Sunday, March 20, 2016
                                                                                                                                                                                   
Search

- search results

If you're not happy with the results, please do another search

news

தமிழக கட்சிகளுடன் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் ஆலோசனை

டெல்லியில் 5 மாநில அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மார்ச் 28ல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

கிருஷ்ணகிரியில் 9 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூர் அருகே ரூ.1.33 லட்சம் பறிமுதல்

செய்யாறு அருகே ரூ.39 லட்சம் பறிமுதல்

அமைச்சரின் நண்பர் வீட்டில் சோதனை

கோவை மாநகராட்சி 100வது வார்டு கவுன்சிலர் வேணுகோபால் என்பவர் வீட்டிலிருந்து 32 குடங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக போலீசில் 19,157 காலிப்பணியிடங்களை தேர்தலுக்கு பிறகு நிரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு. ஜூன் 15க்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது

அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் 5 கட்சிகள்: ஜெயலலிதாவுடன் நாளை சந்திப்பு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதிப் பங்கீடு: தேர்தல் பணிகளில் அதிமுக தீவிரம்

கூட்டணி பேச்சுவார்த்தை: அதிமுக தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் – நத்தம் விசுவநாதன்

ஓபிஎஸ் தலைமையில் 6 அமைச்சர்கள் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தது ஜவாஹிருல்லாவின் தனிப்பட்ட விருப்பம் – முக ஸ்டாலின்.

எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாகவி திமுக தலைவருடன் சந்திப்பு கூட்டனி குறித்து எஸ்டிபிஐ கட்சியுடன் பேச்சுவார்த்தை – முக ஸ்டாலின்.

திமுகவுடன் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை: இளங்கோவன் தகவல்

திமுக – மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி: ஜவாஹிருல்லா அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றுவதா? வைகோ கண்டனம்

மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என காத்திருக்கிறேன்: வைகோ பேட்டி

சிறுசேமிப்புக்கான வட்டியை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

அம்மாவுக்கும், அன்புமணிக்கும் இடையேதான் போட்டி: ராமதாஸ்

தேர்தலில் மாற்றத்தை மக்கள் தந்தால் முன்னேற்றத்தை பா.ம.க. தரும்: ஜெ.குரு பேச்சு

தேமுதிக தனி அணியை கைவிட்டு விட்டு மக்கள் நலக்கூட்டணிக்கு வரவேண்டும்: திருமாவளவன்

ஊழல், மதுவுக்கு எதிரான அலையில் அதிமுக, திமுக காணாமல் போகும்: முத்தரசன்

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் எந்த தொகுதிக்கும் மனு கொடுக்கவில்லை மயிலாப்பூர் தொகுதியில் போட்டி என்று வதந்தி : நடிகை குஷ்பு ஆவேசம்

கொடைக்கானலில் உள்ள இளங்கோ IAS பங்களா சமையலறையில் தீ விபத்து.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை கூடுகிறது

வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விக்கிரமராஜா புகார் மனு

கூடலூர் அருகே 10 வயது ஆண் புலி சுட்டுக் கொலை

கூடலூர் அருகே நடந்த புலி வேட்டையில் 2 போலீசார் காயம்

+2 கணிதத் தேர்வு கடினம்: சேலம் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்: பொள்ளாச்சி இளைஞர் கைது

தூத்துக்குடி அண்ணாநகரில் தண்ணீர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி காமாட்சி பிரியா உயிரிழப்பு.

உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவர் அய்யனார்
கினற்றில் விழுந்து பலி.

வேப்பூரில் பஸ் மீது கார் மோதி விபத்து: பெண் உள்பட 4 பேர் பலி

புதுக்கோட்டை:
திருமண விழாவிற்கு சென்று திரும்பும் போது சோகம்: பேருந்து மீது கார் மோதி 4 பேர் பலி

இலங்கையில் சட்டவிரோத வர்த்தகம்: 12 இந்தியர்கள் கைது

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக போராடிவந்த தீவிரவாதி ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசாரிடம் சரண்.

ஜம்மு காஷ்மீரின் பத்து மாவட்டங்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை.

ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரியில் மாவோயிஸ்ட் ஒருவர் சரண்.

ரஜினியின் ‘2–ஓ’ படம் தமிழ் பட வரலாற்றில் முதன் முறையாக ரூ.330 கோடிக்கு இன்சூரன்சு செய்யப்படுகிறது.

பிரிவினைவாத வழக்கில் பேராசிரியர் கிலானிக்கு டெல்லி கோர்ட் ஜாமின் வழங்கியது

நடிகை ரோஜா சஸ்பெண்ட் எதிரொலி: ஆந்திர சட்டசபை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு.

மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாவிட்டால் பதவி விலக தயார்: உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்க மாட்டேன்: இலங்கை அதிபர் திட்டவட்டம்

0
 • டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து 142 ரன்கள்!
 • அதிமுக, திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காது: பிரகாஷ் ஜவ்டேகர்
 • சுத்தமான ரயில் நிலையங்கள் குறித்த ஆய்வு: 9-வது இடம் பிடித்த மதுரை
 • தி.மு.க. கூட்டணி வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியீடு
 • மாவட்ட ஆட்சியர் தத்தி, அமைச்சர் தத்தி..: அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா, நண்பருடன் பேச்சு: ஆடியோ வெளியீடு
 • மௌலிவாக்கம் கட்டட இடிப்பு வழக்கு: குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
 • அரசு விளம்பரங்களில் முதல் அமைச்சர் படம் இடம்பெறலாம்: உச்ச நீதிமன்றம்

 • பொருளாதார புள்ளிவிபர மதிப்பீட்டில் ஆன்லைன் ஷாப்பிங்கை சேர்க்க மத்திய அரசு…

 • இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை

 • அரசு விளம்பரங்களில் முதல்-அமைச்சர் -கவர்னர் படங்கள் இடம் பெறலாம் சுப்ரீம்…

 • இந்தியாவின் பிரபல பிஸினஸ் ஸ்கூல்களில் சர்வதேச வேலைவாய்ப்புகள் குறைந்தது

 • ஓரினசேர்க்கை மற்றவர்களை பாதிக்காதவரையில் கிரிமினல் குற்றமாக கருதப்பட கூடாது -…

 • குதிரையின் காலை உடைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி டேராடூனில் கைது

 • 2019–ம் ஆண்டிற்குள் மராட்டியம் வறட்சியற்ற மாநிலமாக மாற்றப்படும் பொருளாதார ஆய்வு ..

 • சூரத், ராஜ்கோட் சுத்தமான ரெயில் நிலையங்கள், கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு…

 • அமித் ஷாவுடன் மெகபூபா சந்திப்பு காஷ்மீரில், மீண்டும் அரசு அமைப்பதில் தீவிரம்

 • சுப்ரீம் கோர்ட்டில் சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கு வளர்ப்பு மகன் திருமண…

 • ரூ.9 ஆயிரம் கோடி மோசடி: விஜய் மல்லையாவிடம் இருந்து ஒரு பைசா பாக்கி இல்லாமல்…

 • இணையதள செல்வாக்கு பிரதமர் மோடிக்கு முதலிடம் ‘டைம்’ ஏடு கணிப்பு

 • ‘‘தீவிரவாதத்துக்கு எதிரான போர், எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல’’ இஸ்லாமிய…

 • ஆந்திர சட்டசபையில் இருந்து நடிகை ரோஜா இடைநீக்கத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது

சுற்றுலாவாசிகளின் சொர்க்க புரியாக திகழும் சிங்கப்பூர் மனம்கவரும் சுர்சாக அனுபவத்தை சுற்றுலா வருபவர்களுக்கு வாரி வழங்குகிறது. என்றென்றும் இளமையுடன், புதுப்பொலிவுடன் திகழும் சிங்கப்பூர் பயண அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு புதிய அற்புதமான அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு புதிய அற்புதமான வாய்ப்பை டைகர்ஏர் நிறுவனம் வழங்கியுள்ளது.

சிங்கப்பூரின் பொன்விழா  இந்தியா மற்றும் சிங்கப்பூரிக்கிடையே 50 ஆண்டு நல்லுறவை கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் சுற்றுலா கழகத்துடன் இணைந்து டைகர் ஏர் நிறுவனம் சிறந்ததோர் பயண வாய்ப்பை வழங்குகிறது.

ஐந்து இந்திய நகரங்களிலிருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து டைகர் ஏர் விமானங்களிலும் 50 % கட்டணம் தள்ளுபடி என அறிவித்துள்ளது.

சென்னை, திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி நகரங்களிலிருந்து பயணம் சியும் பயணிகள் இச்சிறப்பு சலுகையை ஜூலை 7 முதல் 15 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து பெறலாம். பயணம் செய்யக்கூடிய காலம் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 6 தேதி 2015 வரையில் ஆகும்.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல ஒருவழி பயனகட்டணம் என்பது ரூ 3799இல் தொடங்குகிறது. அனைத்து திரும்புகின்ற கட்டணம் ரூ. 7999 என்றவாறு உள்ளது.

இத்துடன் பொன்விழா கொண்டாட்டத்தின் அங்கமாக சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளும் பயணிக்க பிரத்யோக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டலில் தங்குவதற்கான சலுகை மற்றும் ஷாப்பிங் ஆப்பர்கள்,  முன்னுரிமை சலுகைகள் சிங்கப்பூரை உடனே காண தூண்டும் அளவிற்கு வழங்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வருமை புரிவோர் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் தற்போது இந்திய பயணிகள் சிங்கப்பூரை கண்டுகளிக்க டைகர் ஏர் நிறுவனம் சிறந்ததோர் யைப்பை வழங்கியுள்ளது. ஏராளமான ஷாப்பிங், கண்கவரும் பயணங்கள், சுவைமிகு உணவுகள் விருப்பமிகு விளையாட்டு என சிங்கப்பூரில் உற்சாகமாய் பயணிக்க ஏற்ற தருணம் இதுவே. டைகர் ஏர் விமானத்தில் சலுகை கட்டணத்தில் பயணிப்போம், சந்தோஷமான பயண அனுபவத்தை பெறுவோம்.

போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் அவர்கள் உடலில் கண்காணிப்பு கமெராவை பொருத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

போக்குவரத்து நெரிசலில் திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுக்கவும், வாகன ஓட்டிகளிடமிருந்து பொலிசார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும் பொலிசார் உடலில் கமெராவை பொறுத்தவுள்ளனர்.

மேலும், அந்த கமெராவில் பதிவாகும் காட்சிகள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் ஜிபிஆர்எஸ் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது.
1991-1996 காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கடந்த மே 11ம் திகதியன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.

தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் இன்று ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மற்றும் 7 பினாமி நிறுவனங்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து இம்மனுவை அன்பழகன் தாக்கல் செய்துள்ளார்.

மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0

ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த மனுவில் குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

1223 மற்றும் 1453 வது பக்கங்கள் வெறுமையாக உள்ளதாகவும், அசல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல் தகவல் அறிக்கையின் வடிவம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மனுத் தாக்கல் செய்யப்பட்ட தேதி குறிபிடப்படவில்லை என்றும் பதிவாளர் குறிபிட்டுள்ளார். இதையடுத்து, இந்த குறைபாடுகளை சரிசெய்து புதிய மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை, கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ளது.

0

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்றால் மற்ற நாடுகளின் கப்பல்கள் அனுமதி அளிப்பது ஏன்? என்று இந்திய அரசுக்கு சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ  கேள்வி எழுப்பி உள்ளது. சீன அரசு தனது கடற்படையை விரிவுபடுத்தி வருகிறது.

இது குறித்து சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ இந்திய பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியா சொந்தம் கொண்டாடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கடல் எல்லை பகுதி என்பது அனைவருக்கும் சமம். இதனை இந்தியா சொந்தம் கொண்டாட முடியாது. இந்திய கடல் பகுதியில் உள்ள கடைக்கோடி பகுதி இந்தியாவிற்கு சொந்தம் என்றால் அதற்குள் ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்ரேலியா நாட்டுக்கு சொந்தமான  கடற்படைகள் செல்ல அனுமதித்தது ஏன்? இதனை இந்தியா விளக்க முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

0

நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு சகலரும் விடுத்த கோரிக்கையை நான் நிராகரிக்கமாட்டேன்.

நாட்டுக்காகவும் தாய் மண்ணுக்காகவும் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நான் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

அந்த அடிப்படையில் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காலை, மெதமுலனையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இன்று நடைபெற்ற எசல பௌர்ணமி தின தர்மதேசனைக்கு பின்னர், அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

மெட்ரோவில் பயணம் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல் – திருமாவளவன்

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணத்தை மேற்கொண்டார்.

பயணத்தை மேற் கொண்ட திருமாவளவன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது “வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கு இது போன்ற ரயிலில் பயணம் செய்யும் வேளை நம் ஊரிலும் இது போல சேவையினை பெற்றுக்கொள்ள முடியாத என எதிர்பார்த்திருக்கிறோம். தற்போது நம் ஊரிலே வெளிநாடுகளுக்கு இணையாக இந்த சேவை வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதோடு வாகன நெரிசலையும் குறைக்கும் வகையிலும் இது அமையும் எனவும்,

மேலும் தெரிவிக்கையில் முக்கியமாக ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 40 ரூபாய் அறவிடப்படுகிறது. அதை குறைத்து 20 ரூபாய் என்றால் இன்னும் நன்றாக இருக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டணத்தை குறைக்க வலியுறுத்துகிறது.

மற்றும் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையே தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது மற்றைய பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்துகிறது. காரணம் சென்னையை பொறுத்தவரை அதிகமாக வாகன நெரிசல் ஆகிறது ஆதலால் மெட்ரோ ரயில் வரும் பட்சத்தில் இதனை கணிசமான அளவு குறைக்க வாய்ப்பு உள்ளது என அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

Sky Bet by bettingy.com