மகளை தான் இயக்கம் படத்தில் கதாநாயகியாக்கும் அர்ஜூன்
இதனால், அர்ஜுனின் நடித்து, இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராக பணியாற்றினார். இந்நிலையில், அடுத்ததாக அர்ஜூன் இயக்கும் படம் ஒன்றில் ஐஸ்வர்யா நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பெண்ணை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ஐஸ்வர்யாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது, என்னுடைய அப்பா இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பயமாகவும் இருக்கிறது. அவர் ஒவ்வொரு நடிகர்களிடமும் தத்ரூபமான நடிப்பை எதிர்பார்ப்பார் என்று கூறியுள்ளார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவுள்ளனர்.
Comments
comments