பிசாசு திரைவிமர்சனம்

0 201

பிசாசு மிஷ்கின் இயக்கி 2014 வெளிவந்துள்ள படம். வித்தியாசமான திரைக்கதைகளை தனக்கே உரித்தான பிரத்தியேக பாணியில் கொடுத்துவரும் மிஷ்கின் பிசாசு மூலம் திகில் பட இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

வித்தியாசமான கதை, பயத்தை விட துயரத்தை பிரதிபலிக்கும் வயலின் பின்னணி இசை, அருமையான வரிகளுடன் இனிமையான ‘நதி போகும் கூழாங்கல்’ பாடல், க்ளைமேக்ஸில் வரும் ஒரு திருப்புமுனை என்று படம் சற்று சுவாரசியமாகவே இருக்கிறது.

தமிழில் வெளிவந்த ‘அனந்த புரத்து வீடு’ ஆங்கில படமான ‘மம்மா’ போன்ற படங்களை நினைவுபடுத்தும் வகையில் இப்படம் இருந்தாலும் அனந்த புரத்து வீடு திரைப்படத்தில் இருந்த திரில்லும் மம்மா படத்தில் இருந்த திகிலும் இதில் இல்லையென்றே சொல்ல வேண்டும். பாத்திரங்களின் உணர்வுகள் சில இடங்களில் மிக அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் கதையோடு ஒட்டாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிறைய இடங்களில் நகைச்சுவையாக இருப்பது திகில் கதைக்கு பொருந்தவில்லை. ஒரு வேளை இது ஒரு நல்ல பிசாசு என்பதால் இருக்கலாம்.

படத்தின் நாயகன் சித்தார்த் (நாகா) விபத்து நடக்கும் இடத்தில் இருக்கிறார். இரத்த வெள்ளத்தில் இருக்கும் நாயகி பவானியை (ப்ரயாகா) காப்பற்ற முயற்சிக்க மருத்துவமனைக்கு சென்றதும் பவானி இறந்துவிடுகிறார். தன் கையை கொட்டியாக பிடித்தபடி இறந்துவிட்ட பவானியின் நினைவில் சித்தார்த் இருக்க அவர் வீட்டிற்கு பிசாசாக குடியேறுகிறார் பவானி.

பின்னர் சித்தார்த் பவானியை வீட்டை விட்டு விரட்டுகிறார இல்லை கூடவே வைத்திருக்கிறாரா என்பதே கதை. புதிய இசையமைப்பாளர் அரால் கொரோலி ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இசையமைத்திருக்கிறார்.

Comments

comments

A2Z Cine
Cine News

NO COMMENTS

Leave a Reply