ஐ திரைவிமர்சனம்

0 1615

i-movie-reviewநீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ஷங்கரின் “ஐ” படமானது தற்போது திரையரங்குகளை கலக்கி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக வெற்றியடைந்துள்ள இப்படம் அண்மைக்காலங்களில் தமிழ் சினிமாவில் மிக எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாகவும் இருந்துள்ளது.
2012 இல் ஷங்கரின் இயக்கத்தில் மாபெரும் வெற்றியடைந்த “நண்பன்” படத்திற்கு பின்னர் எந்தமாதிரியான ஒரு பிரமாண்டத்துடன் ஷங்கர் இப்படத்தை இயக்கியிருப்பார் என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.
“ஐ” படத்தின் கதைக்கு வரும் முன் என்னை மிரட்ட வைத்தது மூன்று விஷயங்கள். ஒன்று  வி எப் எக்ஸ் (VFX), இரண்டாவது மிரட்டும் சண்டைக்காட்சிகள், மூன்றாவதாக மேக்கப். நிச்சயமாக இம்மூன்று விடயங்களும் இப்படத்தை ஹாலிவூட் பட தரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மிக துல்லியமாக ஒவ்வொரு விஷயத்தையும் சரிபார்த்து உலக சினிமாவில் தமிழ் படத்திற்கான அங்கீகாரத்தை மிக அழகாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இனி படத்தின் கதைக்கு வருவோம். படத்தில் லிங்கேசன் என்ற கதாபாத்திரத்தில் பாடிபில்டராக நடித்துள்ள விக்ரமிற்கு மிஸ்டர் தமிழ் நாடாக வர வேண்டும் என்பதே கனவு. அதற்காக அவர் முயற்சி செய்து வரும் வேளையில், ஒரு நாள் அமி ஜாக்சனை சந்திக்கிறார். அவர் அழகில் மயங்கும் விக்ரம் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
மாடல் உலகில் கொடிகட்டி பறக்கும் அமி ஜாக்சனை எப்படியாவது காதலித்தே ஆகவேண்டும் என நினைக்கும் விக்ரம், மிஸ்டர் தமிழ் நாடு ஆகவேண்டும் என்ற கனவை மறந்து  லிங்கேசன் என்ற தனது பெயரை லீ என மாற்றி மாடலிங் உலகிற்குள் வருகிறார்.இறுதியில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.தங்கள் வருங்காலம் மிக அழகாக அமையவேண்டும் என கனவு காணும் இவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் திருப்பங்களால், தான் ஏற்கனவே, மிஸ்டர் தமிழ் நாடாக வர வேண்டும் என்ற கனவை விக்ரம்  நினைத்து பார்கிறார்.அவர் தன் கனவை நிறைவேற்றினாரா அல்லது லீ யாகவே வாழ்க்கையை தொடர்ந்தாரா என்பதே மீதி கதை.
மிக அழகாக கெட்டப் மாற்றங்களை அசத்தி காட்டியிருக்கிறார் விக்ரம். பல ஆண்டுகள் அவரது கடுமையான உழைப்பு இப்படத்தில் தெரிகிறது.அமி ஜாக்சன் மிக அழகான தேவதை. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்து தன் திறைமையை நிரூபித்துக் காட்டியுள்ளார்.ராம்குமார் மற்றும் சுரேஷ் கோபியின் கதாபாத்திரங்கள் இப்படத்திற்கு பெரிதும் துணை சேர்த்துள்ளன.உபேன் பட்டேலின் கதாபாத்திரம் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கலாம்.
நாம் ஏற்கனவே சொன்னது போல படத்தில் வி எப் எக்ஸ் தொழில்நுட்பம் மிக அருமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.பி.சி ஸ்ரீராமின் கமராவில் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது “ஐ”.இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்கள் அவரை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் கொண்டும் செல்லும் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில் “ஐ” உலக மக்களுக்கான ஒரு தமிழ் படம்.

Comments

comments

A2Z Cine
Cine News

NO COMMENTS

Leave a Reply