CLOSE ENGLISH | தமிழ்
Monday, June 29, 2015
                                                                                                                                                                                   
  Authors Posts by A2Z EDU

  A2Z EDU

  19 POSTS 0 COMMENTS

  0

  புறாச் சத்தம், புறச் சத்தம் என்று எதுவுமே கேட்காத புறநகர் பகுதியில் அமைந்த அந்த வீட்டில் ஓசைக்கு இடமில்லை. கணவன் – மனைவிகூட சைகையில்தான் பேசிக் கொள்கிறார்கள். மயான அமைதி என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால் மயானத்தில்கூட ஏதாவது சத்தம் இருக்கலாம். அந்த வீட்டில் அதைவிட அமைதி நிலவும். காரணம் வேறொன்றுமில்லை. அந்த வீட்டில் ஒரு மாணவி பிளஸ்2 படிக்கிறாள் . அதுதான் காரணம். தேர்வு நேரங்களில் இதுபோல பல வீடுகள் ஒலிபுகாக் கூடுகளாக மாறுகின்றன.

  அதே நேரம் “சார்! என் பையன் படிக்கும்போது டிவியில பாட்டு கேட்டுக்கிட்டே படிக்கிறான். இது தப்பான பழக்கம்னு எடுத்துச் சொல்லுங்க” – இதுபோல பல பெற்றோர்கள் என்னிடம் குறைபட்டுக் கொள்கின்றனர். இப்போது வரும் பாடல்களைக் கேட்கும்போது, பாட்டு கேட்பதே கெட்டபழக்கம்தான் என்று சொல்லக் கூடிய நிலைமை உள்ளது. அது வேறு விஷயம். படிக்கும்போது எந்தவிதமானப் புறத்தூண்டுதல்களும் இல்லாமல் இருக்க வேண்டுமா என்பதைக் கொஞ்சம் அலசுவோம்.

  பொதுவாக, நல்ல நினைவுத் திறனுக்கு கவனம் மிக முக்கியம். ஆனால் கவனிக்கும் திறன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறது. மூளையின் இயக்கங்கள் எண்ணிப்பார்க்க இயலாத வகையில் பிரமிக்க வைப்பவை. ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களைச் சர்வ சாதாரணமாகக் கையாளும் அஷ்டாவதானிகள் தொடங்கி நூறு விஷயங்களைக் கையாளும் சதாவதானிகள் என்று நம்முன் உதாரணங்கள் ஏராளம்.

  சிலருக்கு எந்தவிதப் புறத்தூண்டுதலும் இல்லையென்றால் விழிப்புணர்வு (arousablity) குறைந்துவிடுகிறது. ஓசைகளே இல்லாமல் இருந்தால் தூக்கம் வருகிறதல்லவா அது போல. இவர்களுக்குப் புறச்சத்தம் தூண்டுவதால் கவனம் இன்னும் கூர்மையடைகிறது. பின்னணியில் ஏதேனும் இசை அல்லது ஓசை இருந்தால் இவர்களால் நன்றாகப் படிக்க முடிகிறது.

  அதே நேரம் விழிப்புணர்வைத் தூண்டுவது வேறு சிலருக்குக் கவனச் சிதறலை உண்டாக்குகிறது. மேலும் டிவியில் வரும் பாடல்கள் அல்லது இசை வெறும் ஓசை என்ற அளவில் இல்லாமல் அந்தப் பாடல்கள், இசை, திரைப்படம் தொடர்பான நினைவுகளைத் தூண்டிவிட்டால் சிலருக்கு நினைவுத்திறன் பாதிக்கப்படும்.
  எனவே இந்த விஷயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அவரவருக்கு வசதியானதை அனுமதிப்பதே சரி. அதே நேரம், அளவுக்கு அதிகமான தூண்டுதல் எதிர்மறையான விளைவை உண்டாக்கும். பைக் ஓட்டிக்கொண்டேதான் படிப்பேன் என்றெல்லாம் சொன்னால் கண்டிக்கத்தானே வேண்டும்!

  0

  சென்னை அமிர்தாவின் தலைவர் பூமிநாதன்  அவர்களுடன்  ஒரு நேர்காணல்

  கே: சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட்டை எப்போது ஆரம்பித்தீர்கள்? அதன் வளர்ச்சி பற்றி கூறுங்கள்.

  ப: சென்னை அமிர்தா 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாம்பரத்தில் முதல் கிளையுடன் தொடங்கப்பட்ட எங்கள் கல்வியகத்தின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து இன்று தாம்பரம், தி.நகர், பெரம்பூர், மௌன்ட் ரோட், ஓ எம் ஆர் சாலை ஆகிய இடங்களில் 5 கிளைகளாக விரிந்து சிறப்பாக இயங்கி வருகிறது.

  கே: ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வியை கொடுப்பதற்கான நோக்கம் என்ன?

  ப: நான் ஒரு பொறியியல் பட்டதாரியானாலும்  வேலை பார்த்தது ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட்டில் நிர்வாக துறையில் தான். உணவுத்துறையில் உலகெங்கிலும் எவ்வளவு வாய்ப்புகள் மாணவர்களுக்கு இருக்கிறதென்பது எனக்கு நன்கு தெரியும். உலகமயமாக்கல் காரணமாக, பயணங்கள் பெருகி விட்டன. உணவு மற்றும் தங்கும் வசதிக்காக ஹோட்டல்களின்  எண்ணிக்கையும் வகைகளும் பெருகியுள்ளது. இந்த வாய்ப்புகளை  பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் தரமான கல்வியும் சிறந்த பயிற்சியும் தேவை. அதனாலேயே தேவைக்கேற்றாற் போல் பாடத்திட்டங்களை வகுத்து இத்துறைக்கான கல்வியை வடிவமைத்துள்ளோம்.

  கே: பத்தாவது 12வது வகுப்பில் தோல்வியடைந்தவர்களும் சேரலாம் என்கிறீர்களே  இதனால் இத்துறை கல்வியில் தரம் குறைந்து விடாதா ?

  ப: பாடங்களை படித்து ஒப்பித்து மதிப்பெண் வாங்குபவர்கள் மட்டுமே புத்திசாலிகள் இல்லையே. ஹோட்டல் மேனேஜ்மென்ட் பணிக்கு, சூழலுக்கு ஏற்ப துரிதமாய் செயல்படும் அறிவு ,குறிப்பறிந்து செயல்புரியும் பண்பு, இன்முகம், சகிப்புத்தன்மை,மொழியறிவு, பல கலாச்சாரங்களையும் உணவு முறைகளையும் கற்றுக் கொள்ளும் விருப்பம், எதையும் புதிது புதிதாய் செய்து பார்க்கும் ஆர்வம் போன்றவைகள் தான் தேவை. இவற்றை பெறுவதற்கு ஆர்வமும் உழைப்பும் மட்டும் மாணவர்களிடம் இருந்தால் போதும். சிறப்பான பயிற்சிகள் மூலம் அவர்களை பட்டை தீட்டி விடலாம். எங்கள் கல்வி நிலையத்தில் உள்ள ‘மாதிரி’ கட்டமைப்புகள் மட்டுமின்றி சென்னையில் அதிக எண்ணிக்கையிலும் பல வகைகளிலும் 2,3,5 மற்றும் 7 நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்கள், க்ளப் ஹவுஸ்கள் கார்ப்ரேட் மருத்துவமனைகள் என்று பல நிலைகளில் பயிற்சியளிக்கவும் பணியில் அமர்த்தவும் நிறைய வசதிகள் உள்ளன. அதனால் தான் சென்னை அமிர்தாவின் பாடத்திட்டத்தை 90% பயிற்சி வகுப்புகள் என்று வடிவமைத்துள்ளோம்.

  கே:  படிப்பிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாணவர்களையும் கிராமப்புற மாணவர்களையும் நீங்கள் சேர்ப்பது எதற்காக.

  ப: ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மாணவர்கள் பத்தாவது மற்றும் பண்ணிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர். பொருளாதார வசதி உள்ளவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் ஐ ஐ டி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து  விடுகின்றனர். இந்த எண்ணிக்கை போக கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் பரீட்சையில் தவறியவர்கள், படிக்காத மற்றம் வழிகாட்டத் தெரியாத பெற்றோர்களை உடையவர்களும் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் தான். ஒவ்வொரு வருடமும் தேர்வு முடிவு வெளியானவுடன் இப்படிப்பட்ட மாணவர்கள் தவறான முடிவுக்கு சென்றுவிடும் செய்திகளை நிறைய பார்க்கிறோம். திறமையான, நிறைய மதிப்பெண் உள்ள மாணவர்களை சேர்த்துக் கொண்டு அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதை விட பின் தங்கிய மாணவர்களுக்கு ஏற்ற தரமான கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கி அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதே சிறந்தது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருந்தது. அதன் விளைவாய் துவங்கியது தான் சென்னை அமிர்தா.

  கே: நீங்கள் அதிகளவில் விளம்பரம் செய்வதாக பேசப்படுகிறதே. அதற்கு உங்கள் பதில்?

  ப: ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் உள்ள பிரகாசமான வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை பட்டி தொட்டிகளுக்கும் குக்கிராமங்களுக்கும் எப்படி எடுத்துச் செல்வது? அதற்காகத்தான் ஊடகங்களில் சாமானியர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் விளம்பரங்களை, மரியாதைக்குரிய சினிமா நட்சத்திரங்களைக் கொண்டு தயார் செய்து எடுத்துச் சென்றேன். இன்று எங்கள் இன்ஸ்டிட்யூட்டில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததை எண்ணி மகிழ்வதுடன் அவர்களின் அனுபவத்தை நன்றியுடன் பதிவும் செய்துள்ளனர். படிக்கும் போதே பகுதிநேர வேலையில் சம்பாதிக்கலாம் என்றால் தானே பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் மேற் படிப்பிற்கு வருவார்கள்? இந்த ஆண்டு மட்டும் நாங்கள் 2696 பேருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளோம்.

  கே: படிக்கும் போதே சம்பாதிக்கலாம் என்று கூறியதை நீங்கள் சாத்தியமாக்கியுள்ளீர்களா?

  ப: ஆம் நாங்கள் விளம்பரத்தில் கூறிய எல்லாவற்றையுமே சாத்தியமாக்கியுள்ளோம். மாணவர்களின் பிளேஸ்மென்ட் பிரிவு என்பதே 75 பணியாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இவர்கள் மாணவர்களின் தேவை மற்றும் திறமைக்கேற்ப அவர்களை பகுதி நேர வேலைக்கு தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர். எங்கள் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும் பல மாணவர்கள் இரண்டாவது செமஸ்டர் முதல் தங்களின் ஃபீசை அவர்களின் சம்பாத்தியம் மூலமே கட்டிக்கொள்கின்றனர். இந்தியாவில் உணவுத் துறையில் வளர்ச்சியினால் அதிகளவு மாணவர்களை பயிற்சிக்காகவும் பகுதி நேர வேலைக்கும் அனுப்புவதால் அதிகளவில் மாணவர்கள் படிக்கும் போதே சம்பாதிக்கின்றனர்.

  கே: தனியார் கல்வி நிறுவனம் ஆகிய நீங்கள் எப்படி பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கேற்ற கல்வியை கொடுக்க முடியும்?

  ப: சென்னை அமிர்தாவில் குறைவான கட்டணம் கொண்ட சான்றிதழ் படிப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு (எ ம் பி ஏ) வரையில் அளிக்கிறோம். இந்திய பல்கலைக்கழகங்கள் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வரையில் பல பல்கலைக்கழங்களுடன் இணைந்து இப்படிப்புகளை நடத்துகிறோம். அதனால் அவரவர் வசதிக்கேற்ற படிப்புகளை எங்களால் கொடுக்க முடிகிறது. உள்நாட்டிலேயே படிக்கவும் வெளிநாடு சென்று படிக்கவும் ஏற்ற வாய்ப்புகளை எங்களால் அளிக்க முடிகிறது.

  கே: சென்னை அமிர்தாவில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளும், பயிற்சிக் கூடங்களும் இருக்கிறதா?

  ப: எங்களின் எல்லா கிளைகளிலும் ஏசி வகுப்பறைகள், நிகழ்வுகளை கவனிக்க கேமராக்கள், “மாதிரி” அறைகளாக படுக்கையறை வரவேற்பறை, குளியலறை, ரெஸ்டாரென்ட், மதுபான அரை, பல நாட்டு உணவுகள் சமைப்பதற்கேற்ற வசதிகள் கொண்ட சமையலறை போன்றவைகளை அமைத்துள்ளோம். விளம்பரத்தில் ராதிகா அவர்கள் வரும் காட்சி சென்னை அமிர்தாவில் படமாக்கப்பட்டது தான் என்பது எங்கள் கல்வியகத்தை  பார்த்தவர்களுக்குத் தெரியும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்கள் கல்வியகத்தை பார்வையிட்ட பின் சேர்வதை நாங்கள் எப்பொழுதுமே ஊக்குவித்துள்ளோம்.

  கே: நீங்கள் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் தருவதாக கூறப்படுகிறதே அதைப்பற்றி ……

  ப: நாங்கள் விளம்பரத்தில் கூறிய எதுவுமே சாத்தியமில்லாததோ, மந்திரத்தில் நடக்கக்கூடியதோ, எந்த கல்வி நிலையத்தாலும் செய்ய முடியாததோ இல்லை. மாணவர்கள் மேல் அக்கறை உள்ள எந்த கல்வி நிலையமும் செய்யக் கூடியது தான். ஆனால் எங்கள் வளர்ச்சி மேல் பொறாமை கொண்ட சில விஷமிகள் அவதூறான செய்திகளை பரப்பி எங்கள் நிறுவனத்தை தாக்குவதுடன் எங்கள் மாணவர்களின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி குழப்பி வருகின்றனர். மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என்று செயல்புரியும் போது தடைகளும் வரத்தான் செய்யும் சமூக பொறுப்போடும், நல்ல நோக்கத்தோடும் தொடர்ந்து எங்கள் கல்வி நிறுவனத்தை மேம்படுத்தி நடத்தி வருவோம். இதற்கு ஊடகங்கள்,கல்வியாளர்கள், சமூக அக்கறை உள்ளவர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வரவேற்கிறோம்.

  0
  499 மதிப்பெண்கள் பெற்றுமாநில முதலிடம் பெற்ற பட்டுக்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.வைஷ்ணவியை பாராட்டும் அவரது தாய்.

  `அரசுப் பள்ளி என்று ஏன் ஏளனமாகப் பார்க்கிறீர்கள். அரசுப் பள்ளிகளில் தான் தகுதியுள்ள, திறன் பெற்ற ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

  அங்கும் நன்கு பயிற்சி அளிக்கின்றனர். இது, ஒன்றும் பெரிய சாதனை இல்லை. ஆசிரியர்கள் சொல்லித்தருவதை ஆர்வமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்டுப் படித்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்கலாம்.

  நான் 5-ம் வகுப்பு வரை தனியார் ஆங்கில வழிப் பள்ளியில்தான் படித்தேன். விரும்பித்தான் அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்ந்தேன். இங்கு சுதந்திரமான சூழல் இருந்ததால், தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்திருக்கலாமே என்ற ஏக்கம் ஒருநாளும் ஏற்பட்டதில்லை.” – வைஷ்ணவி

  0

  10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடத்தை பெற்றுள்ளனர். இது, தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும். தேர்வெழுதிய மாணவ-மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19ந் தேதி தொடங்கி ஏப்.10 தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவர்கள் எழுதினர். அதாவது, கடந்த ஆண்டை விட 40ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதினர்.

  இந்த தேர்வு முடிவுகளை வியாழனன்று (மே 21) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்டார்.இவ்வாண்டு தேர்வெழுதிய 5 லட்சத்து 33 ஆயிரத்து 43 பேரில் மாணவர்கள் 90.5 சதவீதத்தினரும், 5 லட்சத்து 27 ஆயிரத்து 823 பேரில் மாணவிகள் 95.4 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தத்தில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 90.7 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.தேர்ச்சி பெற்றவர்களில் 7 லட்சத்து 96 ஆயிரத்து 466 பேர் 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப் பெண்களை பெற்றுள்ளனர்.

  இந்த எண்ணிக்கையில் கடந்த ஆண்டை விட 86 ஆயிரத்து 456 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் 98.04 சதவிகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், 83.79 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற திருவாரூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.

  மாநில முதலிடம்

  முதல் மதிப்பெண்கள் மொத்தம் அரசுப் பள்ளிகள்

  499/500 41 3 பேர்

  498/500 192 6 பேர்

  497/500 540 10 பேர்

  Amirtaழில், பொழுதுபோக்கு, மருத்துவம் மற்றும் சுற்றுலா என்று உலகெங்கும் பயணங்கள் அதிகரித்துவிட்டதால் ஹோட்டல்கள், ரிசார்ட்கள் போன்றவைகள் மக்களின் தங்கும் மற்றும் உணவுத் தேவைக்காக பெருகிவிட்டன.

  இதைத்தவிர கப்பல், விமானம், மருத்துவமனைகள் போன்ற இடங்களிலும் விருந்தோம்பில் மற்றும் பராமரிப்பு பணிகள் பெருகியுள்ளன. இந்நிலை மேலும் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே இருப்பதானால் ஹோட்டல்கள், மேனேஜ்மென்ட் துறை மாணவர்களுக்கு நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அபரிமிதமான வேலை வாய்ப்பு இருக்கிறது.

  இதை கருத்தில் கொண்டு தான் நாங்கள் சான்றிதழ் படிப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்புகள் வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முன்னனி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் சேர்ந்து நடத்தி வருகிறோம்.

     படிப்பு மற்றும் பயிற்சிக்காகவும் வெளிநாடு செல்லும் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற்று படிக்கும் போதே சம்பாதிக்கவும் செய்கின்றன. படிப்பு முடிந்தவுடன் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ உடனடியாய் வேலையும் கிடைத்து விடுவதால் இவர்கள் படித்து முடிக்கும் போதே சுயமாய் கால் ஊன்றி தனக்கென வாழ்க்கையில் ஒர் ஸ்திரமான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றனர். என்று கூறுகிறார்.

  சென்னை அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்டின் தலைவர் பூமிநாதன் அவர்கள்.

  0

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ்வரன் மாவட்ட ஆட்சியராவதே லட்சியம் என்று கூறியுள்ளார்.

  மாநில அளவிலும், ஈரோடு மாவட்ட அளவிலும் சாதனை படைத்துள்ள விக்னேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சிறப்பான இடத்தைப் பெற ஊக்கம் அளித்த பள்ளிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  மேலும், ஐஏஎஸ் படித்து மாவட்ட ஆட்சியராகி, ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்று கூறியுள்ளார்.

  0

  மார்ச் 5 ஆம்  தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் தவிர 42,963 பேர் தனித்தேர்வு எழுதி உள்ளனர்.

  தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

  தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, கோவையை நிவேதா ஆகிய இருவரும் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள்.

  திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து முதலிடம் பெற்ற பவித்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  ஆரம்பம் முதல் ஆர்வமாக படித்து வந்தேன். பழைய வினாத்தாள்களையும் படித்தேன். இரவு 7. 30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அதிகாலை 3.30 க்கு எழுந்து படித்தேன். ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பே எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆரம்பம் முதல் ஆர்வமாகவும், அதிக நேரம் உழைத்ததால்தான் என்னால் முதல் இடம் பெற முடிந்தது என்றார்.

  வரும் காலத்தில் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படித்து உயர் பணிக்கு செல்ல ஆர்வமாக உள்ளேன் என்று பவித்ரா கூறியுள்ளார்.

  பவித்ராவின் பெற்றோர் ஜானகிராமன் தனியார் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

  0

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொழி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களின் பட்டியல்.

   

  அராபிக் மொழிப் பாடம்

  ஜே.எம் அஹமத் நிஷாத் – 194 – 1056 ( முதலிடம் )

  எம்.ஏ மொகமத் பார்திமா – 194 -1053 ( இரண்டாம்)

  பாளையம் நபீஷாத் அமீனா 194- 1049 (மூன்றாம் இடம்)

  பிரெஞ்ச் மொழிப் பாடம்

  கி.ஸ் ஸ்ரேஷா – 198 – 1194 (முதலிடம்)

  எஸ். பிரித்தி – 198 – 1193 ( இரண்டாம் இடம்)

  எஸ்.பார்வதி – 198 – 1193 (இரண்டாம் இடம்)

  ஆர். ரத்னா சுதாகர் – 198 – 1192 (மூன்றாம் இடம்)

  ஹிந்தி மொழிப் பாடம்

  ஏ.ஜி கிர்த்தி – 199 – 1181 (முதலிடம்)

  ஆர். ஸ்வாதி – 199 – 1069 (இரண்டாம் இடம்)

  பி. பிரக்யா – 198 – 1178 (மூன்றாம் இடம்)

  கன்னட மொழிப் பாடம்

  என்.சம்முலிங்கேஷ்வரா 192- 973 (முதலிடம்)

  எஸ். விஷ்ணு பிரியா – 190-1139 (இரண்டாம் இடம்)

  பி.திவ்யா – 190-1057 (மூன்றாம் இடம்)

  மலையாள மொழிப் பாடம்

  எம்.அர்ச்சனா – 196 -1136 (முதலிடம்)

  கே.எம். அருனிமா – 196 – 1096 (இரண்டாம் இடம்)

  அலினா சாம் – 195 – 1169 (மூன்றாம் இடம்)

  தெலுங்கு மொழிப் பாடம்

  யுவசாய்குமார் – 197 – 1175 (முதலிடம்)

  ஜி. பல்லவி – 197-1135 (இரண்டாம் இடம்)

  ஜே.சி.பால்ராஜ் – 195-1174 (மூன்றாம் இடம்)

  ஜெர்மன் மொழிப் பாடம்

  எஸ்.சாம் சுந்தர் – 197-1186 (முதலிடம்)

  சி.என் விஜய் குமார் – 196-1173 (இரண்டாம் இடம்)

  பி.வயினி சுதன் 196-1099 (மூன்றாம் இடம்)

  சாமஸ்கிருத மொழிப் பாடம்

  எஸ்.மஹாலட்சுமி – 200 -1194 (முதலிடம்)

  சி.ஆர்.ராதேஷ் – 200 – 1192 (இரண்டாம் இடம்)

  பி.சாய் விஜய ஸ்ரீ, டி மோனிகா – 200 – 1191 (மூன்றாம் இடம்)

  தமிழ் மொழிப் பாடம்

  பி.நிவேதா – 199-1192 (முதலிடம்)

  ஏ.ஆர்த்தி – 199 – 1188 (இரண்டாம் இடம்)

  பி.சுகன்யா, எம்.லாவண்யா – 199 – 1187 (மூன்றாம் இடம்)

  உருது மொழிப் பாடம்

  சி.நெல்லோபர் – 197-1102 (முதலிடம்)

  ஏ.ரபியா பார்திமா – 196 – 1078 (இரண்டாம் இடம்)

  காகிஹிசாம் முசப் – 196 – 1074 (மூன்றாம் இடம்)

  0

  சென்னை: தமிழ் மொழிப்பாடமாக இல்லாமல் ப்ரெஞ்ச் மொழியை முதல் பாடமாக படித்த சென்னை வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீஷா 1194 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

  கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி மாணவி மகாலட்சுமி 1194 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் இவர் சமஸ்கிருதப்பாடத்தை முதலாவதாக எடுத்து படித்துள்ளார். மதுரை ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பார்வதி சேலம் கிளன்னி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ப்ரீத்தி ஆகிய இருவரும் 1193 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

  இவர்கள் இருவரும் ப்ரெஞ்ச் பாடத்தை முதலிடமாக எடுத்து படித்தவர்கள். சேலம் கிளன்னி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரத்னா சுதாகர் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

  இவர் ப்ரெஞ்ச் பாடத்தை முதலாவதாக எடுத்து படித்துள்ளார். மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ராதேஷ் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் சமஸ்கிருதம் பாடத்தை முதலிடமாக எடுத்து படித்துள்ளார்.

  வேறு மொழிப்பாடம் இவர்கள் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் 1194 மதிப்பெண்கள் எடுத்தாலும் முதலிடம் பிடித்தவர்களாக கருத்தப்பட மாட்டார்கள். 1192 மதிப்பெண்கள் எடுத்த தமிழை முதல் பாடமாக எடுத்த திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா ஆகியோரே முதலிடம் பிடித்ததாக கருத்தப்படுவர். டாக்டர் படிக்க ஆசை முதலிடம் பிடித்த டி.ஏ.வி பள்ளி மாணவி மகாலட்சுமி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

  டாக்டர் ஆக ஆசை,எனவே நான் டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன் என்று கூறினார். ஆசிரியர்கள் எனக்கு உதவி செய்தனர், முதல்வர் ஆகியோர் நன்றாக உதவி செய்தனர். நான் டியூசன் எதுவும் போகவில்லை.

  என்னுடைய தாத்தா பாட்டி, அனைவருக்கும் நன்றி. வீட்டில் என்னோட பெற்றோர்கள் என்னை தொந்தரவு செய்தது இல்லை என்று கூறினார். இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மகாலட்சுமியின் தாயார், அவளுடைய வெற்றிக்கு அவளே காரணம் என்று கூறினார்.

  எந்த வேலையையும் தள்ளியே வைக்கமாட்டார்கள் என்று கூறினார் அவரது தாயார். ஆசிரியர்களின் முழு ஆதரவு கிடைத்தது என்றார். சி.ஏ படிக்க ஆசை இதேபோல மாநில அளவில் முதலிடம் பிடித்த முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீஷா சி.ஏ படிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

  மாணவியின் பெற்றோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மாணவிக்கு என்ன படிக்க ஆசையோ அதையே படிக்க வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.

  0

  தமிழகத்தில், பிளஸ் டூ எனப்படும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.

  திருப்பூர் மாவடடம் விகாஷ் வித்யாலயா பள்ளி மாணவி பவித்ரா 1192 மதிப்பெண் பெற்றுள்ளார். கோவை சௌடேஸ்வரி பள்ளி மாணவி நிவேதிதா 1192 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்கள் தமிழை முதல்பாடமாக எடுத்து படித்தவர்கள்.

  1190 மதிப்பெண்கள் பெற்று விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யா வர்ஷினி ஆகிய 4 பேர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். நாமக்கல் டிரினிட்டி பள்ளியைச் சேர்ந்த மாணவி பாரதி 1189 மதிபெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

  இந்தத் தேர்வில் மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் மாணவர்கள் 87.05 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 9410 மாணவ, மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பியலில் 124 பேரும், வேதியலில் 1049 பேரும், உயிரியலில் 387 பேரும், , தாவரவியலில் 74 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

  Sky Bet by bettingy.com