என்னை அறிந்தால் திரைவிமர்சனம்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் கௌத்தம் வாசுதேவ் மேனன், மற்றொரு கம்பீரமான காக்கிச்சட்டையை நம் கண் முன் நிறுத்தியிரக்கிறார். ‘காக்க காக்க’ படத்தின் காதல் கலந்த கடமையுணர்வும் ‘வேட்டையாடு விளையாடு’ வின் திரில்லிருந்தும் மாறுபட்டு ஒரு துடிப்புமிக்க கடமையுணர்வு கலந்த காவலரின் வாழ்க்கையையும் அதில் அவரின் உணர்வுகளையும் நேர்த்தியான கதைக்களமாக அமைத்திருக்கின்றார் இயக்குனர்.
ஐந்து வருடங்களுக்கு பிறகு சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை எடுத்து விற்கும் ஒரு கும்பலை அடக்க மீண்டும் காக்கிச்சட்டையை எடுக்கிறார் சத்யதேவ். மேலும் விக்டர் தான் அந்த கும்பலின் தலைவன் என்பதும் தெரிய வருகிறது.
நல்ல வழியை தேந்தெடுத்த சத்யதேவ் மற்றும் தவறான வழியில் செல்லும் விக்டருக்கும் இடையே நடக்கும் தொலைபேசி சம்பாஷனை மூலம் மனிதர்களின் உணர்வுகள் எப்படி அவர்கள் வாழ்க்கையை நிர்னைக்கிறது என்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குனர் கௌதம், திரிஷா மற்றும் அனுஷ்கா பாத்திரங்களை மிக கச்சிதமாக செதுக்கி இருக்கிறார். அஜீத் தன் வசீகரமான தோற்றத்துடன் நான்கைந்து கெட்டப்புகளில் வந்து ரசிகர்களின் கவனத்தை முழுமையாய் தன் புறம் ஈர்த்துக்கொண்டுள்ளார்.
கௌதமின் இயக்கத்திற்கு முழுமை சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் டேன் மெக்கார்த்தர். முதல் பாதியில் லேசான தொய்வு இருந்தாலும் விக்டர் வந்த பின் கதையின் த்ரில் க்ளைமேக்ஸ் வரை விறுவிறுப்பாய் தொடர்கிறது.
Comments
comments