மாவட்ட ஆட்சியராவதே லட்சியம்: இரண்டாம் இடம் பிடித்த விக்னேஷ்

0 33

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ்வரன் மாவட்ட ஆட்சியராவதே லட்சியம் என்று கூறியுள்ளார்.

மாநில அளவிலும், ஈரோடு மாவட்ட அளவிலும் சாதனை படைத்துள்ள விக்னேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சிறப்பான இடத்தைப் பெற ஊக்கம் அளித்த பள்ளிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், ஐஏஎஸ் படித்து மாவட்ட ஆட்சியராகி, ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

Leave a Reply