அனேகன் திரைவிமர்சனம்
அனேகன்! தனுஷ் நடித்து கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள விறுவிறுபுடன் காதலும் கலந்த கதை தான் அனேகன். ஏஜிஎஸ் எண்டர்மென்ட் தாயரித்துள்ள இந்த படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வெளிவந்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு வந்துள்ள இப்படம் தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி இளைஞர்களை பெரிதும் கவரும் வண்ணம் இருக்கிறது.
இப்படத்தின் கதை ஜென்மஜென்மாய் தொடரும் காதலை மையப்படுத்தியுள்ளது. ஒரு தனிநபர் நிறுவனத்தில் வேலை செய்யும் தனுஷை பார்த்ததும் காதலிக்க தொடங்கி விடுகிறார், உடன் வேலை செய்யும் அமிரா தஸ்தூர். இவ்வளவு அழகான பெண் எப்படி சுமாறாக இருக்கும் தன்னை இவ்வளவு ஆழமாக நேசிக்கிறாள் என்று தனுஷ் குழம்ப, இதே கேள்வி அமிரா மனதிலும் எழ அமிராவிற்கு விடை கிடைக்கிறது.
அது என்னவென்றால், இந்த ஜென்மம் மட்டுமின்றி கடந்த மூன்று பிறவிகளிலும் தனுஷ்தான் அவளுடைய காதலன் என்பதும் அவரே அமிராவின் ஆண்ம தோழன் என்பதால் எத்தனை பிறவி எடுத்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து இருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறார்.
இந்தக்கதையிலும் தனுஷ் அமிரா இணைவதை தடுக்கும் வில்லன் இருக்கிறார் போன பிறவிகளில் என்ன நடந்தது இந்த பிறவியில் என்ன நடக்கிறது. இருவரும் ஒன்றிணைகிறார்களா என்பது தான் படத்தின் விறுவிறுபான கதை.
எல்லா பாத்திரங்களிலும் வழக்கமான தன் அபார, இயல்பான, அசராத நடப்பினால் 100 சதவிகித வாக்குகளை அள்ளியிருக்கிறார் தனுஷ் அவருக்கு ஈடுகொடுத்து நன்றாகவே நடித்திருக்கிறார் அமிரா. ஜஷ்வர்யா தேவன் இந்த படத்தின் வித்தியாசமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் திடீரென்று தோன்றி ஆச்சரியபடுத்தியிருக்கிறார் கார்த்திக். ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பும் வழக்கம்போல் நன்றாகவே இருக்கிறது.
ஒம் பிரகாஷின் ஒளிப்பதிவும், ஸ்ரீனிவாஸ் மோகனின் விஷ்வல் எஃபெக்ட்டும் ஆச்சரியப்பட வைக்கின்றன. வழக்கம் போல் மெனக்கெடாமல் இசையமைத்திருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை, பாடல்கள் மட்டுமின்றி பின்னனியிலும் நெஞ்சை அள்ளுகிறது. கதை, இயக்கம் மட்டுமின்றி தொழில்நுட்ப அம்சங்களிலும் சிறப்பாக இருக்கிறது அனேகன்.
Comments
comments