Honor அறிமுகம் செய்யும் புதிய Smartphone

0
109
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

சம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிக்கு இணையான தொழில்நுட்பத்தினைக் கொண்ட புத்தம் புதிய Smartphone ஒன்றினை Honor நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Honor 4X எனும் இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Octa Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் Android 4.4 KitKat இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாகக் காணப்படும் இக்கைப்பேசியின் விலையானது 149.99 டொலர்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்