தூத்துக்குடியில் இலவச வைபை ஹாட்ஸ்பாட் திட்டம் அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வைபை ஹாட்ஸ்பாட் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பிஎஸ்என்எல் பொது மேலாளர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டபிஎஸ்என்எல் பொது மேலாளர் சாஜி ஜார்ஜ் தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்கூறியதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் இலவச ரோமிங்திட்டத்தை கடந்த 15ம் தேதிமுதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் போஸ்ட்பெய்டு மற்றும்பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரோமிங்கின் போது இன்கமிங் கால்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதனால் ஒரு தேசம் ஒரு நம்பர் கனவு நனவாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைபை ஹாட்ஸ்பாட்களை தூத்துக்குடி விமானநிலையம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் முக்கிய இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவ உள்ளது.

இதனால் இங்கு வரும் பயணிகள் முதல் 30 நிமடங்கள் இலவசமாக உபயோகித் துக் கொள்ளலாம். அதன்பின் ஒவ்வொரு மணி நேர உபயோகத்திற்கும் 30ரூபாய் செலுத்த வேண்டும்.

பிஎஸ்என்எல் மொபைல் நெட்வொர்க கவரேஜ் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு மொபைல் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வேறு நெட்வொர்கில் இருந்து பிஎஸ்என்எல்லிற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

பிராட்பேண்ட சேவைக்கு 12628 என்ற ஹெல்ப்டெஸ்க் நம்பர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலமாகவே தங்கள் பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2.21 லட்சம் செல்போன் இணைப்புகள் உள்ளன.பிராட்பேண்ட் 17,600 இணைப்புகள் உள்ளன. இதுபோல் லேண்டலைன் இணைப்புகள் 50,000 உள்ளன.

இது மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை பொது மேலாளர்கள் புலோ மீனாசாந்தி, லெட்சுமண பெருமாள், ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

NO COMMENTS

Leave a Reply