிக்க டைகர் ஏர் நிறுவனம் சிறந்ததோர் யைப்பை வழங்கியுள்ளது. ஏராளமான ஷாப்பிங், கண்கவரும் பயணங்கள், சுவைமிகு உணவுகள் விருப்பமிகு விளையாட்டு என சிங்கப்பூரில் உற்சாகமாய் பயணிக்க ஏற்ற தருணம் இதுவே. டைகர் ஏர் விமானத்தில் சலுகை கட்டணத்தில் பயணிப்போம், சந்தோஷமான பயண அனுபவத்தை பெறுவோம்.

மெட்ரோவில் பயணம் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல் – திருமாவளவன்

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணத்தை மேற்கொண்டார்.

பயணத்தை மேற் கொண்ட திருமாவளவன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது “வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கு இது போன்ற ரயிலில் பயணம் செய்யும் வேளை நம் ஊரிலும் இது போல சேவையினை பெற்றுக்கொள்ள முடியாத என எதிர்பார்த்திருக்கிறோம். தற்போது நம் ஊரிலே வெளிநாடுகளுக்கு இணையாக இந்த சேவை வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதோடு வாகன நெரிசலையும் குறைக்கும் வகையிலும் இது அமையும் எனவும்,

மேலும் தெரிவிக்கையில் முக்கியமாக ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 40 ரூபாய் அறவிடப்படுகிறது. அதை குறைத்து 20 ரூபாய் என்றால் இன்னும் நன்றாக இருக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டணத்தை குறைக்க வலியுறுத்துகிறது.

மற்றும் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையே தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது மற்றைய பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்துகிறது. காரணம் சென்னையை பொறுத்தவரை அதிகமாக வாகன நெரிசல் ஆகிறது ஆதலால் மெட்ரோ ரயில் வரும் பட்சத்தில் இதனை கணிசமான அளவு குறைக்க வாய்ப்பு உள்ளது என அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் விவகாரத்தில் கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்

மெட்ரோ ரயில் விவகாரத்தில் கருணாநிதி மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா கண்டன அறிக்கையினை விடுத்துள்ளார். தங்களின் அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களின் மனங்களை குழப்புகின்றனர் என ஜெயலலிதா கண்டனம்.

மெட்ரோ கட்டணங்கள் குறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அறிக்கை விடும் வகையில் மெட்ரோ கட்டணங்கள் நிர்ணயிப்பது தமிழக அரசு அல்ல அதை நிர்ணயிக்கும் உரிமை சென்னை மெட்ரோ ரயில் நிருவனத்திர்க்கே உண்டு.

அதன் பின்னர் முதல் முறைக்கு பின்னர் சட்டப்படி ஏற்பாடு செய்யும் அமைப்பு கட்டணத்தை நிர்ணயிக்கும் என அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கூறுகையில் கட்டணம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளித்தவர் கருணாநிதி தான். மும்பை மெட்ரோ ரயில் கட்டணமே இங்கும் அறவிடப்படுகிறது என கூறியுள்ளார்.

Sky Bet by bettingy.com