விருந்தோம்பல் துறையில் விண்ணை தொடும் வாய்ப்புகள்

0

விருந்தோம்பல் என்பது சிரித்த முகத்துடன் வரவேற்பது, வந்தவர் குறிப்பறிந்து அவர்கள் தேவையை முகம் சுளிக்காமல் பூர்த்தி செய்வது, அறுசுவை உணவை நளபாகத்தில் தயார் செய்வது அதை சாப்பிடத்தூண்டும் அழகில் பரிமாறுவது ஆகும்.

மேற் கூறிய சேவைகளை அளிக்க மாணவர்களை தயார் செய்யும் ஒரு படிப்பே ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வியாகும்.

இக்கல்வியை வழங்குவதில் சிறந்து விளங்கும் சென்னை அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டிள் நிறுவனத்தலைவர் பூமிநாதன் தங்கள் கல்வியகத்தைப்பற்றி கூறியது பின் வருமாறு,இங்கு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தின் 75 முதல் 90 சதவிகிதம் செய்முறைப் பயிற்சியாக கொடுக்கிறோம். உள்நாடு மற்றும் வெளிநாடு மக்களிள் பழக்க வழக்கங்கள், தோரணைகள், மொழிகள், அவர்களின் உணவுத் தேவைகள் மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் எங்கள் மாணவர்கள் கற்றுத் தேர்கிறார்கள். எங்கள் மையத்தில் சேர்ந்த உடனேயே மாணவர்கள் சர்வதேச ஹோட்டல்களில் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். பின்பு அந்த ஹோட்டல்களிலேயே பகுதி நேர வேலையையும் பார்க்க தொடங்குவதால் படிக்கும் போதே சம்பாதிக்கவும் செய்கிறார்கள். படித்து முடிக்கும் முன்பாகவே வேலையையும் பெற்று விடுகிறார்கள்.

எங்கள் மாணவர்களுக்கு படிப்பை குளிர்சாதன வசதி கொண்டு நவீன வகுப்பறைகள் கொண்டும், பயிற்சிகளை சர்வதேச தரத்திலான ‘மாதரி’ நிட்சத்திர ஹோட்டல் அறைகள் மூலமும் எங்கள் மையத்தில் அளிக்கிறோம். அது மட்டுமின்றி அவர்களுக்கு ஆளுமை திறனூக்கப்பயிற்சி, நேர மேலாண்மை, மக்கள் தொடர்பு, பன்மொழிப் புலமை போன்ற தகுதிகளை வளர்க்கும் பயிற்சிகளையும் வழங்குகிறோம் என்று கூறி முடித்தார் பூமிநாதன் அவர்கள்.

Share

NO COMMENTS

Leave a Reply