தெருவில் நடந்த போது நிழல் பட்டுவிட்டதாம் தலித் சிறுமியை தாக்கிய சாதிவெறியர்கள்
தலித் சிறுமியின் நிழல் பட்டுவிட் டதாகக் கூறி, அச்சிறுமியைத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சட்டர் பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது, கணே சாபுரம் கிராமம்.
இங்குள்ள புரான் யாதவ் என்பவர், கடந்த 13-ம் தேதி தெருவழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண் டிருந்த தலித் சிறுமியின் நிழல் அவர் மீது பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து, புரான் யாதவின் குடும்பத்தார் அந்த சிறுமியை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்துள்ளனர். மேலும், இனிமேல் உன்னை குடிநீர் பம்பின் அருகே பார்த்தால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீ சில் புகார் அளித்தால் உங்கள் குடும்பத் தையே தீர்த்துக்கட்டி விடுவோம் என வும் புரான் யாதவின் உறவினர்களும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
எனினும், அந்த சிறுமியின் தந்தை, காடி மல்ஹெர்ர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது 3பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனினும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை யாரும் கைது செய்யப் படவில்லை.