எச்சில் துப்பினால் அபராதம்?
தூய்மை இந்தியா திட்டத்தை வலியுத்தி சட்டம் இயற்றிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புதல், குப்பை கொட்டுதல், மலம் கழித்தல் ஆகியவற்றை பெரும் குற்றமாக பாவிக்கும் சட்டத்தை கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளது. பொது இடங்களை அசுத்தம் செய்பவர்களுக்கு உடனடி யாக அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா வரும்மழைக்கால கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.