சொன்னதை செய்கிறதா சென்னை அமிர்தா?

0

சென்னை அமிர்தாவின் தலைவர் பூமிநாதன்  அவர்களுடன்  ஒரு நேர்காணல்

கே: சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட்டை எப்போது ஆரம்பித்தீர்கள்? அதன் வளர்ச்சி பற்றி கூறுங்கள்.

ப: சென்னை அமிர்தா 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாம்பரத்தில் முதல் கிளையுடன் தொடங்கப்பட்ட எங்கள் கல்வியகத்தின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து இன்று தாம்பரம், தி.நகர், பெரம்பூர், மௌன்ட் ரோட், ஓ எம் ஆர் சாலை ஆகிய இடங்களில் 5 கிளைகளாக விரிந்து சிறப்பாக இயங்கி வருகிறது.

கே: ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வியை கொடுப்பதற்கான நோக்கம் என்ன?

ப: நான் ஒரு பொறியியல் பட்டதாரியானாலும்  வேலை பார்த்தது ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட்டில் நிர்வாக துறையில் தான். உணவுத்துறையில் உலகெங்கிலும் எவ்வளவு வாய்ப்புகள் மாணவர்களுக்கு இருக்கிறதென்பது எனக்கு நன்கு தெரியும். உலகமயமாக்கல் காரணமாக, பயணங்கள் பெருகி விட்டன. உணவு மற்றும் தங்கும் வசதிக்காக ஹோட்டல்களின்  எண்ணிக்கையும் வகைகளும் பெருகியுள்ளது. இந்த வாய்ப்புகளை  பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் தரமான கல்வியும் சிறந்த பயிற்சியும் தேவை. அதனாலேயே தேவைக்கேற்றாற் போல் பாடத்திட்டங்களை வகுத்து இத்துறைக்கான கல்வியை வடிவமைத்துள்ளோம்.

கே: பத்தாவது 12வது வகுப்பில் தோல்வியடைந்தவர்களும் சேரலாம் என்கிறீர்களே  இதனால் இத்துறை கல்வியில் தரம் குறைந்து விடாதா ?

ப: பாடங்களை படித்து ஒப்பித்து மதிப்பெண் வாங்குபவர்கள் மட்டுமே புத்திசாலிகள் இல்லையே. ஹோட்டல் மேனேஜ்மென்ட் பணிக்கு, சூழலுக்கு ஏற்ப துரிதமாய் செயல்படும் அறிவு ,குறிப்பறிந்து செயல்புரியும் பண்பு, இன்முகம், சகிப்புத்தன்மை,மொழியறிவு, பல கலாச்சாரங்களையும் உணவு முறைகளையும் கற்றுக் கொள்ளும் விருப்பம், எதையும் புதிது புதிதாய் செய்து பார்க்கும் ஆர்வம் போன்றவைகள் தான் தேவை. இவற்றை பெறுவதற்கு ஆர்வமும் உழைப்பும் மட்டும் மாணவர்களிடம் இருந்தால் போதும். சிறப்பான பயிற்சிகள் மூலம் அவர்களை பட்டை தீட்டி விடலாம். எங்கள் கல்வி நிலையத்தில் உள்ள ‘மாதிரி’ கட்டமைப்புகள் மட்டுமின்றி சென்னையில் அதிக எண்ணிக்கையிலும் பல வகைகளிலும் 2,3,5 மற்றும் 7 நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்கள், க்ளப் ஹவுஸ்கள் கார்ப்ரேட் மருத்துவமனைகள் என்று பல நிலைகளில் பயிற்சியளிக்கவும் பணியில் அமர்த்தவும் நிறைய வசதிகள் உள்ளன. அதனால் தான் சென்னை அமிர்தாவின் பாடத்திட்டத்தை 90% பயிற்சி வகுப்புகள் என்று வடிவமைத்துள்ளோம்.

கே:  படிப்பிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாணவர்களையும் கிராமப்புற மாணவர்களையும் நீங்கள் சேர்ப்பது எதற்காக.

ப: ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மாணவர்கள் பத்தாவது மற்றும் பண்ணிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர். பொருளாதார வசதி உள்ளவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் ஐ ஐ டி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து  விடுகின்றனர். இந்த எண்ணிக்கை போக கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் பரீட்சையில் தவறியவர்கள், படிக்காத மற்றம் வழிகாட்டத் தெரியாத பெற்றோர்களை உடையவர்களும் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் தான். ஒவ்வொரு வருடமும் தேர்வு முடிவு வெளியானவுடன் இப்படிப்பட்ட மாணவர்கள் தவறான முடிவுக்கு சென்றுவிடும் செய்திகளை நிறைய பார்க்கிறோம். திறமையான, நிறைய மதிப்பெண் உள்ள மாணவர்களை சேர்த்துக் கொண்டு அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதை விட பின் தங்கிய மாணவர்களுக்கு ஏற்ற தரமான கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கி அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதே சிறந்தது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருந்தது. அதன் விளைவாய் துவங்கியது தான் சென்னை அமிர்தா.

கே: நீங்கள் அதிகளவில் விளம்பரம் செய்வதாக பேசப்படுகிறதே. அதற்கு உங்கள் பதில்?

ப: ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் உள்ள பிரகாசமான வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை பட்டி தொட்டிகளுக்கும் குக்கிராமங்களுக்கும் எப்படி எடுத்துச் செல்வது? அதற்காகத்தான் ஊடகங்களில் சாமானியர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் விளம்பரங்களை, மரியாதைக்குரிய சினிமா நட்சத்திரங்களைக் கொண்டு தயார் செய்து எடுத்துச் சென்றேன். இன்று எங்கள் இன்ஸ்டிட்யூட்டில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததை எண்ணி மகிழ்வதுடன் அவர்களின் அனுபவத்தை நன்றியுடன் பதிவும் செய்துள்ளனர். படிக்கும் போதே பகுதிநேர வேலையில் சம்பாதிக்கலாம் என்றால் தானே பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் மேற் படிப்பிற்கு வருவார்கள்? இந்த ஆண்டு மட்டும் நாங்கள் 2696 பேருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளோம்.

கே: படிக்கும் போதே சம்பாதிக்கலாம் என்று கூறியதை நீங்கள் சாத்தியமாக்கியுள்ளீர்களா?

ப: ஆம் நாங்கள் விளம்பரத்தில் கூறிய எல்லாவற்றையுமே சாத்தியமாக்கியுள்ளோம். மாணவர்களின் பிளேஸ்மென்ட் பிரிவு என்பதே 75 பணியாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இவர்கள் மாணவர்களின் தேவை மற்றும் திறமைக்கேற்ப அவர்களை பகுதி நேர வேலைக்கு தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர். எங்கள் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும் பல மாணவர்கள் இரண்டாவது செமஸ்டர் முதல் தங்களின் ஃபீசை அவர்களின் சம்பாத்தியம் மூலமே கட்டிக்கொள்கின்றனர். இந்தியாவில் உணவுத் துறையில் வளர்ச்சியினால் அதிகளவு மாணவர்களை பயிற்சிக்காகவும் பகுதி நேர வேலைக்கும் அனுப்புவதால் அதிகளவில் மாணவர்கள் படிக்கும் போதே சம்பாதிக்கின்றனர்.

கே: தனியார் கல்வி நிறுவனம் ஆகிய நீங்கள் எப்படி பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கேற்ற கல்வியை கொடுக்க முடியும்?

ப: சென்னை அமிர்தாவில் குறைவான கட்டணம் கொண்ட சான்றிதழ் படிப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு (எ ம் பி ஏ) வரையில் அளிக்கிறோம். இந்திய பல்கலைக்கழகங்கள் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வரையில் பல பல்கலைக்கழங்களுடன் இணைந்து இப்படிப்புகளை நடத்துகிறோம். அதனால் அவரவர் வசதிக்கேற்ற படிப்புகளை எங்களால் கொடுக்க முடிகிறது. உள்நாட்டிலேயே படிக்கவும் வெளிநாடு சென்று படிக்கவும் ஏற்ற வாய்ப்புகளை எங்களால் அளிக்க முடிகிறது.

கே: சென்னை அமிர்தாவில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளும், பயிற்சிக் கூடங்களும் இருக்கிறதா?

ப: எங்களின் எல்லா கிளைகளிலும் ஏசி வகுப்பறைகள், நிகழ்வுகளை கவனிக்க கேமராக்கள், “மாதிரி” அறைகளாக படுக்கையறை வரவேற்பறை, குளியலறை, ரெஸ்டாரென்ட், மதுபான அரை, பல நாட்டு உணவுகள் சமைப்பதற்கேற்ற வசதிகள் கொண்ட சமையலறை போன்றவைகளை அமைத்துள்ளோம். விளம்பரத்தில் ராதிகா அவர்கள் வரும் காட்சி சென்னை அமிர்தாவில் படமாக்கப்பட்டது தான் என்பது எங்கள் கல்வியகத்தை  பார்த்தவர்களுக்குத் தெரியும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்கள் கல்வியகத்தை பார்வையிட்ட பின் சேர்வதை நாங்கள் எப்பொழுதுமே ஊக்குவித்துள்ளோம்.

கே: நீங்கள் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் தருவதாக கூறப்படுகிறதே அதைப்பற்றி ……

ப: நாங்கள் விளம்பரத்தில் கூறிய எதுவுமே சாத்தியமில்லாததோ, மந்திரத்தில் நடக்கக்கூடியதோ, எந்த கல்வி நிலையத்தாலும் செய்ய முடியாததோ இல்லை. மாணவர்கள் மேல் அக்கறை உள்ள எந்த கல்வி நிலையமும் செய்யக் கூடியது தான். ஆனால் எங்கள் வளர்ச்சி மேல் பொறாமை கொண்ட சில விஷமிகள் அவதூறான செய்திகளை பரப்பி எங்கள் நிறுவனத்தை தாக்குவதுடன் எங்கள் மாணவர்களின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி குழப்பி வருகின்றனர். மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என்று செயல்புரியும் போது தடைகளும் வரத்தான் செய்யும் சமூக பொறுப்போடும், நல்ல நோக்கத்தோடும் தொடர்ந்து எங்கள் கல்வி நிறுவனத்தை மேம்படுத்தி நடத்தி வருவோம். இதற்கு ஊடகங்கள்,கல்வியாளர்கள், சமூக அக்கறை உள்ளவர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வரவேற்கிறோம்.

Share

NO COMMENTS

Leave a Reply