உலக சுற்றுச்சூழல் தினத்தன்று குடியிருப்பு புத்தாக்க சவால் திட்டத்தை தொடங்குகிறது

  • புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களான பேராசிரியர் கிரிஷண்ராவ் ஜெய்சிம், பிருந்தா சோமயா, & ராகுல் கட்ரிட்டோ ஆகியோர் இப்போட்டிக்கான நடுவர்களாக செயலாற்றுவார்கள்
  • வெற்றிபெறுபவர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும் கவர்ச்சிகரமான பரிசுகள்

சென்னை, ஜூன் 04, 2015 – உலக சுற்றுச்சூழல் தின அனுசரிப்புக்கு முன்பு, ‘குடியிருப்பு புத்தாக்க சவால் என்ற ஒரு போட்டி  திட்டத்தை செயின்ட்-கோபைன் இந்தியா தொடங்க இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க, தனது செயல்பாடுகள் தொடங்கப்பட்ட 350-ம் ஆண்டு கொண்டாடட் நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இதனை அந்நிறுவனம் நடத்துகிறது. குடியிருப்புவசதியில் உருவாகின்ற பிரச்சனைக்குரிய பகுதிகளை அடையாளம் காணவும் மற்றும் அவர்களுக்கான உரிய தீர்வுகளை கண்டறியவும் இச்செயல்திட்டமானது, சிந்தனையாளர்களையும் மற்றும் புத்தாக்க சிற்பிகளையும் வரவேற்கிறது.

இந்தியாவின் நகரங்கள் மிகத் துரிதமான வேகத்தில் நகரமயமாகிவருகின்றன. நகரங்கள் மீதான அழுத்தமும், சுமையும் அதிகரிக்கையில் சுற்றுச்சூழல் மீதும் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது. வாழ்விட துறையில் உலகளவில் முதன்மை நிறுவனமாக திகழ்வதால், செயின்ட்-கோபைன் புத்தாக்கமான மற்றும் எளிமையான குடியிருப்புவசதிக்கான தீர்வுகளை புரிந்துகொள்கிறது மற்றும் ஏதுவாக்குகிறது. அதிகரித்துவரும் மக்கள் தொகை அடர்த்தி, செங்குத்தான விரிவாக்கம் ஆகியவற்றை உணர்ந்துகொள்கிற அதே தருணத்தில் இத்தீர்வுகள் சுற்றுச்சூழல் தோழமையுள்ளதாக இருக்கவேண்டும் மற்றும் சமூக-பொருளாதார தளத்தில் அனைவருக்கும் அணுகுவசதியுள்ளதாக இருத்தல் அவசியம். திட்டமிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சிக்கான வழியாக வளங்குன்றா  நிலைக்கத்தக்க குடியிருப்புவசதி மற்றும் ஸ்மார்ட் நகரங்களுக்கான குடியிருப்புவசதி ஆகியவை இருக்கின்றன என்று செயின்ட்-கோபைன் நம்புகிறது.

இரு வடிவங்களில் நடைபெறுகின்ற போட்டி யான குடியிருப்புக்கான புத்தாக்க சவால், இத்துறையில் செயலாற்றும் தொழில்முறை நிபுணர்களையும், பொதுமக்களையும் ஒன்றிணைக்கிறது. தொழில்முறை நிபுணத்துவ பணியாளர்களுக்கான பிரிவில் நிலைக்கத்தக்க குடியிருப்புவசதி மற்றும் ஸ்மார்ட் நகரங்களுக்கான குடியிருப்புவசதி என்ற வகையினங்களில் இடையீட்டு நடவடிக்கைக்கான சாத்தியமுள்ள பகுதிகள் மீது தங்கள் சிந்தனைகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கட்டடக்கலை நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள், திட்டமிடல் பணியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தாங்கள் சந்தித்திருக்கிற தனது, தற்போது எதிர்கொள்கிற எந்தவொரு குடியிருப்பு பிரச்சனைகளையும் விவரமாக பட்டியலிடுவதன் வழியாக தங்களது பிரச்சனைகளை உலகறிய எடுத்துக்கூறி இப்போட்டிக்கு பங்களிப்பு வழங்குமாறும் பொது மக்களை இந்த போட்டி திட்டமானது வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறது. பொது மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கலின் அடிப்படையில் தங்களது தீர்வுகள் அடங்கிய திட்டங்கள் மீது இப்போட்டியில் பங்கேற்கும் தொழில்முறை நிபுணர்கள் கவனம் செலுத்தலாம் அல்லது தங்களது சொந்த யோசனைகளின் அடிப்படையில் இப்போட்டிக்கான தங்கள் தீர்வு திட்டங்களை சமர்ப்பிக்கவும் முடிவுசெய்யலாம்.

இந்த சவால் போட்டி நிகழ்வின் அறிமுகத்தின்போது பேசிய செயின்ட்-கோபைன் நிறுவனத்தின் ஃபிளாட் கிளாஸ் துறையின் தலைவர் (தெற்கு ஆசியா, மலேசியா மற்றும் எகிப்து) திரு. B . சந்தானம், “கடந்த 350 ஆண்டுகளாக மாற்றமடைந்துவருகிற உலகத்தினால் செயின்ட்-கோபைன் தாக்கங்களை சந்தித்து வந்திருக்கிறது. அதே வேளையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் உருவாக்கப் பணிகள், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் வழியாக உலகை உருவாக்கி மேம்படுத்துவதிலும் தனக்குரிய சொந்த வழியில் செயின்ட்-கோபைன் உதவியிருக்கிறது. இந்தியாவில் செயின்ட்-கோபைனின் தீவிரமான செயல்பாடு இந்த உண்மையை வலுப்படுத்தியிருக்கிறது. இந்த சவாலில் வெற்றி பெறுபவர்கள் சமுதாயத்தில் மாற்றத்தின் முகவர்களாக உருவாகுமாறும் மற்றும் இந்த மிக முக்கியமான தேவைக்கு பங்களிப்பை வழங்குமாறு திறனும் அதிகாரமும் உள்ளவர்களாக ஆக்குவதே இந்த போட்டியின் நோக்கமாகும். செயின்ட்-கோபைன் நிறுவனத்தின் 350வது ஆண்டுவிழாவின்போது, இந்தியாவல் நிலைக்கத்தக்க வாழ்விடத்திற்கான சான்றாதாரமாக உருவாவதன் வழியாக இன்னும் அதிகமாக இப்பொறுப்புறுதியை வலுப்படுத்த நாங்கள் திட்டமிடுகிறோம்,” என்று கூறினார்.

இந்த சவாலுக்கான விண்ணப்பங்கள், இப்போட்டி தொடங்கப்படும் நாளான 2015 ஜூன் 4-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 5-ம் தேதிவரை ஏற்றுக்கொள்ளப்படும். பங்கேற்பாளர்களும் மற்றும் ஆர்வலர்களும், அவர்களது செயல்திட்டங்களையும், கருத்துகளையும் ஆன்லைனில் www.saint-gobain\housinginnovationchallenge என்ற வலைதளத்தில் சமர்ப்பிக்கலாம். பேராசிரியர் கிரிஷண்ராவ் ஜெய்சிம், பிருந்தா சோமயா,  & ராகுல் கட்ரிட்டோ ஆகியோர் அடங்கிய பிரபல நடுவர்களின் குழுவானது, சிறந்த யோசனைகள் மற்றும் முன்வரைவு திட்டங்களை பரிசீலனை செய்து தேர்வுசெய்யும். அதன்பிறகு, செயின்ட்-கோபைன் ரிசர்ச் இந்தியா (SGRI)-ல் உள்ள குழுவின் உதவியோடு, இப்போட்டியில் வெற்றிபெற்ற நபர்கள் அவர்களது சிந்தனைகளையும், தீர்வுகளையும் செயலாக்கம் செய்யும் காலகட்டத்தில் இந்நடுவர் குழு அவர்களை வழிநடத்தும்.

தொழில்முறை பணியாளர்களுக்கான பிரிவின்கீழ் ஒவ்வொரு வகையினத்திலும் இச்சவாலில் வெற்றிபெறுபவருக்கு ரூ.2,50,000 என்ற தொகை பரிசாக வழங்கப்படும். ஒவ்வொரு வகையினத்தின்கீழும் முதல் மற்றம் இரண்டாம் இடத்தை பெறுபவர்களுக்கு முறையே ரூ.1,50,000 மற்றும் ரூ.1,00,000 என்ற பரிசுத் தொகை வழங்கப்படும். பொது பிரிவில் 10 சிறந்த புத்தக்கமான சிந்தனைகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.25,000 என்ற பரிசுத்தொகை வழங்கப்படும். அக்டோபர் 2015-ல் நடைபெறவிருக்கும் செயின்ட்-கோபைனின் 350வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது, இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இந்த வெற்றியாளர்களது சிந்தனைகளை பலன் தரும் வகையில் செயலாக்கம் செய்வது குறித்து SGRI பணியாற்றுகின்ற சாத்தியம் மட்டுமல்லாது, கவர்ச்சிகரமான பரிசுகளும் இவர்களுக்கு வழங்கப்படும்.

இந்தியன் கிரீன்  பில்டிங் கவுன்சில் (IGBC) இப்போட்டியின் அறிவு கூட்டாளியாக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது மற்றும் ஸ்மார்ட்  சிட்டிஸ் கவுன்சில் இந்தியா இப்போட்டியின் ஆதரவளிக்கும் கூட்டாளியாக இணைந்திருக்கிறது.

குடியிருப்புவசதி மற்றும் புத்தாக்க சவால் போட்டி மீது அதிக தகவலைப் பெற www.saint-gobain.co.in/housinginnovationchallenge -ல் லாக்-ஆன் செய்யவும்.

செயின்ட்-கோபைன் ரிசர்ச் இந்தியா (SGRI) குறித்து

செயின்ட்-கோபைன் நிறுவனம், அதன் 7வது குறுக்கு செயலாக்க ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையத்தை செயின்ட்-கோபைன் ரிசர்ச் இந்தியா என்ற பெயரில் சென்னையில் தொடங்கியிருக்கிறது. இந்தியாவிலிருந்து உருவாகிய புத்தாக்க சிந்தனைகளுக்கு ஆதரவளிக்கவும் மற்றும் அவற்றை மேம் படுத்தவும் இப்புதிய ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையம் முற்படும். இந்திய அறிவுத்திறன் மற்றும் படைப்புத்திறனின் ஊற்றுக்கண் மீதே ஒத்துழைப்பினை வழங்கி புதிய படைப்புகளை உருவாக்குவது இதன் குறிக்கோளாகும்.

தயாரிப்பு பொருட்களின் உருவாக்கம் (உள்@ர் சந்தை தேவைக்கான தொழில்நுட்ப மாற்றுகை), செயல்முறை உருவாக்கம் (செயல்முறை கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு, சோதிப்பு மற்றும் தர அளவீடு செய்தல்) மற்றும் குறுக்குவெட்டு தேவைகள் (வெப்பமான மற்றும் ஈரப்பதமிக்க பருவநிலைகளுக்கான தீர்வுகள் மற்றும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய விலைகளில் குடியிருப்பு வசதிகள்) ஆகிய துறைகளில் இப்பிராந்தியத்திலுள்ள செயின்ட்-கோபைனின் ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்பிரிவுகளுக்கு இப்புதிய சுரூனு மையம் உதவும்.

செயின்ட்-கோபைன் இந்தியா குறித்து

2015-ல், செயின்ட்-கோபைன் நிறுவனம் அதன் 350வது ஆண்டுவிழாவை கொண்டாடி வருகிறது. அதன் அனுபவம் மற்றும் தொடர்ச்சியாக புத்தாக்கம் செய்கின்ற அதன் திறனின் ஆதரவைக் கொண்டுவாழ்விடம் மற்றும் கட்டுமான சந்தையில் உலகளவில் முதன்மை நிறுவனமாகத் திகழும் செயின்ட்-கோபைன், வளர்ச்சி, ஆற்றல் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்கி உயர் செயல்திறன் கொணட் கட்டுமானப் பொருட்களை வடிவமைத்து, தயாரித்து மற்றும் வினியோகம் செய்கிறது. 2014ம் ஆண்டில் 41 பில்லியன் யூரோ என்ற விற்பனை அளவை எட்டியிருக்கும் செயின்ட்-கோபைன் 64 நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் 190,000-க்கும் அதிகமான பணியாளர்களைப் பெற்றிருக்கிறது. செயின்ட்-கோபைன் குறித்து அதிக தகவலைப்பெற வருகை தரவும்: www.saint-gobain.co.in

NO COMMENTS

Leave a Reply