“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு

natpathikaram 79ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ நட்பதிகாரம் – 79“ இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத் நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார்.

கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.

ஒளிப்பதிவு – R.B.குருதேவ் / இசை – தீபக் நிலம்பூர்
எடிட்டிங் – சாபு ஜோசப். இவர் சென்ற வருடம் தேசிய விருது வென்றவர்.
பாடல்கள் – கபிலன், ரவிச்சந்திரன்
நடனம் – ராஜூசுந்தரம், பிருந்தா, விஜி
தயாரிப்பு – D.ரவிகுமார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ரவிச்சந்திரன்.

படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்… இந்த படம் நான் இயக்கிய மஜ்னு, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேலை, உற்சாகம் போன்ற படங்களிலிருந்து இது மாறுபட்டது. நட்பின் பெருமையை சொல்லும் படம் இது.
நட்பதிகாரம் படத்திற்காக சமீபத்தில் தேவா பாடிய பாடலான “ சொல்லு சொல்லு சொல்லம்மா – நீ  உண்மை உண்மை சொல்லம்மா “ என்ற பாடல் காட்சியில் ராஜுசுந்தரம் மற்றும் கதாநாயகர்களான ராஜ்பரத் – அம்ஜத், மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆடிப்பாடிய காட்சிகள் படமாக்கப் பட்டது.

மிக பிரமாண்டமான முறையில் “ நட்பதிகாரம் -79 “ படம் உருவாகிறது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குஷிப்படுத்தும் படமாக இது இருக்கும்.  விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் ரவிச்சந்திரன்

NO COMMENTS

Leave a Reply